திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

அரசியல் சந்தையாக மாறிப் போன கிண்ணியா..!

image33[1]

-சுஹைர் அலி

இஸ்லாத்தில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்படுகின்ற உரிமைகளாகும் அவை எதோ ஒரு அரசாலோ சட்ட மன்றத்தினலோ வழங்கப்பட்டவையல்ல,மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம், சர்வாதிகரிகளின் அரசனையும் இவ்வாறு மாற்றப்படகூடியதே!

அவர்களுக்கு ஒத்து வரகக்கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள் இல்லை என்றால் விளக்கி விடுவார்கள் அனால் இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ திருத்தவோ எந்த சட்ட மன்றத்திற்கும்,அரசுக்கும் அறவே உரிமை இல்லை ஏனனில் அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை.

வெற்றுத் தாலில் எழுதி வீண் விளம்பரத்துக்கு மட்டும் பயன் படுத்தப்படும் உதவாக்கரை ஆவனங்கள அல்ல அவை வெளிச்சம் போட்டு காட்டிய பின் நடை முறை வாழ்வில் அமல் படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை அமல் படுத்துவட்கு இசைவாணை இல்லாத வறட்டு கொள்கைகள் அல்ல அவை.

நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்றுசெயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல்,நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப்பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக்கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன.

மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின்வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கியபணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும்,அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள்அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம.

பொதுவாக கிண்ணியா வரலாற்றில் பல அரசியல் வாதிகளும்,தலைவர்களும் வந்தே சென்றனர் என்றாலும் தூர நோக்கு,நீண்ட கால திட்டங்கள்,சமூக நலன்கள் குறைவாகவே காணப்படுகின்றன எனினும் நாம்தான் அவர்களை வளர்த்து விடுகின்றோம் அவர்களாக தவிர வளர்வதில்லை,அதே சமயம் நாம் அவரகளுக்கு சிந்திக்க அல்லது சமூக சிந்தனை போன்ற அளுத்தக்களை கொடுப்பதில்லை மாறாக நாம் ஒரு குறிகிய நோக்கங்களுடன் பின்னல் அடி மட்ட தொண்டர்களாக வெறுமனே ஒரு வேலைவாய்ப்பு அல்லது,கொன்றக்ட் தவிர சுய நல அரசியலாக மாற்றி வைத்திருக்கிறோம் குறைவாக இருப்பதால் தலைவர்களும் அதற்கப்பால் சிந்திப்பதில்லை.

அவர்களிடம் குழுவாக அல்லது சமூக சிவில் கூட்டமாக சென்று பல நிகழ்ச்சி நிரல்கள்,நீண்ட கால திட்டங்கள்,மகஜர்கள்,கோரிக்கைகளை முன் வெய்யுங்கள் அப்போதுதன் அவர்களும் சிந்திப்பார்கள் அவர்களையும் அரசியல் விஞ்ஞனம்,அல்லது அரசியல் கொள்கை சம்மந்தமாக படிப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்,தவிர இன்றைய தலைவர்கள் எவ்வாறு என்றால் 'என்னிடம் இரண்டு வேலை வாய்ப்பு இருக்கிறது அதில் ஒன்றை உனக்குத் தருகிறேன் ஆனால் உன் மொத்த குடும்பமும் எனக்கு வாக்களிக்க வேண்டு என்ற ஒரு அரசியல் சந்தையாக மாறி இருக்கின்றமை வாக்காளர்கள் நாமும் விட்ட தவறுகள்தான் என்பதும் வெளிப்படை.

இஸ்லாமிய அரசியல் யாப்புக்கள்,வரலாறுகளை ஆகக் குறைந்த பச்சம் நினைவுக்காக இருக்கவேணும் தூண்டுங்கள்,எமக்கு நன்றாக தெரியும் தேர்தல் வந்து விட்டால்தான் உறவுகள்,அண்ணன்,தம்பிகள் நினைவுக்கு வரும் ஆக அந்த தருணத்தை நாம்தான் பயன்படுத்த தவறிவிட்டோம்..!

திருமறை விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள்.

ஆட்சியதிகாரம் என்பது, இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால், மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

நாளைய நல்லதொரு கூட்டு சமூகமாக வாழ நாம் நம்மை தயார்படித்ஹிக் கொள்ள வேண்டிய தருனம்தான் இந்த அரசியல் சந்தை ஆக இதை மலிவாக,இலாபமாக,இலாவகரமாக பெற்றுக் கொள்ள எத்தனிப்போமே ..!

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21657
மொத்த பார்வைகள்...2078581

Currently are 218 guests online


Kinniya.NET