ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கவிதை

மீலாதுன் நபி தின கவிதை


mee
யாரசூலூள்ளாஹ்!
நீங்கள்
அகிலத்திற்கோர் அருட்கொடையாக ;
வந்துதித்ததில்
நாங்கள் அடையும்
சந்தோஷம்
இந்த உலகத்து
மூலை முடுக் கெல்லாம்
பட்டுத் தெரித்து நிற்கிறது
பளிங்கு போலும் ஒளிர்கிறது!

 

பாவம்

jesus-christ-0206 03

 

பாவம் பாவத்திலிருந்து பிறந்து

 பாவமாக வளர்ந்து

பாவமாகவே சிரிக்கிறது.

இன்னும் பாவம் நதியாக கடலாக

மேலும் மழையாக பொழிகிறது.

பாவத்தை பாவமாக பார்த்து பழகுவதும்

பாவத்தை பாவமென்று அறியாமலும்

பாவம் பாவமாக செய்தலாகி

பாவக் குழிக்குள் விழுந்து

பாவமாக எழுந்து நிற்கிறோம்.

பாவம் பாவத்தோடு சதிசெய்து

பாவம் நம்மை தோற்கடித்து

பாவமாக பார்க்கிறது.

பாவம் நாம்!

பாவத்திலிருந்து தொடங்கி

பாவத்திலேயே முடிக்கிறோம் வாழ்தலை

தினம் இரவாகி விடிவதுபோல.

        ஜே.பி.கவிதை-

 

என் மரணம்

download (3)

எனக்காக நிச்சயிக்கப்பட்டுடிருக்கும் என் மரணம்

 நூற்றிமுப்பது வோல்ட் மின்சார தீண்டலால்

என்னை விசிரி எறியப்பட்டு

எனது உயிர் பெரும் கீசல் சத்தத்துடன்

பிரிந்து செல்லலாம் அல்லது

நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது

ஏதோ ஒரு வாகனம் அடி வயிறு கூசும்படியான

வேகத்தோடு வந்து நான்

சென்று கொண்டிருக்கும் பேருந்தில் மோதி

எனது உடல் சுக்கு நூறாகி

சிதறிய என் துண்டங்களில்

காகங்களும் மொய்;க்கலாம்.

அல்லது பயங்கற தோற்றத்தில் மேலோங்கி வரும்

பெருத்த அலைகளில் நான் சிக்குண்ட படி

மூச்சுத்திணறி ஸகிதாகியும் போகலாம்.

இல்லையெனில்...

எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் திடிரென்று

எனது உயிர் ஒரு பழுத்த இலையைப் போல

கழன்றும் விழலாம்.

இப்படியும் இல்லையெனில் நான்

சுகயீனப்பட்டு குறுகிய நாள் எல்லைக்குள்

என் மரணம் எவ்வித நோய்வினையும்

உணர்த்தாத படி

சுகமான வலியின் விரவலோடு

பிரிந்தும் செல்லலாம்.

இவ்வாறாக என்னால் எதுவும் உறுதிப்படுத்திச்

சொல்ல முடியாத என் மரணத்தை

அல்லாஹ் ஏதோ ஒரு வடிவத்தில்

தயார் படுத்தி வைத்திருக்கிறான் என்பதில்

நான் உறுதியாக இருக்கிறேன்.

என் மரணத்திற்குப்பின்

எவரும் அழவேண்டாம் என்றும்

சொல்லிக் கொள்ள விரும்புவதோடு

முடியுமானவரை எல்லோரும்

ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுங்கள்

என்றும் நல்லடக்கம் செய்யும் வேளையிலும்

இன்னும் ஐந்தொகுத்து தொழுதலுக்குப் பின்னரும்

எனது கப்ரு பூஞ்சோலையாய் மணம் கமல

துஆ புரியுங்கள்.

எனது ஜீவித நாட்களில் எவருக்கேனும்

தீங்கிளைத்திருக்கலாம் அல்லது

எனது வார்த்தைகள் மனசுகளை

ஒரு பட்டாம் பூச்சியின் சிறகைப்போல

உடைத்திருக்கலாம்.

என்னை பெரும் மனதோடு மன்னித்து விடுங்கள்.

என் மரணத்திற்கு முன்

எவருக்கேனும் கடன் தர முடியாமல்

போயிருக்கலாம்.

நான் எல்லை தாண்டியபடி நேசிக்கின்ற

எனது உறவுகளிடம் மிகத் தாழ்மையுடன்

பெற்றுக் கொள்ளுங்கள்

என்னுடன் நெருங்கி பேசி சிரித்து

மகிழ்ந்த ஒவ்வொரு சிநேகிதர்களின்

மரணத்திற்குப் பின்னரும்

என் ஆன்மா இப்படித்தான் மிகத்

தூய்மையுடன் சொல்லிக் கொள்கிறது.

                                                                  -ஏ.கே. முஜாரத்-

 

எனது இரண்டாம் உலகம்

 li

பேசப்படாத சொல்லிலிருந்து
எனது வர்த்தைகளைத் தொடங்கியிருக்கின்றேன்
அன்பின் உணர்வுகள்
சமநிலை கடந்து
புலன்கள் பிரிந்து
கோடி வேட்கையின் திறவுகோலாகிவிட்டது

 

 

dw

வருடங்கள் அழிகிறது
வயதும் கழிகிறது
வரனும் வந்து சேரவில்லை
வரதட்சனையால்
வாழ்க்கை இன்னும் மாறவில்லை!

 

பக்கம் 7 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14502
மொத்த பார்வைகள்...2071426

Currently are 204 guests online


Kinniya.NET