வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

மாணவ உள்ளத்திற்கு...

 schoolstu[1]ஆர். சதாத் - ஆசிரியர்'

மாணவர்கள் இன்று தான் எவ்வாறு படிப்பது என்று அலை மோதும் சிலர், எந்த நேரமும் பிரத்தியோக வகுப்புக்கள் என இன்னும் சிலர். பத்தாம், பதினோராம் உயர்தரம் கற்போர்களில் காதல் காதல் என லவ் மோகத்தில் சிலர். இவ்வாறு பல தரங்களில் மாணவர்கள் பள்ளிக்காலங்களை கழித்து வருகிறார்கள்.

நவீன தொடர்பு சாதனங்களால் குழந்தைகள் எல்லாம் இன்று சின்னப் பெரியவர்களாக மாறி வருகிறார்கள். அத்தோடு நுகர்வுக்கலாசாரப் பொறிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகும் நிலையும் உருவாகி வருகிறது.

இதற்கு நல்லதோர் உதாரணம். "4 டொபி இருக்கிறது 5 பேர் சமமாக எப்படி எடுப்பது" என ஒரு மாணவனைக் கேட்டால் ஒருவனைக் கொன்று விட்டால் 4 பேரும் ஒவ்வொன்றாக எடுக்கலாம் என்கிறான்.

இது எதனைக்காட்டுகிறது. ஒன்றைத்தான் நுகர்வதற்காக பிற உயிர்கள் கூட பலியாகும் எண்ண அபாயம் தோற்றுவிக்கப்படுகிறது. உண்மையில் அம்மாணவன் எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் ஒருவன் விட்டுக்கொடுத்தால் மிகுதி நான்கு பேருக்கும் சமமாகப் பகிரலாம் என விடை கூறினால் அவனிடம் மனிதப்பன்பு ஊட்டப் பட்டுள்ளது என உணரலாம்.

இன்று கல்விக்கேற்ற குழந்தைகளே உருவாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கேற்ற கல்வி எப்போது உருவாக்குவது என்பது கல்விச் சமூகம் சிந்திக்க வேண்டியவொன்று.

புத்தகத்திலேயே உள்ளதையே விடையாகக் கூற வேண்டுமானால் புத்தியுள்ள பிள்ளை எப்படி உருவாகும் கற்றவர் ஓர் இடத்தில் ஒழுங்கில்லாத சொற்களைப் பேசினாலோ, ஒழுங்கற்ற செயல்களைச் செய்தாலோ...... பாமரனான ஒருவன் கேட்கிறான் "படித்தவன் இப்படிப் பேசலாமா?" என்று எனவேதான் படிக்காதவனுக்குத் தெரிகிறது படிப்பு எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று.

ஆனால் படிப்பை எழுதும் அறிஞர்களுக்குத் தெரியவில்லை படித்தவர்கள் படித்தவர்களாக நடக்க வைக்க எப்படிப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று.

எனவேதான், மாணவர்கள் முதலில் தான் எதற்காகக் கற்க வேண்டும் என்பதை முதலில் உணர வேண்டும். படித்து எந்தத் தொழில் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவன் சமூகத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

இதனால் தான் படிப்பு முதலில் சமூகத்தில் பிறர் மதிக்க, பிறருடன் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் படிப்பு சொல்லித்தர வேண்டும் "அதற்காகத்தான் நான் கற்கிறேன்" என்று உறுதி எடுக்காத வரை கல்வியல் விருப்பம் (Interest) இருக்காது.

சில மாணவர்கள் எதிர்ப்பால் கவர்ச்சியால் மோகங் கொண்டு முதலில் காதல் வலையில் விழுகிறார்கள். இவ்வாறானவர்களுக்கு உறங்கும் போதும், புத்தகத்தை விரிக்கும் போதும் எண்ணங்கள் விரும்பியவர்களைச் சுற்றியே வட்டமடிக்கும். இது எல்லை மீறும் போது சுற்றியிருப்பவர்களைப்பற்றி எந்தக் கவனிப்பையும் எதிர்பார்க்காது.

சிந்தனைகள் எல்லாம் நாம் தாய் தகப்பனை எதிர்த்து திருமணம் முடித்தாலும் இப்படி வாழலாம், அப்படி வாழலாம், இந்த வழியில் சம்பாதிக்கலாம், இந்த வீட்டில் வசிக்கலாம். என்ற நேரான சிந்தனைகளே அதிகம் வரும். மறையான சிந்தனைகளை, காதலின் உச்ச கட்டம் சிந்திக்கவிடாது.

தான் செய்யும் காரியத்தை நியாயம் கற்பித்து சாதிக்கவே முனையும். அப்படியொரு ஆற்றல் இக்காலக் காதலுக்குண்டு.

ஆனால் மூன்று நான்கு மாதம் சென்றதும் தான் சீரான சிந்தனைக்கு காதல் மயக்கம் இடம் கொடுக்கும் அதன் பின்தான் "நாம் என்ன காரியத்தைச் செய்தோம்" என எண்ணங்கள் பிறக்கும்.

ஏனெனில் பள்ளிப்பருவத்தில் வரும் காதல்; அன்பால் வருவதல்ல வெரும் கவர்ச்சியாலும், மோகத்தாலும் வருவது. அந்தக் கவர்ச்சியூம் மோகமும் கழிந்து விட்டால் ஒன்றுமே மிஞ்சுவதில்லை. இந்த உண்மையை பள்ளிப் பருவ வாலிப நெஞ்சங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

இன்று பிரத்தியோக வகுப்புக்கள் என அலை மோதும் பள்ளிப் பாலகர்களை பார்க்கும் போது ஆளுமையின் அறைப்பகுதி இல்லாமல் செயல் படுவதாக எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பாடத்துக்கு இரண்டு மூன்று இடங்களுக்குச் செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பகல் 2.30ற்கு ஆரம்பித்து மாலை 8.00 மணி வரை புத்தகமும் கையமாக அலையும் போது சமூகத்திற்கு இசைவான பிள்ளையாக உருவாவது எப்படி? "ஐந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையூம்?"

சில பெற்றார்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்க மாட்டார்கள். காரணம் கேட்டால் பிள்ளை படிப்பில் கவணம் செலுத்தாதாம் படிப்பில் அக்கறையில்லாமல் போய் விடுமாம், அதில் வரும் காட்சிகள் பிள்ளையைக் கெட்ட வழிக்குத் திருப்பி விடுமாம்.

ஆம் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களிடம் ஒரு கேள்வி இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களின் வீட்டில் எல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லையே. அந்தப்பிள்ளைகள் அனைவரும் கெட்ட வழியிலா செல்கிறார்கள்?

ஆகவேதான், பிள்ளைகளுக்குதேவையான நிகழ்ச்சிகளை பார்க்கவும் தேவையற்ற நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருக்க வைப்பதும் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. ஒன்று இரண்டு தீமை இருக்கிறது என்பதால் கிடைக்க வேண்டிய பல நன்மைகளை தடை செய்து வருகிறோம்.

மாணவர்கள் தவறுகளை உணர்ந்து விலக வேண்டுமே தவிர, காரணம் காரியம் சொல்லாமல் அதைச் செய்யாதே இதைச்செய்யாதே என்றால் ஏன் அதைச் செய்யக் கூடாது என எதிர் கேள்வி கேட்டு அதைச் செய்யத்தான் பார்க்கும் இது குழந்தை இயல்பு என்பதை மறக்கக் கூடாது.

Share
comments

Comments   

 
0 #1 Guesthoria 2018-04-19 22:50
guest test post
bbcode: http://temresults2018.com/
html
http://temresults2018.com/ simple
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 237 guests online


Kinniya.NET