ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

கல்வி செய்திகள்

DSC 4777

திருகோணமலை-ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் கலைவிழாவும் -புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் பாலர் பாடசாலை ஆதிபர் தலைமையில் நடை பெற்றது.

 அனுராதபுர மாவட்ட எல்லைக்கிராமமான ரொட்டவெவ கிராமத்தில் முன் பள்ளி பாலர் பாடசாலை அமைக்கப்பட்டும் அதனை ஆரம்பித்து வைக்க முடியாத நிலையில் என்னிடம் கல்வி பயின்ற மாணவனான அப்துல்சலாம் முகம்மது யாசீம் வீடு வீடாகச் சென்று மாணவர்களை ஒன்றிணைத்து அப்பாடசாலையை ஆரம்பித்து வைத்து தற்போது சிறந்த முறையில் நடாத்தப்பட்டு வருவது தமக்கு மன சந்தோசத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் அதிபர் ஒ.ஏ.ரஹீம் தனது உரையில் குறிப்பிட்டார்.

அரச சார்பற்ற நிறுவனத்தினால் கட்டப்பட்ட இப்பாலர் பாடசாலை ஆரம்பிக்க தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் -ஆசிரியை இருவருக்கு கொடுப்பனவு வழங்க மாதா மாதம் பாடசாலை வரும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களை சந்தித்து ஐம்பது ரூபாய் பணத்தினை சேர்ந்து வழங்கியதினாலேயே தொடர்ச்சியாக இப்பாலர் பாடசாலை இயங்கி வந்ததாகவும் அப்பாலர் பாடசாலையின் ஸ்தாபகர் அப்துல்சலாம் யாசீம் தனது உரையில் தெரிவித்தார். அத்துடன் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளில் அனைவரும் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி -தம்மிக விஜயசிங்க -சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளான அணில் சுவர்ணவீர -கே.ஜி.முத்துபண்டா -ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளி வாசல் பேஷ் இமாம் நசார்தீன்-மற்றும் ஹொரவ்பொத்தான முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் இசாக் - ஆகியோர் கலந்து கொண்டதுடன் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

 (பதுர்தீன் சியானா )

DSC 4662

DSC 4698

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 189 guests online


Kinniya.NET