ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 2019
   
Text Size

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக திலக் கொல்லுரே..!

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

36

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான திலக் கொல்லுரே பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அஷோக்க விஜேதிலக்க உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அனுமதிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

மூன்று வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்ட ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2018 நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கிணங்க, உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரையும் ஆணைக்குழு முடக்கப்படவில்லை.

இதற்கிணங்க ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுபவர் சீ.எச்.மனதுங்க என்பவராவார்.

இதனிடையே, ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட சீ.எச்.மனதுங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபரான ப்ரேன்க் டி சில்வா, அன்டன் ஜெகநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள திலக் கொல்லுரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார்.

இதற்கு மேலதிகமாக பேராசிரியர் சிறி ஹெட்டிகே, சாவித்திரி விஜேசேகர உள்ளிட்ட உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.

Share
comments

Comments   

 
0 #1 JasperHof 2019-02-20 20:06
энтропия с точки зрения теории информации http://www.h.ua/partners/profile/byirisxspace2-4155.html наследственная информация у бактерий vsrf.ru информация по жалобам
Quote | Report to administrator
 
 
0 #2 LloydDus 2019-02-22 02:16
Агрегатные состояния вещества http://www.sicipiscine.it/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=1046634
Quote | Report to administrator
 
 
0 #3 DavidTes 2019-02-23 15:04
теплообменник в топке или на трубе Пластинчатый теплообменник Kelvion NT 250L Хасавюрт Уплотнения теплообменника Теплоконтроль ТРТ 2 Уссурийск http://www.sq.com.ua/rus/news/novosti_partnerov/08.11.2018/kupit_svarnoy_teploobmennik/ Кожухотрубный испаритель WTK DBE 385 Тамбов
Кожухотрубный испаритель WTK DBE 385 Новосибирск Паяный теплообменник KAORI R051 Пушкино теплообменник туарег купить
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...33286
மொத்த பார்வைகள்...2265727

Currently are 128 guests online


Kinniya.NET