திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

கல்வி செய்திகள்

pulamai tharakai -1

 

வாமி மற்றும் கல்வி அபிவிருத்திக்கான மன்றம் என்பன இணைந்து கடந்த 2014 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

காத்தான்குடி ஹிஸ்புள்ளா கலாச்சார மண்டபத்தில் கல்வி அபிவிருத்திக்கான மன்றத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து சிறப்பித்தார்.

திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பார,பொலநறுவ போன்ற மாவட்டங்களில் தமிழ் மொழி மூலம் தரம் 05 புலமைப்பரசில் பரீட்சைக்குதத் தோற்றி சித்தி பெற்ற 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மாவட்ட அரசாங்க அதிபா் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள,;பெற்றார்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்)

3

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21675
மொத்த பார்வைகள்...2078599

Currently are 385 guests online


Kinniya.NET