ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கவிதை

திருட்டு!

stupid-crime5

 

ஜும்மா தினத்தில் நடந்தேறிய

 அந்த சம்பவத்தின் வெறுப்பு

எல்லோருக்குமானதாக விரிந்து

அவரவர் முகங்களில் சிவந்து

கோபம் பீறியிட்டது.

உஹது மலையின் நீளத்திலான வலி

உடலினுள் வியாபித்திருந்த கணமதில்

உள்ளம் நெருஞ்சி முள் குத்துதலோடு

அசமந்து போய் வெறுப்பின் உச்சத்தில்

அவையகம் முழுதுமான வியர்வை

சொட்டிக் கொண்டது.

பள்ளிவாசல் உண்டியலின் சில்லறைகள்

சிலது காற்றில் கலைந்த கடதாசி போல

சிதறிக் கிடக்க

உண்டியல் வெற்றாக மீதமாகி.

திருடியவனுக்கு எல்லோரினதுமான சாபம்

பள்ளி முனையில் ஒரு பெரும்

காற்றைப் போல வீசி.

இரு பாட்டம் மழையைப் போல வியாபித்து.

கதைகள் நீள.

நான் ஸுன்னத் தொழுகையை முடித்து

வாசல் தாண்டுகிறேன்.

உண்டியல் காசுகளைத் திருடிச்சென்றவன்

எனது செருப்பையும் அணிந்து போயிருப்பான்.

 

                                                                        (ஜே.பிரோஸ்கான் கவிதை)

 

download

 

நாளை மறுநாள்

 சுதந்திர தினம்

என்னூர் தெருக்கடைகளிலெல்லாம்

தேசியக் கொடி

விற்பனைக்கு.

                                                                                                                   -கிண்ணியா ஜே.பிரோஸ்கான்-

 

awa

விருதுக்கான பட்டியல்களில் எனது பெயரும் உச்சரிக்கப்படுவதை
கேட்கையில்...........
காண்கையில்..........
என்னிரு காதுகளையும் கண்களையும் பிய்த்தெடுத்து
அவைகளை இம்மண்ணிலேயே புதைத்திடவும்
அத்துளைகளினூடே ஒழுகும் குருதியை
இந்நிலத்திற்கே உரமாக்கிடவும் வேணுமென்றெல்லாம்
தோணுகிறதெனக்கு

 

69

அன்றைய நாளின்
குளிர் ஜூரத்தில் தள்ளாடுகையில்
துணைவியின் துணையால் நிறைவேறிப்போன
ஒரு நிகழ்வுக்கப்பால்.

 

பரிதாபம்

MICCAF Banner_2

 

கனவுகளின் அர்த்தங்கள் பற்றி

 எனது நண்பர்களில் ஒருவர் மௌலவியிடம் வினவிக் கொண்டிருந்தார்

அவரது கருத்தின் வெளிப்பாட்டில் விளக்கங்கள் இருப்பதாக

உணர்ந்து கொண்டிருந்த போது

சாத்தானின் குண இயழ்புடைய ஒருவர்

எங்களது சம்பாஷணைக்குள் இடைறு செய்து

ஒரு குடிகாரனைப் போல உளரிக் கொண்டிருந்தார்

மேலும் அவரது குரல்கள் மேலோங்கிச் செல்கையில்

நேற்றைய தினம் இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்றிருந்ததாகவும்

பெண்களோடு குறும்புத் தனங்கள் புரிந்ததாகவும்

பெருமைப் பட்டுக் கொள்ளும் அவர்

முந்தைய நாள் மௌலவி ஒருவரது துவிச்சக்கர வண்டியையும்

களவாடிச் சென்றதாய் சொல்லி

சந்தோசித்துக் கொள்கையில் அவர் மீதான என் கோபம்

சிவத்தலாகிக் கொண்டிருந்தது

இனி இவருடைய கசப்பான காட்சியிலிருந்தும்

நான் மீள்தலாக என்னுகையில்

அவரொரு சுய அறிவில்லாத மனநோயாளி என்பதாய்

கவளைதோய்ந்த முகத்துடன் சொல்லி நகர்கிறார் ஒருவர்

அக்கணம் அடுக்குமாடி போன்று உயர்ந்திருந்த

அவர் மீதான என் கோபம்

சுக்கு நூராகி சாம்பலாய்ப் பறப்பதை

எனக்குள் உணர்கிறேன் ஒரு பரிதாபத்தின் கனத்தோடு

                                                                                                           (ஏ.கே.முஜாரத்)

 

பக்கம் 6 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14501
மொத்த பார்வைகள்...2071425

Currently are 203 guests online


Kinniya.NET