திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

இலங்கை அரசியலில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்பு

ra

(இலங்கை ஒரு பல்லின தேசம். இங்கே கனிசமான அளவு இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இங்கு பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் இயங்கிவருகின்றன. இவை மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த ஒன்றாகவும் காணப்படுகின்றன. ஏனெனில் இலங்கை இஸ்லாமியர்கள் சமயக் கட்டுக்கோப்பினை பெரிதும் மதித்து நடப்பவர்கள். இவ்வாறானதொரு சூழலில் இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பு குறித்த ஒரு பார்வையாக இக்கட்டுரை அமைகிறது.)

லங்கை அரசியலில் இஸ்லாமியர்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சங்கடமான நிலையை சந்தித்துக்கொண்டும்இ சந்திக்கவும் இருப்பதனை உணரமுடிகிறது. இந்த நிலைமைக்கு இச்சமூகத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும்தான் காரணம் என்றால் அதை மறுத்துப்பேச முடியாதுள்ளது.

இலங்கை இஸ்லாமியர்கள் தற்போது அரசியல் ரீதியிலான வழிகாட்டல்கள் எதுவுமின்றி தனித்து விடப்பட்டதனைப் போன்றதொரு நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் மக்களும் வாழ்வாதாரத் தேடல்கள் குறித்தே கவனித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களது அரசியல் அனுபவிப்புக்கள் பூச்சியமாகவே இருக்கின்றன. இவர்களை வைத்து அரசியல் செய்வோர் இவர்களுக்காய் எதுவுமே செய்யாத நிலையில் இவர்களின் வாக்களிப்புத் தொடர்வதுதான் பொதுமக்கள் செய்கின்ற தவறு என்று சொல்கிறேன்.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் இஸ்லாமியர்களின் அரசியலுக்கென்று ஒரு கொள்கையோஇ ஒரு இலக்கோ இனங்காணப்படாமலேயே இயங்கிக்கொண்டிருப்பதையே காணமுடிகிறது. ஆனால் இவர்களை வைத்து அரசியல் செய்யும் தலைமைகள் தங்களுக்கான சொந்த இலக்குகளை ஒவ்வொரு தேர்தலின் பின்னும் அடைந்துகொள்கிறார்கள்.

இப்படியாக நீண்டு செல்லும் தலைமைகளின் இலக்குகள் எப்போதும் நிறைவேறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர இவர்களது பொய் வாக்குகளை நம்பி வாக்களித்தவர்கள் அரசியல் அநாதைகளாக நிற்கிறார்கள். இங்கு எந்த இஸ்லாமியனிடமும் உங்களது சமூகத்தின் அரசியல் இலக்குஇ கொள்கை எதுவெனக் கேட்டால் அவனால் தீர்க்கமான விடை சொல்ல முடிவதில்லை. ஏனெனில் அவ்வாறானதொரு எந்த வழிகாட்டல்களும் அவனது தலைமையால் அவனுக்கு வழங்கப்படவில்லை.

இங்கு காலங்காலமாக என்ன நடந்துகொண்டிருக்கிறதென்றால்- சகோதரச் சிறுபான்மையினர் உரிமைக்காய் குரல்கொடுப்பார்கள்இ போராடுவார்கள். இவர்களோ ரெண்டுங்கெட்டான் நிலையில் அமைதி காப்பார்கள் அல்லது ஆளும் அரசுக்கு வால் பிடிப்பார்கள். இறுதியில் தீர்வு என்று வருகிறபோது மட்டும் பிச்சைத் தட்டை ஏந்தி நிற்பார்கள்.

வாழுகின்ற தேசத்தில் தமக்கான உரிமைகளைப் பெறுவதற்கும் அநீதிகளுக்கெதிரான அதட்டல்களை நியாயமான முறையில் அணுகுவதற்கும் இன்று நேர்மையான அரசியல் வழிகாட்டல்கள் இஸ்லாமியர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆனால் இங்குள்ள இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் சரிஇ இஸ்லாமிய இயக்கங்களும் சரி அந்த விடயத்தினை எந்த அளவிற்கு முன்னெடுக்கின்றனர் என்று பார்த்தால் சிலாகித்துச் சொல்லுமளவிற்கு எதுவுமே இல்லை.

தமது சமூகத்திற்கெதிரான திட்டத்தை யார் வகுக்கிறார்களோ அவர்களுக்கெதிராக அறிக்கை விட்டுவிட்டு பின்வழியால் அவர்களிடமே சென்று 'அரசியலில் இதெல்லாம் சகஜம்தான்' என்று சொல்லி ஒன்றாகத் தேநீர் அருந்துகிற தலைமைகளுக்குத்தான் இலங்கை இஸ்லாமியர்கள் இன்று வாக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே இந்த இழிநிலைக்கு அவசரமாய் ஒரு தீர்வு காணவேண்டியது அவசியமாய் இருந்துகொண்டிருக்கிறது. அரசியல் ரீதியிலான இஸ்லாமியத் தலைமைத்துவங்கள் இவ்வாறாக துரோகமிழைத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இஸ்லாமியர்களுக்கான நல்லதோர் அரசியல் வழிகாட்டல்களை வழங்கவேண்டிய பொறுப்பு சமயம்சார் இயக்கங்களுக்கும் இருக்கிறது எனும் விடயத்தைத் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. ஏனெனில் இலங்கை இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக சமய ரீதியிலான கட்டுக்கோப்புக்குள் வாழ்பவர்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அந்த வகையில் அவர்களுக்கான அரசியல் வழிகாட்டல்களையும் அழகிய முறையில் எடுத்துச்சொல்ல வேண்டிய கடப்பாடு இஸ்லாமிய இயக்கங்களுக்கு இருக்கிறது.

தற்போதுள்ள இஸ்லாமிய அரசியல் தலைமைகளின் தாறுமாறான போக்குகளைக் கண்டித்தோ அல்லது அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாத்தோ மக்களுக்கான அரசியல் கொள்கையைஇ அடைய வேண்டிய இலக்குகளை இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் பிரகடணப்படுத்தி மக்களை வழிநடாத்த வேண்டும்.

ஆனால் அவ்வாறான எந்த முன்னெடுப்புக்களும் இங்கு நடைபெறுவதாய்த் தெரியவில்லை. அதையும் தாண்டி யாராவது ஓரிரு விடயங்களை உதாரணமாய்ச் சொல்ல வந்தாலும் அவற்றின் பின்னணியைப் பார்த்தால் எந்தவொரு அரசியல் முதிர்ச்சியுமற்ற செயற்பாடுகளாகத்தான் அவற்றைக் காணமுடிகின்றன. தனித்துவத்திற்காய் குரல் கொடுத்தல் என்ற பேரில் குறித்த சமய ரீதியிலான ஊடகம் செய்வதோ அரசியல் செய்வதோ இலங்கையைப் போன்ற பல்லின தேசத்தில் பலிக்காது என்கின்ற உண்மையை உணர்ந்து அந்த வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அந்த வழிகாட்டலில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு இடங்களுக்கேற்றாற் போல் பேணப்படுமாறு அமையப் பெறவேண்டும்.

அதைவிடுத்து இஸ்லாம் என்கின்ற அகிலத்தார் அனைவருக்குமான மார்க்கத்தை ஒரு சில செயற்பாடுகளால் கூறு போட்டு அதனடிப்படையில் ஊடகம் செய்வதோஇ அரசியல் செய்வதோஇ தேசத்தின் மீதான இஸ்லாமிய மயமாக்கல் கனவைக் கட்டவிழ்த்து விடுவதோ இன்றைய சூழ்நிலையில் நல்லதொரு வழிகாட்டலாக இராது. மாறாக இன்னும் பிரிவினைக்கும் பிரச்சினைக்குமே வழிகோலும். இவ்வாறான சில முன்னெடுப்புக்களில் குதித்து அதன் பிள்விளைவுகளை அறிந்து சில இஸ்லாமிய இயக்கங்கள் அந்த ஆசைகளைத் தள்ளிப்போட்டிருக்கின்றன. இவை ஒரு புறமிருக்க நிகழ்கால அரசியல் நிலவரங்களை உணர்ந்து எது சரிஇ எது தவறு என்கிற விடயத்தைத் தமது சமூகத்தினருக்கு உறுதிப்பட எடுத்தியம்ப வேண்டிய கட்டாயம் தற்போது இஸ்லாமியர்களின் சமயம்சார் இயக்கங்களின் மீதுள்ளது.

ஆனால் இதுவரைக்கும் அவ்வாறானதொரு எந்த வழிகாட்டலையும் இந்த இஸ்லாமிய இயக்கங்கள் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. இருக்கின்ற இஸ்லாமிய அரசியல் தலைமைத்துவங்களின் பிழையான போக்குகள் மீதான கருத்துக்களை பகிரங்கப்படுத்தி மக்களுக்கு விளிப்புணர்வு எற்படுத்தவோஇ இருக்கின்ற அரசியல் அமைப்புக்களில் குறைந்த பட்சம் ஒப்பீட்டு ரீதியிலாவது எது சிறந்தது என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்தாமலோ மிதவாதப் போக்கைக் கடைப்பிடிப்பது ஆக்கபூர்வமானதல்ல என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.

'உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையைத் தெரிந்துகொண்டு அதை மறைக்கவும் செய்யாதீர்கள்' (அல்குர்ஆன் 2:42)

எனவே அரசியல் வழிகாட்டலின்றிக் கிடக்கின்ற இஸ்லாமியர்களுக்கு அவர்களை நிகழ்கால நிர்க்கதியிலிருந்து காப்பாற்றவல்ல வழிகாட்டல்களை வழங்கவேண்டும். இந்த வழிகாட்டல் இஸ்லாமியர்கள் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்.

தற்போது இஸ்லாமியர்களுக்கென்று அரசியல் செய்யும் அரசியல் தலைமைகள் செய்துகொண்டிருக்கின்ற சுயநலக் கூத்துக்களைஇ யாருக்கும் சார்பின்றி பகிரங்கமாக மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். இப்படியானவர்களுக்கு வாக்களிப்பது பாவத்திற்குத் துணைபோகும் காரியம் என்றும் அதற்கு நாமே ஒத்துழைப்பு வழங்கிவிட்டு புலம்புவதில் அர்த்தமில்லை என்றும் உணர்த்தவேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்கள் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினரால் ஒடுக்கப்படும் போது அதிலிருந்து தம்மைப்பாதுகாத்துக்கொள்ள அந்தச் சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டுமென்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரிவினை வளர்த்தல் ஆபத்துக்கே வழிகோலுமென்றும் எடுத்துக்கூற வேண்டும்.

எமக்கான அரசியல் கொள்கைஇ இலக்கு இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் அது நடைமுறைப்படுத்தப் படும்போது மாற்று மதத்தவர்களும் மதிக்கும்படி அமையும் என்றும் வரையறை செய்து கொடுக்கவேண்டும். எத்தனை பேர் எந்தக் கூட்டத்தின் பின்னால் நிற்கிறார்கள் என்ற அளவை விடவும் எந்தக் கூட்டம் சமூகத்திற்கான குரலாய் உள்ளது என்பதைப் பொதுமக்களுக்கு அடையாளங்காட்ட வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் துவக்கம் சிறிதளவு எண்ணிக்கையிலிருந்துதான் ஆரம்பமானது. இனவாதம் பேசுவதும்இ துவேசத்தைக் கக்குவதும் சுயநலத்திற்கான அடையாளமே தவிர அது சமூக நலனுக்கான நடைமுறையல்ல என்பதையும் அந்த வார்த்தைகளில் உணர்ச்சிவசப்பட்டு மாட்டிக் கொள்ளல் அபாயமானது என்பதனையும் எடுத்தியம்பவேண்டும்.

மேற்படி விடயங்கள் பற்றிய தெளிவை இஸ்லாமியர்கள் மத்தியில் அவசியம் ஏற்படுத்தியாக வேண்டிய காலகட்டத்திலேதான் தற்போதைய இலங்கை அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதைவிடுத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமது இருப்புக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதைப்போலஇ 'அதுவும் சரிதான்இ இதுவும் பிழையில்லை' என்கின்ற கணக்கில் இருந்துவிட்டால் எதிர்கால அரசியல் தீர்வில் இஸ்லாமியர்களுக்கு 'அரசனுமில்லைஇ புருஷனுமில்லை' என்கின்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் நிறையவே தென்படுகின்றன.

ஆகவே அரசியலில் யார் பிழையான விடயங்களை முன்னெடுத்தாலும் அதனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் மக்கள் மத்தியில் உறுதிப்படத் தெரிவித்து அத்தகையோரை நிராகரிக்குமாறு இஸ்லாமியர்களை அறிவுறுத்தும் திராணியை இஸ்லாமிய இயக்கங்கள் தங்களில் உற்பத்தி செய்யவேண்டிய அதே சமயம் நல்லதொரு அரசியல் கலாசாரத்திற்காய் எந்தவொரு அமைப்பு உழைத்தாலும் முயற்சித்தாலும் அதையும் மக்களுக்கு அடையாளங்காட்டி ஆதரவு வழங்கவேண்டிய கடமை இஸ்லாமிய இயக்கங்களைச் சாரும். மாறாக இஸ்லாமிய இயக்கங்களின் கனவுஇ இலக்குஇ இருப்பு- இதனால் சேதமாகிவிடும் என்று அஞ்சி அதைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டால் இந்த இஸ்லாமிய இயக்கங்களும் சுயநலப் பட்டியலுக்குள் சுருண்டுவிட்டதாகவே கொள்ளவேண்டிவரும்.

- ரா.ப.அரூஸ்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 469 guests online


Kinniya.NET