திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018
   
Text Size

பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

a0222c9e8ff1eeb653c7f2a760d09b82 XL[1]

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்துள்ளது.

 

இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை அமுலிலருக்கும்

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தனஇ பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

டிசம்பர் மாதம் 4இ 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் னெ;றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

அரசியலமைப்பின் 33 (2) (இ) உப பிரிவுக்கு அமையஇ பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி கொண்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, அவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த அதிகாரத்தை,அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை இதனால் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என,சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே 33 (2) (இ) உப பிரிவு கொண்டுள்ள அதிகாரத்தை 70 (2) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கவேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர்இ 33 (2) (இ) உப பிரிவினால் ஜனாதிபதிக்கு கிடைக்கும் அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு 70 (1) பிரிவு அதனை கட்டுப்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிஇ தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ மக்கள் விடுதலை முன்னணிஇ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16507
மொத்த பார்வைகள்...2147723

Currently are 232 guests online


Kinniya.NET