திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

கிண்ணியாவில் கடந்த ஆண்டு முதல் 8 மாத காலத்துள் போக்குவரத்து குற்றத்திற்காக 3895 வழக்குகள் பதிவு

z p06-Towards-02

 

 

 

 

 

 

 

 


கிண்ணியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார் மூலம் கடந்த ஆண்டு முதல் 8 மாத காலத்திற்குள் அதாவது 2014.01.01ஆம் திகதி முதல் 2014.08.31ஆம் திகதி வரை 3895 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு குற்றங்களுக்காக இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் விபரம் வருமாறு:

விதிமுறைகள் பின்பற்றப்படாமை -    04

மதுபாவனையில் வாகனமோட்டியமை -  05

பொலிசாரின் கட்டளையை மதியாமை -   38

வாகன அனுமதிப் பத்திரமின்மை -  45

ஹெல்மட் அணியாமை -  894

வேறு குற்றங்கள் -  2909

மொத்தம் -  3895

ஆயிலியடி, மணியரசங்குளம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வானாறு பொலிஸின் கீழ் வருவதால் அங்குள்ள வழக்குகளின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்பட வில்லை.

ஏட்டு மாத காலத்துக்கு மேற்படி 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த மிகுதி 29 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3895 வழக்குகள் என்றால் ஒரு வருடத்திற்கான வழக்குகளின் எண்ணிக்கையை நம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்.

இந்த வழக்குகளுக்காக ஆகக் குறைந்த பட்சம் 12 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தப்பட்டிருக்கும். இதனை விட நீதிமன்றத்திற்கு சென்ற செலவினம் (சட்டத்தரணி கட்டணம் உட்பட) இதுபோன்ற இன்னும் ஒரு தொகையாக இருக்கும். அந்த வகையில் பெருமளவு தொகை வீண் செலவாக போயிருக்கின்றது.

கிண்ணியாவைப் பொறுத்த வரை 96 வீதமானோர் முஸ்லிம்கள். 'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அவனது தூதருக்கு கட்டுப்படுங்கள். தலைமைக்கு கட்டுப்படுங்கள்' என்று இஸ்லாம் மிகத் தெளிவாகவே வலியுறுத்துகின்றது. தலைமைக்கு கட்டுப்படுங்கள் என்பதன் கீழ் நாட்டு சட்ட திட்டங்களும் அடங்குகின்றன.

எனவே, இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற நாம் நாட்டுச் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டல் இருக்கையில் அந்த இஸ்லாமிய வழிகாட்டலைப் புறந்தள்ளியமையின் விளைவே 8 மாதத்துக்கு 3895 வழக்குகள்.

இஸ்லாத்தை சரியாகப் பின்பற்றுகின்ற ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் இந்தளவு வழக்குகள் வர எந்தவித நியாயமுமில்லை. எனவே, நாம் முழுமையாக இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றோமா என எம்மை நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும். இந்த வழக்குகளின்எண்ணிக்கை எதிர்காலங்களில் குறைக்கப்பட வேண்டும்.

இதற்காக ஜெம் இய்யத்துல் உலமா, மஜ்லிசுல் சூரா, மார்க்க அமைப்புகள், ஏனைய பொதுநல அமைப்புகள், தனிநபர்கள் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இதன் மூலம் முன்மாதிரி சமூகமாக நாம் கிண்ணியாவை மாற்ற முடியும்.

ACM-Mussil- ஏ.ஸீ.எம்.முஸ்இல் -

Share
comments

Comments   

 
+1 #1 mohamedirfan 2015-05-28 16:27
Good job sir keep it up
Quote | Report to administrator
 
 
0 #2 Melanie 2017-04-27 10:10
Hi I am so happy I found your web site, I really found you by error, while I was looking
on Aol for something else, Nonetheless I am here now and
would just like to say thanks a lot for a marvelous post and a all round exciting blog (I also love the theme/design), I don't have time to read it all at the
moment but I have bookmarked it and also added your RSS feeds, so when I have
time I will be back to read a lot more, Please do keep up the superb job.


My weblog: https://www.viagrasansordonnancefr.com/achat-viagra-generique-reims/: https://www.viagrasansordonnancefr.com/achat-viagra-generique-reims/
Quote | Report to administrator
 
 
0 #3 Deana 2017-05-03 00:08
I am genuinely pleased to read this blog posts which contains plenty of helpful facts, thanks for providing such data.


Also visit my weblog: https://www.viagrasansordonnancefr.com/viagra-femme-prix-tunisie/: https://www.viagrasansordonnancefr.com/viagra-femme-prix-tunisie/
Quote | Report to administrator
 
 
0 #4 Parthenia 2017-05-09 08:17
WOW just what I was looking for. Came here by searching for KINNIYA
TODAY

My blog - https://www.viagrasansordonnancefr.com/sildenafil-generique-sans-ordonnance-kine/: https://www.viagrasansordonnancefr.com/sildenafil-generique-sans-ordonnance-kine/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21655
மொத்த பார்வைகள்...2078579

Currently are 214 guests online


Kinniya.NET