ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வித்துறையை மேம்படுத்த மாநாடு

கல்வி செய்திகள்

 

DSC04937

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடொன்று நேற்று 04.09.2014 வியாழக்கிழமை காத்தான்குடியிலுள்ள சிட்டி பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பாணிப்பாளர் ஏ.எம் அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதி மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்வியதிகாரிகள் கல்விசார் இணைப்பாளர்கள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் மூன்று கோட்டங்களில் 74 பாடசாலைகள் உள்ளன. இங்கு மாணவர் அடைவுமட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் அரசாங்க பொதுப்பரீட்சைகளில் உயர் சாதனை ஈட்டச்செய்வதற்குமான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் பல்வேறு கல்வி மேம்பாட்டுத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது கடமைகள் தொடர்பாகவும் இம்மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டதுடன் சட்டவிதிகள் குறித்தும் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC04943

DSC04917

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 191 guests online


Kinniya.NET