திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

இலக்கியம்

காலாவதியான பாசங்கள்

aa

குழந்தையாய் பேசி
குதுகலப்படுத்தினாய் அன்று...
இன்று வளர்ந்துவிட்டதாலா
மனதை வதைக்கிறாய்?

 

தீக்குச்சி

250px-Streichholz

 இருளால் சூழ்ந்த குடிசைகளுக்குள்

 வெளிச்சத்தை கொடுத்து விட்டு

விளக்குகள் பெருமை கொள்ளலாகுமா?

வெளிச்சத்தை ஏற்றிய எமக்கல்லவா பெருமை.

 

கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாகஇ 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருட்டு!

stupid-crime5

 

ஜும்மா தினத்தில் நடந்தேறிய

 அந்த சம்பவத்தின் வெறுப்பு

எல்லோருக்குமானதாக விரிந்து

அவரவர் முகங்களில் சிவந்து

கோபம் பீறியிட்டது.

உஹது மலையின் நீளத்திலான வலி

உடலினுள் வியாபித்திருந்த கணமதில்

உள்ளம் நெருஞ்சி முள் குத்துதலோடு

அசமந்து போய் வெறுப்பின் உச்சத்தில்

அவையகம் முழுதுமான வியர்வை

சொட்டிக் கொண்டது.

பள்ளிவாசல் உண்டியலின் சில்லறைகள்

சிலது காற்றில் கலைந்த கடதாசி போல

சிதறிக் கிடக்க

உண்டியல் வெற்றாக மீதமாகி.

திருடியவனுக்கு எல்லோரினதுமான சாபம்

பள்ளி முனையில் ஒரு பெரும்

காற்றைப் போல வீசி.

இரு பாட்டம் மழையைப் போல வியாபித்து.

கதைகள் நீள.

நான் ஸுன்னத் தொழுகையை முடித்து

வாசல் தாண்டுகிறேன்.

உண்டியல் காசுகளைத் திருடிச்சென்றவன்

எனது செருப்பையும் அணிந்து போயிருப்பான்.

 

                                                                        (ஜே.பிரோஸ்கான் கவிதை)

 

சுதந்திர தினம்

download

 

நாளை மறுநாள்

 சுதந்திர தினம்

என்னூர் தெருக்கடைகளிலெல்லாம்

தேசியக் கொடி

விற்பனைக்கு.

                                                                                                                   -கிண்ணியா ஜே.பிரோஸ்கான்-

 

பக்கம் 5 - மொத்தம் 38 இல்

நம்மவர் படைப்புக்கள்.

டிசம்பர் 09, 2017
4313 வெலிகம ரிம்ஸா முஹம்மத்

''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்"

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப்.…
மேலும் வாசிக்க...
ஜூன் 08, 2016
14183 எம்.சி.நஸார்

புனிதமிகு ரமழானே நீ வருக

அகிலத்து ஆண்டவனாம்அருள் மிகு அல்லாஹ்வால்தன்னடியார்க்குத் தந்திட்டபுனிதமிகு ரமழானே நீ வருக
மேலும் வாசிக்க...

குட்டை ஊரிய மட்டைகள்!!!

டிசம்பர் 03, 2015 9943 ஜவ்ஹர்
ஆப்பிழுத்த குரங்காகி அவமானம்தோள் சுமந்துநகைக்க இடம் தந்துநடைப் பிணமாய் இப்பூமி!!
மேலும் வாசிக்க...

உனை நினைத்து அழுகிறேன்!!!

நவம்பர் 18, 2015 9957 ஜௌபர் ஹனிபா
நீ விட்டுச் சென்ற இடத்தில்நின்று நிரைவு செய்யவல்லோன் யாரும் இல்லைவலியோன் எங்குமில்லை!!
மேலும் வாசிக்க...

மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்

நவம்பர் 10, 2015 10297 Naleej
- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார்…
மேலும் வாசிக்க...

எங்கேடா என்னைச் சுமந்த பாதை..?

அக்டோபர் 09, 2015 10081 கிண்ணியா சபருள்ளா.
மறு கரை கூட்டிச் சென்றுபஸ்ஸில் ஏற்றி விட்டபாதையிப்போ எங்கே பயணம் போயிற்று.
மேலும் வாசிக்க...
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21664
மொத்த பார்வைகள்...2078588

Currently are 358 guests online


Kinniya.NET