வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

மாணவர் இடைவிலகலில் செல்வாக்கு செலுத்தும் பெற்றோர் செயற்பாடுகள்!

 

IRIN 0825 1

இடைவிலகல் என்ற எண்ணக் கருவானது நாடளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாக கல்விப் புலத்தினுள் தோற்றம் பெற்றுள்ளது. பொதுக் கல்வியைப் பூர்த்தி செய்யாது இடையில் பாடசாலையை விட்டு மாணவர் கள் இடைவிலகுவதே இடைவிலகலாகும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனம் பாடசாலையாகும். வரையறுக்கப்பட்ட இலக்குகளை யும் நோக்கங்களையும் கலைத் திட்ட அமுலாக்கத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் பாடசாலைச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

பாடசாலைக் கல்வியை தொடர்ச்சியாகப் பெறாது பல்வேறு காரணங்களினால் மாணவர்களால் கல்விக் காலமெனக் கூறப்படும் 6 – 14 வயது வரையாவது கற்றல் வாய்ப்பினை பலர் தொடராமல் விடுகின்றனர். இடை விலகல்களுக்கான காரணங்களில் பெற்றோரின் செயற்பாடுகள் மிக முக்கிய பங்கு கொண்டதாகக் காணப்படுகின்றது.

மாணவர்களின் கல்வியில் ஆரம்பம் முதல் செல்வாக்குச் செலுத்தும் மிகப் பிரதானமான நிறுவனமான குடும்பம் சிறப்பானதாக அமையும் போதுதான் அவர்கள் கல்வியையும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

பிள்ளைகளின் உளவிருத்தி, உடல் விருத்தி, வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள், சமூக ஊடாட்டத்துக்கான கல்வி கலாசாரம் பற்றிய அடிப்படை விளக்கங்கள், சமயம் மற்றும் ஒழுக்கக் கல்வி மூலம் பெறப்படும் தொழில்சார் அறிவு போன்றவற்றை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

கல்வி சிறுவர்களின் உரிமையென ஐ. நா. சாசனம் முக்கியப்படுத்து கின்றது. சிறுவர்களின் கல்வி வாய்ப்பானது,

அ) பாடசாலையில் சேர வேண்டிய வயதுக்குரிய காலத்தில் சேராதோர்

ஆ) பாடசாலையில் சேர்ந்தவர் களில் பொதுக் கல்வியைத் தொடராமல் இடையில் விலகிச் செல்வோர் என்ற வரையறைக்கு இணங்க கல்வியை தொடராமல் இடைவிட்டுச் செல்வதனையும் பூரணமாக தொடராமல் இருப்ப தனையும் அவதானிக்க முடிகிறது.

பிள்ளை சிறந்த பெறு பேற்றைப் பெற வேண்டுமென்றால் வீட்டில் கல்விச் சூழல் நன்கு சிறப்பாக அமைய வேண்டும். ஆயினும் பெற்றோரது பல்வேறு செயற்பாடுகள் பிள்ளைகளின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் பாடசாலைகளில் தொடர்ச்சியாக கல்வி கற்காமல் இடைவிலகுகின்றனர்.

* பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுக்காமை.

* பிள்ளைகளின் நடத்தை மீது கவனமின்மை

* கல்வியின் முக்கியத்துவத்தை உணராமை

* பிள்ளையின் செயற்பாடு பற்றி கவனயீனமாக செயற்படல்

* பிள்ளை மீதும், பிள்ளைகளின் கல்வி மீதும் அக்கறையின்றி செயற்படல்

* பெற்றோர் விவாகரத்து பெறல், பிரிந்து வாழுதல்

* மதுபாவனையும் அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளும்

* பெற்றோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லல்

* பலதாரத் திருமணம்

* பெற்றோரின் வறுமையான வாழ்க்கை நிலைமை

* பெற்றோரின் வறுமையின் காரணமாக தொழிலுக்குத் துணையாகப் பிள்ளைகளை பயன்படுத்துதல்

* பெற்றோர் பிள்ளை தொடர்பு சிறப்பாக அமையாமை

* பெற்றோர் கல்வி கற்காதவர்களாக இருப்பதனால் கல்வியின் தார்ப்பரியம் புரியாமை

இத்தகைய பல காரணங்களைக் குறிப்பிடலாம். இக் குறைபாடு களை நீக்கி பிள்ளைக்கு சிறந்த பாடசாலைக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். அந்த வகையில் பெற்றோர் - பிள்ளை தொடர்பானது பின்வருமாறு சிறப்பாக அமைய வேண்டும்.

* நாளாந்த நிகழ்வு பற்றி ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்

* அன்பை வெளிப்படுத்துதல்

* புதிய சொற்களை கொடுத்து வாசிக்க ஊக்கப்படுத்தலும், சொல் வளத்தை விரிவாக்குதலும்

* கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், செயற்பாடுகளில் பிள்ளைகளைப் பங்குகொள்ளச் செய்தல்

* வழிகாட்டல் ஆலோசனை களை ஆசிரியரின் உதவியுடன் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுத்தல்.

இவ்வாறாக பிள்ளைகளின் நடத்தைகளை பெற்றோர் கண் காணித்தும், அடிப்படைத் தேவை களை குறைபாடு இல்லாமல் பெற்றுக் கொடுத்தும் இடைவிலகல் செயற்பாட்டைக் குறைப்பது இன்றியமையாதது ஆகும்.

எனவே மாணவர்களின் கல்வியில் பெற்றோர் காட்டுகின்ற ஆர்வத்திற்கும், வழங்குகின்ற ஊக்கத்திற்கும், பிள்ளைகளின் பெறு பேறுகளுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகி யுள்ளது. அந்தவகையில் பிள்ளைகளின் கல்வியில் ஒவ்வொரு பெற்றோரும் அக்கறையும், ஆர்வமும் கொள்ளும்போதும் பிள்ளைகள் கல்வியில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுவ துடன் தொடர்ச்சியான முறையில் கல்வி வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளக்கூடியவராகவும் காணப் படுவர். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் சிறப்பான கல்வி வாய்ப்புகளைப் பெறுவதோடு, இடைவிலகல்களுக்கும் முற்றுப்புள்ளியினை தேடிக்கொள்ள முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

அ. வேணுதாஸ்...-

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 228 guests online


Kinniya.NET