ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

முஸ்லிம் எய்ட் வானவில் குடும்ப சிறார்கள் லங்கா ஒரிக்ஸ் இன் 'பலாஹ்' பிரிவின் கல்விக்கான புலமைப் பரிசிலைப் பெறுகின்றனர்!

கல்வி செய்திகள்

lo

'லங்கா ஒரிக்ஸ் லீசிங்' கொம்பனியின் இஸ்லாமிய பிரிவான அல் -பலாஹ் நிறுவனம், 15 வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த வானவில் குடும்பத்தைச் சேர்ந்த சிறந்த 15 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசிலை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதற்கு உறுதியளித்தது. இதன்படி, 2015 பெப்ரவரி 18ம் திகதி ஹொரவபொதான மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெய்பர் எனப்படும் 'நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியத்தின்' தலைவர் மரியாதைக்குரிய வெலியமுவபொதான பியரதன தேரர், பாடசாலை அதிபர், முஸ்லிம் எய்ட் ஊழியர்கள், பங்காளர் அமைப்பான 'ஹோப் ஒப் பீப்பிள்' உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மரியாதைக்குரிய பியரதன தேரர் தனது ஆசியுரையின் போது, 'இது போன்ற கிராமம்புற மாணவர்களுக்கு இந்நிதி மிகவும் பெறுமதியானது. இந் நிதியைக் கொண்டு கற்றுத் தேர்ந்து நற்பிரஜைகளாக நீங்கள் மாற வேண்டும், இன, மத வேறுபாடுகள் இன்றி சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு என்பதை நாம் அறிவோம். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும்' என்றார்.

முஸ்லிம் எய்ட் முன்னெடுத்துவரும்; வானவில் குடும்பம் எனப்படும் சிறப்பு நிகழ்ச்சித் திட்டம் அநாதரவான சிறார்களின் கல்வி மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் திட்டமாகும். இன, சமய, பால் வேறுபாடுகளுக்கு அப்பால், மிகவும் வறிய, அநாதரவான சிறார்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை வழங்குவதும், இதனைப் பயன்படுத்தி தமது வாழ்வில் மிகச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் இவ் வானவில் குடும்ப நிகழ்ச்சித் திட்டம் வழிவகை செய்கின்றது.

சமூகத்திலிருந்து வறுமை மற்றும் புறக்கணிப்புகள் காரணமாக இச்சிறார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் கூட, இவர்கள் தமது தலைமைத்துவப் பண்பு மற்றும் சிறந்த ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு அவசியமான தூண்டுதல்களையும் வழிகாட்டல்களையும் இந்நிகழ்ச்சித் திட்டம் வழங்குகின்றது.

முஸ்லிம் எய்ட் தலைமையத்தின் நிதிப் பங்களிப்புகளுடன் 305 சிறார்களும், உள்ள10ர் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புகளுடன் 20 சிறார்களும் தற்போது பயனடைந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் 10 மாவட்டங்களை உள்ளடக்கி மிகவும் ஊக்கத்துடனும் கரிசனையுடனும் செயற்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு முஸ்லிம் எய்ட் இன் உள்ள10ர் பங்காளர் அமைப்புகளின் பங்களிப்பு மிகக் கணிசமானதாகும்.

கற்றலுடன் தொடர்புடைய பிரதான செலவினங்களை கருத்தில் கொண்டு மாதாந்தம் இம் மாணவர்களுக்கு நிதி வழங்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு என்ற நீண்டகால குறிக்கோளுக்கு கல்வி மேம்பாடு எந்தளவிற்கு பங்களிப்புச் செய்யும் என்பதை முஸ்லிம் எய்ட் உணர்ந்து இத்திட்டத்தினை இலங்கையில் மாத்திரம் அல்ல, உலகிலுள்ள 13 நாடுகளிலுள்ள தனது கிளை அலுவலகங்களினூடாக இத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மேற்படி நிதியானது குறிப்பிட்ட சிறார்களின் கல்வி மற்றும் அவர்களின் சகோதரர்களினதும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் குறிப்பிட்டளவிற்கு பயன்படுத்தப்படுகின்றது. தன்னம்பிக்கையையும் மன ஊக்கத்தையும் அநாதரவான சிறார்களுக்கு வழங்கி உன்னதமான எதிர்காலத்தை அவர்களுக்கு உறுதிசெய்வதில் பங்களிப்புச் செய்வது வானவில் குடும்ப நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குறிக்கோளாகவும் அமைகின்றது.

lo2

lo3

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14510
மொத்த பார்வைகள்...2071434

Currently are 185 guests online


Kinniya.NET