திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

20வது தேர்தல் திருத்தம்; முஸ்லிம்கள் இழக்கப்போவது என்ன? YSL.ஹமீத் தரும் விளக்கம்.

YLS Hameed

(தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம்கள் இழக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய அவரது கருத்துக்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் சிறுபான்மைகள் குறிப்பாக முஸ்லீம்கள் 95வீதத்திற்கு மேல் வாக்களித்து ஜனாதிபதியாகத் தெரிபு செய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை செய்தவர்கள். என்பதற்கு நன்றிக் கடனாக அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கு மேல் குறைக்கின்ற ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த முற்படக் கூடாது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது முன் வைக்கப்பட்டுள்ள தேர்தல் முறை 255 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதில் 196 பேர் மாவட்ட விகிதாசார முறை 59 பேர் தேசியப்பட்டடியல் ஊடகாவும் தெரிபுசெய்யப்படுத்தும் அதே நேரம் இன்று இருக்கின்ற தேர்தல் முறைமூலம் 196 பேர் மாவட்ட விகிதாசார பிரநிதித்துவ முறையிலும் 29 பேர் தேசியப்பட்;டியலில் ஊடாகவும் தெரிபு செய்யப்படுவார்கள்.

எனவே இந்த இரண்டு முறையும் மாவட்ட ரீதியாக 196 விகிதசாரமுறையில் தெரிபுசெய்யப்படுகின்ற அதே வேளை தேசியப்பட்டியலில் 30 ஆக அதிகரிக்கின்றது. இந்த முறைக்கு இடையில் இருக்கின்ற வித்தியாசம் என்ன என்பதை கவணிக்க வேண்டும்.

புதிய முறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிரீதியாக வேட்பாளர் நியமிக்கப்படுவர் என்பது தான் பிரதான வித்தியாசமாகும். இது முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை பாதியாக குறைக்கும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

தற்பொழுது 160 தொகுதிகள் நடைமுறையில் இருக்கின்றன. அதாவது 1977 ல் தேர்தலில் நடைமுறையில் ;இருந்தவை. இதனைத் சிறுபான்மைக்குச் சாதகமாக சில இரட்டை அல்லது பல அங்கத்தவர்கள் தொகுதிகளை உருவாக்குவதற்காக 165 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டது. சுருங்கக் கூறின் தொகுதிகளின் ஊடாக 165 அங்கத்தவர்கள் தெரிபு செய்யப்படுவார்கள். இம்முறையானது விகிதாசார பிரநிதித்துவத்தில் தொகுதி முறை தேர்தலாக கொண்டதாகும். இதனை ஒரு மாவட்டத்தை உதாரணமாக எடுத்து விளக்கலாம்.

கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் விகிதசார முறையின் கீழ் 19 பிரநிதிகள் தெரிபு செய்யப்படுகின்றார்கள். தேர்தல் ஒவ்வொரு கட்சியும் 22 வேற்பாளர்களைக் கொண்ட பட்டியலை வேற்பளாராக தாக்கல் செய்கின்றது. அதே நேரம் கொழும்பு மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த 15 தொகுதிகள் இருக்கின்றன.

உத்தேசிக்கப்பட்ட புதிய முறையின் கீழ் பழைய முறைப்படியின் கீழ் போன்று 22 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையே ஒவ்வொரு கட்சியும் சமர்ப்பிக்கும். ஆனால் அதில் 15 பேர்களை 15 தொகுதிக்கும் உரிய வேட்பாளர்களை அடையாளப்படுத்தும். எஞ்சிய 7 பேரும் பட்டியலில் மீதமாக இருப்பார்கள். அதே நேரம் வாக்காளர்கள் தமது தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வேட்பாளருக்கு 77 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்தது போன்று வாக்களிப்பாளர்கள்.

விகிதாசார பிரநிதித்துவ முறை

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சியும பெற்ற வாக்குகள் கூட்டப்பட்டு மாவட்த்தில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் கணக்கிடப்படும். இதன் பின் இன்று இருக்கின்ற அதே விகிதாசார முறையை பின்பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையில் பங்கீடு செய்யப்படுவார்கள்.

(உ–ம்) மாக கொழும்பு மாவட்த்தில் 19 பாராளுமன்ற உறுப்பினர்கள். ஜ.தே.கட்சி 10 ஸ்ரீ.ல.சு.கட்சி 6 ஜே.வி.பி 2 இன்னொரு கட்சி 1உம் விகிதாசார முறையில் பெறப்படுகின்ற என்று வைத்துக் கொள்வோம். அதே நேரம் இந்தக் கட்சிகள் தொகுதி முறைத் தேர்தல்கலாள் தமக்கு விகிதாசார முறையின் கீழ் கிடைத்த ஆசனஙக்களைவிட அதிகமான தொகுதிகளை வெல்லலாம். அல்லது அதே அளிவலான தொகுதிகளை வெல்லாம். குறிப்பாக ஒரு தேர்தலில் ஆட்சியமைக்க சாத்தியமான கட்சி விகிதாசார முறையின் கீழ் தனக்குரித்தான ஆசனங்களைவிட அதிகமான தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் குறைவான தொகுதிகளையும் வெல்லுவதே சாத்தியமாகும்.

ஊதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் ஜ.தே.கட்சி 12 தொகுதிகளையும். ஸ்ரீ.ல.சு.கட்சி 3 தொகுதிகயையும் ஏனைய 2 கட்சிகளும் விகிதாசார முறையின்கீழ் பிரநிதித்துவத்தை பெற்றபோதிலும் எந்தக் தொகுதியையும் வெல்லவில்லை என்று எடுத்துக்கொண்டால் ஜ.தே.கட்சி விகிதாசார முறையின் கீழ் தனக்கு உரித்தான 10 ஆசனங்களை விட 2 ஆசனங்கள் அதிகம் பெற்றிருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு மாவட்த்திலும் அல்லது பெரும்பாலான மாவட்ங்களில் வெல்லுகின்றது என்று வைத்துக்கொண்டாலும் இதனை என்ன செய்வது ? வெற்றி பெற்றாவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பாமல் இருகக்வும் முடியாது? எனவே இவ்வாறு மேலதிகமாகப் பெறுகின்ற ஆசனங்கள் அந்தக் கட்சிகளுக்குரிய தேசியப்பட்டியலிருந்து கழிக்கப்படும். இதனால்தான் தேசியப்பட்டியல் அதிகரிக்கப்படுகின்றன.

இதில் முஸ்லீம்களுக்குரிய அல்லது சிறுபான்மையுடைய பிரச்சினை என்ன?

முஸ்லீம்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அம்பாறை மாவட்டத்தில் 3 ஆசனங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 ஆசனம், மன்னார் 1 ஆசனம், திருமலையில் மூதூரில மடடும்; 1 என்று மொத்தமாக 6 ஆசனங்கயையே பெறலாம்.

அதிலும் மட்டக்களப்பு, மன்னார் தொகுதிகள் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது. வட கிழக்குக்கு வெளியே கொழும்பு மத்திய தொகுதியில மற்றும் ஹரிஸ்பத்துவ ஆகிய தொகுதிகளில் 2 ஆசனங்களைப் பெறலாம். மேலும் பேருவளை, புத்தளம் ஆகிய இடங்களில் இரட்டை அங்கத்தவர்கள் சில வேளை உருவாக்கப்பட்டால் இன்னும் 2 ஆசனங்கள் பெறலாம். எனவே மொத்தமாக அதி கூடிய 10 ஆசனங்களையே முஸ்லீம்கள் பெறலாம். ஆனால் நூறு வீதம் உத்தரவாதம் இல்லை.

இதனைத் தவிர இலங்கையில் எந்தவொரு தொகுதியிலும் ஒரு முஸ்லீம் வேட்பாளரை ஒரு முஸ்லீம் கட்சியோ அல்லது பெரிய கட்சிகளான ஜ.தே.கட்சி, ஸ்ரீ.ல.சு.கட்சி என்பனவோ நிறுத்த முடியாது.

எனவே இந்த தொகுதிகளில் எதிலும் பெரும்பான்மை முஸ்லீம் வாக்குகள் கிடையாது. இருக்கின்ற சிறிய என்ணிக்கைகளுடைய முஸ்லீம்கள் கூட ஒரு முஸ்லீம் வேட்பாளர்க்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் வெற்றிபெற முடியாத வேட்பாளாருகு;கு தமது வாக்குகளை வீனடிக்க முற்படமாட்டார்கள்.

இந் நிலையில 10 ஆசனங்களுக்கு மேல் எந்தக் கட்சியினருந்தும் முஸ்லீம்கள் ஆசனங்களைப் பெறமுடியாது. எனவே தான் நாம் இரட்டை வாக்குகளைப் கோருகின்றோம். இதில் ஒன்று கட்சிக்கும் அலலது இன்னுமொன்று வேட்பாளருக்கும் அளிக்கப்படும்.

அவ்வாறு வரும்போது தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய பெரும்பான்மை வேட்பாளருக்கு தொகுதிக்கான வாக்குகளை அளிக்கின்ற வேளை கட்சிக்கான வாக்குகளை தமக்கு விருப்பமான சிறுபான்மைக் கட்சிகளுக்கு வழங்க முடியும்.

உதாரணமாக குருநாகள் மாவட்டத்தில் 85 ஆயிரம் முஸ்லீம் வாக்குகள் இருக்கின்றன. அவர்கள் ஒற்றுமைப்பட்டால் 2 ஆசனங்களை இலகுவாகப் பெறலாம். அதே நேரம் புதிய முறையின் கீழ் எந்தவொரு தொகுதியிலும் முஸ்லீம்கள் பெரும்பான்மைகள் இல்லாததினால் ஒரு ஆசனத்தைக் கூட குருநாகலில் பெறமுடியாது. இது இரட்டை வாக்காக மாறுகின்ற பொழுது தொகுதிகளில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை வெற்றி பெறக் கூடிய பெரும்பான்மை வேட்பாளருக்கு ஒரு வாக்கை அளிப்பதன் மூலம் அங்கு இனஜெயன்னத்தை பேனுகின்ற அதே வேளை தன்னுடைய மற்ற வாக்கை தாம் ;விரும்பும் கட்சிக்கு அளிப்பதன் மூலம் தமது சமுகத்திற்கான பிரநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தலாம்.

எனவே மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் புதிய தேர்தல் முறையினை எமது அபிவலாசைகளை புறந்தள்ளிவிட்டு இப் புதிய தேர்தலை தினிக்க முற்படக் கூடாது என்று நாம் வினயமாகக் வேண்டுகின்றோம்.

குறிப்பு – நேற்று இரவு விசேட அமைச்சரவையில் 225 நாடளுமன்ற உறுப்பினர்கள். அதில் இதற்கமைய 125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும்இ 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும்இ 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமரின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை உள்ளிட்ட 20வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில்இ இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதன் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை இன்று மாலை கூடியமை குறிப்பிடத்தக்கது

வை.எல். எஸ் ஹமீட்

செயலாளாளர்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 442 guests online


Kinniya.NET