வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கிண்ணியாவின் முதல்வர்கள் 10:முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்

பயனாளர் தரப்படுத்தல்: / 6
குறைந்தஅதி சிறந்த 

478கிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது .தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08.15 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

 தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும். உயர்கல்வியை அக்காலத்தில் சீனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். கிண்ணியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக முதல் நியமனம் பெற்றார். அதனையடுத்து 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார்.

கிண்ணியா, கொழும்பு, கந்தளாய் போன்ற பிரதேச பாடசாலைகளில் இவர் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.

தான் கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 1979ஆம் ஆண்டு வர்த்தகப்;பட்டடதாரியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் வர்த்தகப்பட்டதாரி என்ற பெருமையைப் பெறுகின்றார்.

இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் 1960 ஆம் ஆண்டு சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்து 'சீலதரன்' என்ற புனைபெயரில் உலாவந்தார். நாவல், குறுநாவல், கவிதை என்பவற்றிலும் ஆர்வம் காட்டினார். 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 02 நாவல்களையும், 05 குறுநாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு 'பச்சைப் பாவாடை' என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளது. இவரது இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலும் வறுமை, திறமை, முன்னேற்றம் போன்ற கருப் பொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமன்றி இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

கிண்ணியாவின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் 2008 ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழாவில் 'இலக்கிய வேந்தர்' பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தேடல் :

ACM-Mussil


 ஏ.சி.எம். முஸ்இல் 

Share
comments

Comments   

 
+1 #1 Trinco ahmath 2014-10-02 07:00
Roomis, neenga unga vaapaada photovai ungalodu serththu poda oththukka maattinga pola
Quote | Report to administrator
 
 
0 #2 JosephGer 2018-03-12 11:57
With thanks, Good stuff.

dividere una compressa di cialis generic cialis what if i take two cialis cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGer 2018-03-13 12:06
Truly tons of terrific info!

cialis e' un vasodilatatore cialis prices uso correto do cialis buy cialis online: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:5170

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:9277

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:8530

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 207 guests online


Kinniya.NET