திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள், சிங்களவர்களின் மீள்குடியேறும் சுதந்திரம் அங்கீகரிக்கப்படும்

north east

2009ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதியன்று பயங்கரவாதம் முழுமையாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சத்துக் கும் அதிகமான மக்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடு களை அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக் குள் பூர்த்தி செய்திருப்பதுடன், இந்த மக்களின் பூர்வீக இடங் களில் மீள் குடியமர்த்தும் பணியை சிறப்பாக மேற் கொள்வதற்கு முன்னர் அப்பிரதேசங்களில் உள்ள ஏறத்தாழ 90 வீதமான கண்ணி வெடிகளையும் அகற்றும் பணியையும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

 

கிழக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் 18.02.2014

epflag[1]

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.

 

அரிசி மலை 500 ஏக்கர் காணிகுறித்து கி.மா.உ. ஆர்.எம்.அன்வர் விஷேட செவ்வி.!

Pulmottai Arisi_malai_5

திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள புல்மோட்டை பிரதேச அரிசி மலை 500 ஏக்கர் காணியின் உரிமை, சொந்தம் யாருக்கு? பௌத்த விகாரைக்குரியதா? புல்மோட்டைப் பிரதேச மக்களுக்குரியதா? என்ற இந்த பிரச்சினை இன்று போராட்டப் பிரச்சினையாக உருவெடுத்து இனங்களுக்கிடையே பல்வேறுபட்ட கசப்புணர்வுகளை ஏற்படுத்தி இன ஐக்கியத்துக்கும் சக வாழ்வுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு விவகாரமாக மாறியிருக்கிறது.இந்த விவகாரம் குறித்து திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உடனான நேர் காணல்.

 

புல்மோட்டை அரிசி மலை காணிகள் குறித்து விகாராதிபதி பனாமுரே திலகவம்ச விஷேட செவ்வி.!

Pulmottai Arisi_malai_1

திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள புல்மோட்டை பிரதேச அரிசி மலை 500 ஏக்கர் காணியின் உரிமை, சொந்தம் யாருக்கு? பௌத்த விகாரைக்குரியதா? புல்மோட்டைப் பிரதேச மக்களுக்குரியதா? என்ற இந்த பிரச்சினை இன்று போராட்டப் பிரச்சினையாக உருவெடுத்து இனங்களுக்கிடையே பல்வேறுபட்ட கசப்புணர்வுகளை ஏற்படுத்தி இன ஐக்கியத்துக்கும் சக வாழ்வுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிக்கின்ற ஒரு விவகாரமாக மாறியிருக்கிறது.இந்த நிலையில் முரண்பாட்டில் நேரடியாகச் சம்மந்தப்பட்டவரும் அரிசி மலைக்குள் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாளராகவும் இருக்கின்ற விகாராதிபதி அமரபுர நிகாய பனாமுரே திலகவம்சவுடன் இடம்பெற்ற நேர் காணல்.

செவ்வி கண்டவர் - கியாஸ் ஷாபி

கேள்வி: அரிசி மலைப் பிரதேசத்தில் பௌத்த விகாரை இருந்தமைக்கான ஏதும் சான்றுகள் உங்களிடம் உண்டா?

1979 ஆம் ஆண்டு சிறில் மத்யூ அமைச்சராக இருந்த போது கனிய மணல் கூட்டுத்தாபன பௌத்த சங்கத்துக்கு விகாரை ஒன்று இவ்விடத்தில் அமைத்து கையளித்தார். அரச கூட்டுத்தாபன பௌத்த சங்கம் என அழைக்கப்பட்ட இச் சங்கம் அப்போது வட கிழக்கு மாகாணத்தில் உள்ள பௌத்த மத விவகாரங்கள் அனைத்தையும் கவணித்து வந்தது.

இதன் விகாராதிபதியாக அமரபுர நிகாய நிந்தானே காசியப்பர் இருந்தார்.

உக்கிர யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது 1986 இல் அவரது சொந்த ஊரான மாத்தறைக்கு அவர் சென்று விட்டார்.

கேள்வி;: 500 ஏக்கர் காணி பௌத்த விகாரைக்கு ஒதுக்கப்பட்டதா? மக்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டதா?Pulmottai Arisi_malai_2

சிங்கள மக்களின் குடியேற்றம் அரிசி மலைப் பிரதேசத்தின் தென் பகுதியில் முதலாவது விவசாயக் குடியேற்றமாக இடம் பெற்றது.இந்த இடமே நாகலென்ன பிரதேசமாகும்.இங்கு ஒரு விகாரையும் அமைக்கப்பட்டிருந்தது.இந்த விகாரை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் இயங்கி வந்தது.இரண்டாவது குடியேற்றமே அரிசி மலையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.அரிசி மலைப் பிரதேசத்தில் 500 ஏக்கர் காணி விகாரைக்கு உரியதே.இதற்கு லங்கா கேஸ் கம்பனி அனுசரணை வழங்கியது.

அந்தக் காலத்திலே சிங்கள் மக்கள் புல்மோட்டை பிரதான வீதியின் இரு மருங்கிலும் இருந்துள்ளனர். சுமார் 100 குடும்பங்கள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.இவர்கள் அனைவரும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.இவர்கள் அனைவரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பிறகு தற்போது புல்மோட்டை நகரப்பகுதியில் இருந்து வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் 20,30 ஏக்கர் காணியைப் பிடித்து அத்துமீறிக் குடியேறியுள்ளனர்.இது தங்களுக்குச் சொந்தம் என் உரிமை கொண்டாடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

யுத்தத்துக்கு முன்பிருந்த சிங்கள மக்கள் தற்போது தங்களுடைய காணியைத் தேடி இங்கு வருகின்றனர்.தேர்தல் இடாப்பிலும் அவர்களது பெயர்கள் உள்ளன.1984 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 39 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரிசி மலை பிரதேசத்துக்கு வருகின்ற வழியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு புத்தர் சிலைகளை பிரதேச வாசிகள் உடைத்துவிட்டனர். அந்த இடத்தில் இருந்த அரச மரத்துக்கு தீயிட முயற்சித்தனர் என்பதற்கும் சாட்சியங்கள் உண்டு.புத்தர் சிலையை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இங்குள்ள புரதான சின்னங்கள் அழிக்கப்ட்டு வயல் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

புல்மோட்டை ஜான் ஓயாவுக்கு போகின்ற வழியில் விசேட அதிரடிப் படையினர் முகாமுக்கு முன்னால் உள்ள வயல் நிலங்கள் அனைத்தும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.

Pulmottai Arisi_malai_3கேள்வி : இது எப்பொது யுத்தகாலத்திலா? யுத்தத்திற்கு பின்னரா?

யுத்தத்துக்குப் பின்னர் டோசர்களைப் போட்டு புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறு அத்துமீறி குடியேறியவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் அரசியல் வாதிகளின் தலையீட்டினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: காணிப்பிரச்சினை சம்மந்தமாக அரச நிர்வாகம் என்ற வகையில் பிரதேச செயலகம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

காணி இல்லதவர்கள் பிரதேச செயலகத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.ஆனால் எந்தவொரு பிரதேச வாசிகளும் அங்கு செல்லவில்லை.காணி இல்லாதவர்களின் பெயாப்பட்டியலொன்றை பிரதேச செயலாளர் தயாரித்தார்.காணி இல்லாதவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.இந்த பிரதேசத்தில் எது புனித பூமி எது தொல் பொருள் சார்ந்த காணி எது அரசாங்க காணி என் இனங்காணப்படல் வேண்டும்.இதற்கும் இந்த பிரதேச வாசிகள் இடம்கொடுப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி தற்போது இந்த காணி விவகாரம் நீதி மன்றம் சென்றிருக்கிறதே?

இப்படியான நில அளவைகளைச் செய்ய வேண்டாம் என இந்த பிரதேச வாசிகள் ஆறு தடவைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நில அளவை உத்தியோகத்தர்களைத் தாக்கவும் முற்பட்டனர். இதனால் பொலிஸ் மூலம் நீதமன்றம் சென்ற இந்த விவகாரம் நீதி மன்ற உத்தரவுக்கு இனங்க நில அளவையை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டது.எனினும் முடியவில்லை. இப்பொழுது நான்காவது தடவையாகவும் இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

கேள்வி: நீதிமன்றம் 500 ஏக்கர் காணியும் நீதி மன்றத்துக்குரியது எனத் தீப்பு வழங்கினால் குடியிருக்கும் மக்களுக்கு அநீதி இழைத்ததாக மாறிவிடுமே?

அரசாங்கம் இதற்கு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும்.பௌத்த விகாரை இப்பொது மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்க வேண்டும்.இதற்கு அரசாங்கம் பொருத்தமான தீர்மானம் எடுக்கும்.

கேள்வி: அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீரா?

நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் போக முடியாது.எனவே அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கின்றதோ அதற்கு நாங்கள் இனங்குவோம்.பௌத்த தர்மத்தை பொருத்த வரையில் மற்றவர்களுடைய மனதை நோவினை செய்வதையோ அவர்களுடன் முரண்பாடுகளைத் தோன்று விப்பதையோ பௌத்த தர்மத்தில் எங்கேயுமே சொல்லப்படவில்லை. இந்த கிராமத்தில் காணப்படும் பண்டைய கட்டடப் பொருட்களைப் பார்க்கும் போது சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை புலப்படுகிறது.அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.முற்று முழதாக இப்பிரதேசத்தை சிங்களப் பிரதேசமாக மாற்றும் நோக்கம் எமக்கில்லை.

எமது மக்கள் நாளாந்தம் வாழ்வாதார தொழில்களைச் செய்வதற்கும் இந்த விகாரையைப் பராமரிப்பதற்கும் வயல் நிலங்கள் வேண்டும்.

கேள்வி: 500 ஏக்கர் காணி விகாரைக்குரியது என அப்போதைய பிரதம மதகுருவால் வாய் மொழி மூலம் செர்ல்லப்பட்டதைத் தவிர வேறு ஆதாரங்கள் உண்டா?

Pulmottai Arisi_malai_4

பண்டைய அரசர்கள் காலத்திலே இங்கு பல விகாரைகள் அமைக்கப்பட்டிருந்தன.விகாரைகள் இருந்ததனால்தான் இங்கு சிங்கள மக்கள் வாழ்ந்நிருக்கிறார்கள்.500 ஏக்கர் காணியை உரிய முறைப்படி விகாரைக்குச் சொந்தமாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே யுத்தம் உக்கிர கட்டத்தை அடைந்தது.இதனால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.500 ஏக்கர் காணி பௌத்த விகாரைக்கும் சிங்கள் மக்களைக் குடியேற்றுவதற்கும் வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தன.

கேள்வி: வர்த்தமாணி எப்போது வெளிடப்பட்;து.அதில் உள்ள விபரத்தைக் கூறமடியுமா?

ஓவ்வொரு சிங்களக் குடும்பங்களுக்கும் மூன்று ஏக்கர் நிலம் என ஒதுக்கப்பட்டுள்ளது.200 குடும்பங்களைக் கொண்ட விவசாயக் குடியேற்றத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிககை எடுக்கப்பட்டிருந்தது.விவசாயக் குடியேற்றம் என்பது கால் ஏக்கர் கொடுத்து இடம்பெறுவதில்லை.ஒருவருக்கு மூன்று, நான்கு ஏக்கர் கொடுத்தே குடியேற்றப்படுவது வழமை. அதன் முதற்கட்டமாக புல்மோட்டை நாகலென்ன பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தும் திட்டம் இருந்திருக்கிறது.ஆனால் யுத்தம் இடம் கொடுக்கவில்லை.

கேள்வி : விகாரைக்கு 500 ஏக்கர் காணி அதிகம் தானே? காணி இல்லாதவர்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்து நியாயம்தானே? புத்த தர்மமும் இவற்றை ஏற்றுக்கொள்ளும்தானே?

விகாரைக்கு 500 ஏக்கர் காணி அவசியம் இல்லை. இந்த விகாரையை நடாத்திச் செல்வதற்கு அரசாங்கத்துக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கலாம்.அதற்காக முன்கூட்டி காணி ஒதுக்கிக் கொள்வதுதான் இதன் திட்டம்.1979இல் அரசாங்கம் இதற்காக திட்டம் தீடடியிருந்தது.யுத்தம் காரணமாக அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது.ஒரு குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் காணி வீதம் கொடுத்து சிங்கள மக்களைக் குடியேற்றினால்தான் விகாரையை நடாத்திக் கொண்டு செல்ல முடியும்.அந்த நோக்கத்துக்காகவே இந்த 500 ஏக்கர் காணியும் ஒதுக்கப்படம்டிருந்தது.

கேள்வி: புல்மோட்டை பிரதேச மக்களுக்கும் காணி பகிர்தளிக்கப்படுமா?

அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும். எவருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது.காணி இல்லாத முஸ்லிம்களுக்கு விகாரையை அண்மித்த பகுதியில் காணி வழங்கப்படமாட்டாது. சுற்றுப்புறச் சூழலிலே வழங்கப்படலாம்.

 

கிழக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் 28.01.2014

epflag

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் சென்ற 28.01.2014 திகதி மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர் மகா நாட்டில் வெளியிட்டார் அத்தீர்மானங்கள் பின் வருமாறு.

 

பக்கம் 8 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 477 guests online


Kinniya.NET