வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கிண்ணியாவின் முதல்வர்கள் - 11:மாகாண சபையில் முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி

பயனாளர் தரப்படுத்தல்: / 11
குறைந்தஅதி சிறந்த 

hasan-ashariகிண்ணியாவிலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி அவர்களாவார். இவர் மர்ஹூம்களான சதக்கு லெப்பை – கதீஜா பீவி தம்பதிகளின் தலைமகனாக 1950.02.17 இல் குறிஞ்சாக்கேணியில் பிறந்தார்.

 தனது ஆம்பக் கல்வியை குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். அதன் பின் விளையாட்டாசிரியராக நியமனம் பெற்று யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப் பட்டார்.


இதன்பின் தனது பதவியைத் துறந்து பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்துக்குச் சென்று அங்கு பட்டம் பெற்றார். இதனால் இவரது பெயருக்கு பின்னால் அஸ்ஹரி என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது.

பல்துறை ஆற்றல் கொண்ட இவர் தனது சொல்லாட்சியின் மூலம் மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். நாடறிந்த உலமாவான இவர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாயல் மிம்பர்களில் ஜும்ஆப் பிரசங்கம் செய்துள்ளார். இதன் மூலம் பல பிரமுகர்களின் தொடர்பு இவருக்கு இருந்தது.

பேருவளை ஜாமியா நளீமியாவில் விரிவுரையாளராக சிறிது காலம் கடமையாற்றிய இவர் பின்னர் அதனைக் கைவிட்டு இரத்தினக் கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார் இதனால் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் செல்வாக்கு மிக்க ஒருவராக இவர் மாறினர்.

பல்வேறு சமுகப் பணிகளில் ஈடுட்டு வந்த இவர் கண்டி ஒராபி பாஷா மன்றத்தின் முதல் பணிப்பாளராக பணியாற்றினார். அஸீஸா பவுண்டேசன், ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஆகியவற்றை நிறுவி அதன் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வந்தார்.

ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் சகல பகுதிகளையும் சேர்ந்த ஏழைகள் மற்றும் விதவைகளைத் தேடி உணவுப் பொதிகள் வழங்கி அவர்களுக்கு உதவும் திட்டத்தை அமுல் படுத்தி வந்தார் அதேபோல ஹஜ் காலத்தில் உழ்ஹிய்யா வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தி வந்தார். இதனால் மாவட்டத்தின் சகல மூலைமுடுக்குகளிலும் இவரது நாமம் நிலை நிறுத்தப்பட்டது

குறிஞ்சாக்கேணியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக சிறுவர் இல்லங்களை நிறுவி அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வறிய சிறுவர்களை உள்வாங்கி பராமறித்து வந்தார.; இந்த இல்லங்கள் இன்றும் தலைநிமிர்ந்து காட்சியளிக்கின்றன.

சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் 'மனிதன் புனிதாக' என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. கூடுதலாக விமானப் பயணங்களிலேயே அதிக விடயங்கள் எழுதியுள்ளதாக அவர் ஒரு முறை கூறியது நினைவிலிருக்கிறது.

1994 ஆண்டு இவர் அரசியலில் பிரவேசித்தார். அப்போது நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டார் எனினும் அப்போது வெற்றி பெறமுடியவில்லை. 2000, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு கனிசமான வாக்குகள் பெற்றார்.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 16,640 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவிலிருந்து மாகாணசபைக்குத் தெரிவான முதல் உலமா என்ற பெருமையை இவர் பெறுகிறார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 10,732 வாக்குகள் பெற்று வென்றார்.

சில மாத காலம் சுகவீனமுற்றிருந்த இவர் 2014.08.10ஆம் திகதி கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது விருப்பப்படி அவரது ஜனாஸா கிண்ணியாவுக்கு எடுத்து வரப்பட்டு குறிஞ்சாக்கேணி பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேடல்

  ACM-Mussil

         ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:5170

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:9277

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:8530

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 208 guests online


Kinniya.NET