புதன்கிழமை, ஏப்ரல் 25, 2018
   
Text Size

பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் புதுமையான யாத்திரை

Namal 03

கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் புதுமையான யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர். அது சிவனொளிபாத மலை யாத்திரையாகும்.

நாமல் ராஜபக்ஷ எம்பியின் யோசனைக்கு இணங்க இளம் உறுப்பினர்களின் இந்த யாத்திரையில் அமைப்பாளர் போன்று பிரதம பங்கேற்றவர் உதித்த லொக்குபண்டார.

நாமல், உதித்த ஆகியோரின் ஆலோசனைப்படி இளம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஒருவார காலம் மாமிச உணவுகள் எதனையும் உட்கொள்ளாது துறவிகளாக இருந்த பின்னரே யாத்திரையில் அவர்கள் பங்கேற்றனர்.

கடந்த திங்களன்று இந்த பயணத்துக்காக சகல இளம் உறுப்பினர்களும் இரவு 11 மணியளவில் நல்லதண்ணியில் உள்ள வைட் எலிபன்ட் ஹோட்டலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இருந்தும் இந்த பயணத்துக்காக நாமல், உதித்த, தாரானாத், கனக்க, மனுஷ, ரொஷான், எரிக் ஆகிய உறுப்பினர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் லலித் பியும் பெரேரா ஆகியோரே இறுதியில் வந்திருந்தனர்.

ரொஷான் ரணசிங்க மற்றுமொரு விருந்தினரை இப்பயணத்துக்காக அழைத்து வந்திருந்தார். அது அவரின் மனைவியாவார்.

இரவு 11.30 மணிக்கு இப்பயணத்துக்கு போக தயாராகுமாறு நாமலின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. யோசித்த ராஜபக்ஷவிடம் இருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. தாமும் இப் பயணத்தில் பங்கேற்பதற்கு வருவதாகவும் சிறிது தாமதித்து செல்லுமாறும் யோசித்த கேட்டார்.

அவர் வரும்வரை அதிகாலை 1.20 மணியாகும் வரை உறுப்பினர்கள் ஹோட்டலில் தங்க நேரிட்டது.

சாதாரண குழுவினரைப் போன்று இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பித்தனர். சில பக்தர்கள் நாமல் உட்பட குழுவினரை அடையாளம் கண்டு ஆச்சரியப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஹெலிகொப்டர் வசதிகளை கைவிட்டு சாதாரண மக்களுடன் இவர்கள் யாத்திரை மேற்கொண்டமை புதுமையான நிகழ்வுதான்.

இளைஞர் குழுவினர் மகர தொரண அருகில் வந்த போது ரொஷான் அவரின் மனைவியுடன் பின்னால் வந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. (பாதுகாப்பு) அதிகாரிகளைப் பார்க்கினும் வேகமாக நாமல், யோசித்த உட்பட பலர் முன்னே பயணித்தனர்.

தாரானாதி, கனக இவர்களுள் முக்கியமானவர்களாகத் தெரிவித்தனர். குளிரிலும் முகம், வாய் கழுவிக் கொண்ட இவ்விருவரும் மதப் பாரம்பரிய நிகழ்வுகளுடன் மீண்டும் பயணத்தில் இணைந்தனர். 20-25 வயதுக்குட்பட்ட இளம் உறுப்பினர்கள் மிக வேகமாக முன் சென்றனர். எவருக்கும் அண்மிக்க இயலாத வண்ணம் நாமல், யோசித்த உட்பட சிலர் முன்னே பயணித்தனர்.

ரொக்கட்டைப் போன்று வேகமாக சென்ற ஒருவரும் இருந்தார். அவர் ரோஹித்த ராஜபக்ஷ. தமது சகோதரர்களை சிவனொளிபாதமலை செல்வதை தெரிந்து கொண்ட உடன் மற்றும் பல நண்பர்களுடன் ரோஹித்த வந்திருந்தார்.

கடைசியாகப் பயணித்த இவர்கள் நாமல் ஆகியோர் மஹகிரி தம்பய பகுதியில் கடந்தபோது அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

சிவனொளிபாதமலை மண்டபத்துக்கு சென்ற இந்த மூன்று சகோதரர்கள் உட்பட இளைய உறுப்பினர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சிவனொளிபாத மலையின் வரலாறு அதன் மகத்துவம் தொடர்பாக இதுவரை தெரியாத பல விடயங்களை பெரிய மதகுவானவர் எடுத்துக் கூறினார்.

சுற்றாடலை நன்கு ரசித்து நீண்ட நேரம் செலவிட்ட இவர்கள் மீண்டும் கீழ் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

சாதாரண மக்களை ஆச்சரியப்படுத்தி மக்களுடன் பேசி உறவாடி பரிகாசங்களை பறிமாறி கவிபாடி இவர்கள் கீழே இறங்கினர்.

ஏறியதைப் பார்க்கினும் விரைவாக இவர்கள் கீழே இறங்கினர்.

இதனால் அவர்களுக்கு கைகால்களில் வேதனை ஏற்பட்டது. இரத்தினபுரி பலாபத்தல ஹோட்டலிலேயே தங்கி குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்கள் தத்தமது வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.

சட்டத்தரணி லலித் பியும் பெரேரா

தலைவர்/பணிப்பாளர் நாயகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்


Namal 02

Namal 01


Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...25609
மொத்த பார்வைகள்...1987496

Currently are 251 guests online


Kinniya.NET