திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

கிண்ணியாவும் தலைமைத்துவமும்.!! (எதியோப்பியா விலிருந்து முபாரக் அலி)

mubarak ali உலகில் எந்த மூலைமுடுக்கிலிருந்தாலும் நாலாந்தம் கிண்ணியா சம்பந்தமான செய்திகளை வாசித்து வருவது எனது வழக்கம். அத்துடன் பேஸ்புக் மூலமாகவும் பல கிண்ணியா அன்பர்கள் என்னுடன் தொடர்புவைத்துள்ளார்கள்.

இன்று கிண்ணியா இலங்கையில் சனத்தொகையில் கூடிய ஒரு முஸ்லீம் கிராமம். கிண்ணியா மண் பல சிறப்பான தலைவர்களை உருவாக்கியுள்ளது. மேற்படிப்பைக் கொண்டவர்களின் தொகை இன்று கிண்ணியாவில் கணிசமான அளவு கூடியிருப்பதுடன், கிண்ணியாவில் மட்டுமல்ல, இலங்கையில் பல இடங்களிலும், ஏன் உலகில் பல பகுதிகளிலும் கூட தம்மாலான சேவைகளை ஆற்றி வருவது கிண்ணியா வாழ் மக்கள் பெருமைப்பட வேண்டியதொரு விடயமாகும்.

கிண்ணியாவின் தலைமைத்துவத்தைப்பற்றி இணைய தளங்களில் எமது கிண்ணியா இளைஞர்கள் விமர்சிப்பதை அடிக்கடி காணக்கூடியதாகவுள்ளது. கிண்ணியா மண் பல அரசியல் வாதிகளை, அமைச்சர்களை மற்றுமன்றி, அன்மைக்காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரைக் கூட உருவாக்கியுள்ளது. இந்த விதமான பாக்கியங்களை அல்லாஹ் எமது மக்களுக்கு அளித்தும், ஏன் எமது மக்களுக்கு மத்தியிலே ஒரு ஏமாற்ற நிலை நிலவுகின்றது. முக்கியமாக எமது இளைஞர்கள் - எமது எதிர்காலத்தலைவர்கள் - எமது சமுதாயத்தை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள் ஒருவிதமான அதிர்ப்தி வட்டத்தில் சுழல்வதாகத் தெரிகின்றது.

ஒரு நல்ல தலைமைத்துவம் இல்லாத சமுதாயத்திற்கு ஒருசிறப்பான எதிர்காலம் அமைவது எப்போதும் ஒரு கேள்விக்குறிதான். அதே நேரத்தில் ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்கும், தெரிவு செய்யும் ஒரு பெரும் பொறுப்பு மக்களின் கையில் உள்ளது. சிறப்பானதொரு தலைமைத்துவத்தை உருவாக்க தலைமைப் பதவிகளை வகிப்பவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டுமா? அல்லது மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்பதை சற்று ஆராய்வோம்.

தலைமைத்துவம் என்பது அல்லாஹ்வினால் வழங்கப்படும் ஒரு அமானிதமாகும். அல்லாஹ்வைப் பூரணமாக நம்பி, அவனுக்காகச் சேவையாற்றும் மனப்பான்மை, மக்களை அனுசரித்து, மதித்து நடக்கும் உள்ளம், நீதி நியாயமாக நடக்கும் குணம், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவக்கூடிய மனிதத்தன்மை, கெட்டதை விலக்கி நல்லதை உருவாக்க வழிகாட்டும் பெருந்தன்மை ஒரு தவைனிடம் இருக்கவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

பணம், பதவி, பட்டம் என்பன இன்று வரும், நாளை பறந்துவிடும்;. அதுமற்றுமன்றி அவை ஒரு மனிதனுக்கு பெரும் சோதனையுமாகும். கியாம நாளில் அல்லாஹ் பணம், பதவி, பட்டங்கள் வழங்கப்பட்டவர்களிடம் மிகவும் தீவிரமாக, அவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்தினோம் என விசாரிப்பான். அதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் நாம் இல்லா விட்டால், தண்டனையை அனுபவிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே ஒரு தலைவன் தனக்குக் கிடைத்திருக்கும் தலைமைத்துவத்தை சிறப்பான முறையில் அல்லாஹ்விற்காக மக்களுக்கு சேவை செய்யப் பயன்படுத்த வேண்டும்.

கிண்ணியா, அல்லாஹ் எமக்கு தந்திருக்கும் ஒருபாக்கியமான பூமி, கல்வி அறிவு கொண்ட மனிதவளம் மற்றுமன்றி, பல இயற்கை வளங்களையும் கொண்ட ஒரு பொன்விளையும் பூமி, இப்படிப்பட்ட ஒரு பூமியிலே பலர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். பல பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றித் தடுமாறுகின்றார்கள். பல அத்தியவசிய சேவைகள் நன்கு இயங்குவதில்லை. அல்லாஹ் எமக்களித்த தலைமைத்துவத்தைக் கெண்டு இன்று கிண்ணியாவில் பெரும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி கிண்ணியாவின் தரத்தை மேலும் உயர்த்தியிரக்கலாம். எனப் பலரும் விமர்சிப்பதை இணைய தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் பலரிடமிருந்து நான் அறியப்பெறுகிறேன்.

buhari-junction

அல்லாஹ் எமது ரிஷ்கை எங்கு வைத்துள்ளானோ அங்குதான் எமது வாழ்வும் அமையும். அவ்வகையில் நான் கிண்ணியா மண்ணில் தொடர்ந்து வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கவில்லை. அல்லாஹ் அஹ்லம். ஆனால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று அங்கு கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய, சேவை செய்யக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். தற்போது ஆபிரிக்காவில், எதியோப்பிய நாட்டிற்;கு வந்து சேர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலமாக உதவக்கூடிய பாக்கியத்தை தந்துள்ளான். இவ்வகையில் கிடைக்கும் அறிவையும், அனுபவத்தையும், ஆற்றலையும் வைத்துக் கூறுவதானால் கிண்ணியாவில் ஒரு நல்ல தலைமைத்துவம் உருவாகி, அனைவரும் ஒன்றுபட்டுழைத்தால் கிண்ணியாவை, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஒரு குருகிய காலத்தில் ஒரு பிரபல்யம் வாய்ந்த கிராமமாக கட்டியெழுப்பலாம்.

கிண்ணியா இலங்கையிலே ஒரு பெறிய முஸ்லிம் கிராமம் என்ற வகையில் எமக்குப் பெரும் பொறுப்பும் உண்டு. நாம் ஒரு முன் மாதிரியான கிராமமாக மாற வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியிலே முன் மாதிரியாக நடக்கக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். நாளைய எமது தலைவர்களான இன்றைய இளைஞர்கள் எமது சமுதாயம் முன்னேர தங்களால் இயன்ற அனைத்துச் சேவைகளையும் அல்லாஹ்விற்காக ஆற்ற முன்வரவேண்டும். பெறியோர்களும், பெற்றோர்களும் தமது அனுபவத்தையும், அறிவையும் அல்லாஹ்விற்காகப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒன்றுபட்டுழைக்க வேண்டும். படித்த பல மக்கள் பல பொறுப்பு வாய்ந்த பல பதவிகளில் உள்ளார்கள். அவர்கள் அல்லாஹ்விற்காக, அவனின் திருப்தியையும் கூலியையும் மனதில் வைத்து சேவை ஆற்ற வேண்டும். மார்க்க அறிவும், உலக அறிவும் கொண்ட பல பெரும் உலமாக்கள் எமது கிண்ணியாவில் உள்ளார்கள். அவர்கள் அல்லாஹ்விற்கு மட்டும் பயந்து அனைவருக்கும் நேரான வழியை காட்டக்கூடிய ஒளிவிளக்குகளாக மாறவேண்டும். தாய்மார்களே நீங்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்து அதன்படி ஒழுகி உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டுங்கள். உங்கள் பிள்ளைகள் ஸாலிஹான பிள்ளைகளாக வளர ஐந்து நேரத் தொழுகைகளிலும் துஆச் செய்யுங்கள்.

எம்மால் மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால் மனம் வைத்தால் எம்மை நாம் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாறக்கூடியவர்களின் தொகை அதிகரிக்கும் போது ஒரு சமுதாயத்தில் அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு பெரும் மாற்றங்களை உருவாக்கித் தருவான்.

ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்கும் பொறுப்பு ஒரு சிலரின் கைகளில் மற்றுமல்ல எம் அனைவரின் கைகளிலுமுள்ள ஒரு பெரும் பொறுப்பாகும். உலகில் எங்கிருந்தாலும், கிண்ணியா என் உள்ளத்திலுள்ளது கிண்ணியாவின் முன்னேற்றத்திற்காக, என்றும் எனது துஆப் பிரார்த்தனை உண்டு. எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் என்றும் நேரான பாதையைக் காட்டுவானாக.

(எம். முபாரக் அலி)


About Mubarak Ali:
 

A Kinniyan, and 16 years in Norwegian local politics as Member of City Council for Stavanger (The oil capital of Norway) Involved in Humanitarian, Democracy and Development Aid works for UNDP, UNHCR, EU & OSCE. At present working at UNHCR Ethiopia in assisting South Sudan refugees coming into Ethiopia.

ethi

 

Share
comments

Comments   

 
-1 #1 Siyam 2016-07-11 13:50
Masha Allah. Allah kareem
Quote | Report to administrator
 
 
0 #2 Essaeeytef 2018-02-03 11:59
Running late with the deadline for your work? Then we are your reliable assistant in paper help.

Get ready to ask for our assistance when you need essays, research or course works, reports, case studies, etc.
Our experts have seen it all and are ready to start working on your assignment right away. Go for it!

Get an essay: http://bit.ly/2ykp1Qw or any other homework writing help


http://bit.do/dR5jr

write my psychology paper lilies
help writing my criminal law paper cja354
type my essay jcc
need someone write my paper yc.edu
buy free essay bzwbk


http://cutt.us/teN2Y
Quote | Report to administrator
 
 
0 #3 enatTow 2018-03-10 21:43
В этом что-то есть. Теперь мне стало всё ясно, благодарю за информацию.

---
который я уже неделю исчу пак стадионов для fifa 15 скачать, скачать фифа 15 на пк на русском и фифа 15 кряк торрент: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html скачать fifa 15 на ios бесплатно
Quote | Report to administrator
 
 
0 #4 lecalAxok 2018-03-12 18:48
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Могу это доказать.

---
Замечательная мысль скачать fifa 15 mod, скачать английский комментатор для fifa 15 а также кряк фифа 15: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html скачать fifa 15 16 17
Quote | Report to administrator
 
 
0 #5 JosephGetle 2018-03-13 22:25
You mentioned this exceptionally well!

cialis and stomach pain cialis generic bulk cialis powder cialis 100mg: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #6 JosephGetle 2018-03-14 13:32
Nicely put, Thanks.

cialis viagra same time generic cialis fa male assumere il cialis generic cialis: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 431 guests online


Kinniya.NET