ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் விஞ்ஞான பரிசோதனை கண்காட்சி!

கல்வி செய்திகள்

news2013-10-03 10.33.30

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விஞ்ஞான ஆசிரியர்கள் மற்றுமு; மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான பரிசோதனை கண்காட்சி இன்று பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூட மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

   

மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வண்ணம் கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது!

கல்வி செய்திகள்

 sunethradevi bmvசிறிய தொகையினரான 7 இலட்சம் பேருக்கு மட்டும் அல்லாது 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வண்ணம்  கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது என்றும் தான் பிழையான தீர்மானம் எடுத்தால் அது பிறந்துள்ள மற்றும் பிறக்கப்போகும் பரம்பரைக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா கூறினார். 

பெப்பிலியான  சுனேத்ராதேவி மகளிர் வித்தியாலயத்தில் கிறீன் போட் மற்றும் பியானோ வழங்கும் நிகழ்ச்சி 2013-09-20 ம் திகதி கல்வி அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்விக் கொள்கை தயாரித்தல் நினைத்த மாத்திரத்தில் செய்ய முடியாது என்று சுட்டிக் காட்டிய அமைச்சர் பல்கலைக் கழக பேராசிரியர்கள், கலாநிதிகள், கல்விச் சிறப்பு நிபுணர்கள் ஆகியவர்களுடன் இணைந்து தேசிய கல்வி வேலைத் திட்டம் தயாரிக்கப்படுகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

1 ம் தரத்தில் இருந்து 5 ம் தரம் வரைக்கும் தாய் மொழியில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று உலகம் விரும்புகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

   

சுற்றாடல் முன்னோடி கழகத்துக்கான பதக்கம் சூட்டும் நிகழ்வு!

கல்வி செய்திகள்

 news260920131526

சுற்றாடல் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 'பரிசர பியச' எனும் திட்டத்தின் பிரகாரம் பாடசாலைகளில் சுற்றாடல் முன்னோடிக் கழகம் அமைக்கப்பட்டு வருகின்றது

   

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்புகள் முன்வைப்பு நிகழ்வு!

கல்வி செய்திகள்

 newsSariyana Naaram3

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக்கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக்கிடையிலான முன்வைப்பு நிகழ்வு 14.09.2013 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

   

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல!

கல்வி செய்திகள்

 

bandula gunawardena300pxபகிடி வதையில் ஈடுபடும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது உடல், உள ரீதியாகவோ அல்லது வேறு எந்தவிதமான முறையிலோ பகிடிவதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் உடனடியாக கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கல்வியியல் கல்லூரிகள் என்பது சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் ஒரு சிறந்த இடம். இது மன நோய்க்காரர்களுக்குரிய இடமல்ல. எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்காக தெளிவான மன நிலையுடன் சேவையாற்ற வேண்டியவர்களை உருவாக்கும் இடமே கல்வியியற் கல்லூரிகள் என அமைச்சர் தெரிவித்தார்.

   

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி!

கல்வி செய்திகள்

aaa

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

   

தகவல் தொழினுட்ப ஆசிரியர்களுக்கு கொரிய கல்வித் திணைக்களத்தில் பயிற்சி!

கல்வி செய்திகள்

 

 

korea group2013

 

அதற்கு அமைய நாடு தழுவிய ம்ட்டத்தில் சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வண்ணம் தெரிவு செய்யப்பட்ட தகவல் தொழினுட்ப பாடத்தில் மிகச் சிற்த 19 ஆசிரியர்களும் கல்வித அமைச்சு அலுவலர் ஒருரும் இம்முறை கொரியாவுக்குச் செல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வான் பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு 2013-08-23 ம் திகதி கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா, கல்விச் செயலாளர் திரு அனுர திசாநாயக்க மற்றும்தகவல் தொழினுட்ப கல்விப் பணிப்பாளர் திரு ஜி. எம். நீல் குணதாச ஆகியோர் தலைமையில் இட்ம்பெற்றது. 

   

இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை!

கல்வி செய்திகள்

exam group

2013ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.

   

இனி இன ,மத ,பால் ,ரீதியாக பாடசாலைகள் இல்லை:அமைச்சர் பந்துல!

கல்வி செய்திகள்

news 6377

 

இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ அல்லது ஆண் - பெண் என்ற வித்தியாசத்திலோ இலங்கையில் இனிவரும் காலத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படமாட்டா. ஆனால் ஏற்கனவே இயங்கி வரும் பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்படும்.

   

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை!

கல்வி செய்திகள்

parliament (1)

5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.

   

பக்கம் 8 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 218 guests online


Kinniya.NET