திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

இலவச கல்வியின் கறுப்புச் சந்தை

kids b1[1]

(வீரகேசரி)

தனது பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்காக ஆசிரியர்களால் கோரப்பட்டிருந்த கட்டணத்தை வழங்குவதற்காக, தனியார் தோட்டமொன்றில் தேங்காய் திருடி விற்ற மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அதேபோல், தன்னுடைய பிள்ளையை தரம் 1 இற்கு பாடசாலையில் அனுமதிப்பதற்காக பாடசாலை நிர்வாகத்தினால் கேட்கப்பட்டிருந்த அன்பளிப்புத் தொகையான 4 ஆயிரம் ரூபாவை செலுத்த வழியின்றி தனது வாழ்வாதாரமான மீன்பிடி வள்ளங்களை விற்பனை செய்த ஒரு ஏழைத் தந்தையின் கண்ணீர் இலவசக் கல்வியை வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது.

 

ஆழிப்பேரலையின் ஆறாத வடுக்களோடு ஒன்பது வருடங்கள் !

Tsunami2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்நூற்றாண்டின் மறக்க முடியாத ஒரு நாள். சுனாமிப் பேரலை என பெயர் சூட்டப்பட்டு உலகத்தையே அதிர வைத்த நாள். ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு உயிர்கள் கடலில் சங்கமித்த நாள். நம்மைக் கடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அதன் வடுக்கள் மாறவில்லை. வேதனைகள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

புல்மோட்டையில் பறிபோகும் முஸ்லிம்களது காணிகள் ?

pulmoddai[1]

 -மூதூர் முறாசில்-

நீண்ட காலமாக நிலவிவந்த யுத்தம் முடிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பல பிரச்சினைகளும் ஆங்காங்கு எழுச்சி பெற்று வருகின்றது. இந்தகைய பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அல்லது நெருக்குவாரங்களும் ஒன்றாகும்.

எல்லோரும் கூறுவதுபோல முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் தீய சக்திகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அத்தகைய தீய சக்திகளின் செயற்பாடுகள் சிலவேளைகளில் நேரடியாகவும் பலவேளைகளில் மறைமுகமாகவும் இடம்பெறுகின்றது. அத்தகைய செயற்பாடுகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு குறுகிய நீண்ட கால திட்டங்களைக் கொண்டதாக செயற்படுத்தப்படுகின்றது.

 

கடலுக்கிரையாகும் கிண்ணியா முதூர் கடற்கரை; முழு ஊரும் மூழ்குவதற்குள் செய்வது என்ன?

Mutur-Sea01

மூதூரின் கரையோரக் கிராமங்களான ஹபீப் நகர், தக்வாநகர், பஹ்ரிய்யா நகர் (வட்டம்) ஆகிய பிரதேசங்களின் எழில் கொஞ்சும் கடற்கரையின் அழகிய நிலத்தோற்றம் கடலரிப்பின் விளைவினால் அழிந்து செல்லும் அபாய நிலையை அடைந்துள்ளது.

தற்போது சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இக்கரையோரப் பகுதியானது ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட பூர்வீகத்தை உடைய நிலப்பகுதியாகும்.

 

கிண்ணியாவின் முக்கியபொருளாதாரமான கால்நடை வளர்ப்பு அழிவுரும்நிலையில்..!!

madu

(ஏ.சி.எம்.முபாரக்)

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குல் உட்ப்பட்ட பிரதேசங்கலில் அநேகமான மக்களின் ஜிவனோ பாயத் தொழிலாக கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது. இக் கால் நடை வளர்ப்பானது அன்று தொடக்கம் இன்று வறை பல்வேறு அசௌகரியங்களையும் இன்னல்களையும் முகம் கொடுத்தே வருகின்றது. கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் ஏற்ப் பட்ட அசாதாரன காலங்களில் பெரும் பாலான கால் நடைகள் அழிவடைந்தன இருந்த போதிலும் கடந்த 2009 ம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும் நிலையில் மிகப் பெரியதொரு சவாலாக கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பிரச்சினை ஒன்று காணப்படுகிறது.

 

பக்கம் 9 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21657
மொத்த பார்வைகள்...2078581

Currently are 221 guests online


Kinniya.NET