வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கவிதை

மரண வார்த்தைகள்

 

ban

வேர்விட்ட ஆலமரமாய்
விழுதுகளுடன் – நான்
நிழல் பரப்பி நின்ற காலங்களின்
இறுதி இராப் பொழுது
இதுவாகத்தான் இருக்க வேண்டும்

 

ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து...

images (2)

 

 

 

 

 

 

 

நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி

 நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்

அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த

வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று

வாசித்து முடித்திருந்தது காலம்

 

பரீட்சயங்களை மீறிய பரபரப்பாய்

பெரும் பரப்பை தன் பிடிக்குள் வைத்து

கோலோச்சியவனால்

மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை

அது வென்றுபோனது அவனை வீழ்த்தி

 

இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை

கொழுகொம்பு இன்றி குலை முறிந்து

ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி

ஒரு காலத்தில் குகைகள் ஏகி

சிங்கத்தை கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்

இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்

உருகிஇஉருகி கரைந்தன அவனை சுற்றியிருந்த

மலைகளும்இகூழாங்கற்களும்

ஊர் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்

இலாபஇநஷ்ட்டங்கள் பற்றி சிலாகித்தன

பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு

உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்

 

அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து

பின் குறிப்புகள் தலை நீட்ட

நிஷப்தம் கலைய வேண்டும் என்றே

பிரளையம் முடக்கி விடப் படுகின்றது

 

அவன் உள்ளவரை

தெவதூதர்களை போலும்

தாசில் தாரர்கள் போலும் இருந்தவர்கள்

ஆனால்;இப்போது

மேல் சொன்ன எதிலும் இல்லாத

'களிசடைகளாய்'வசைகளால் வாழ்த்த

அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன

சொத்தை பங்கிடும் பட்சா தாபங்களில்!

ஏலவே தெரிந்திருப்பின் அவன்

எப்போதோ இறந்திருக்கலாம்!!

 

(ரோஷான் ஏ .ஜிப்ரி )

 

மரணம் பற்றிய கனவு

Love 6

அந்த நடுநிசி என்னை
நவம்பர் மாதத்து மழையின்
ஒரத்த சப்தத்தின் ஆலாபனையில்
உறங்க வைத்திருந்தது.

 

ஊமை உள்ளங்கள்

23396 588695171159549_99291921_n

பாசத்தில் வேசங்களை பார்த்து
பழகிய எனக்கு உன் பாசமொரு
இன்ப அதிர்ச்சியடி!

வாசத்தை மணந்ததுண்டு
உண்மை நேசத்தை
உணர்ந்ததில்லை
இன்று உன்னால் உணர்ந்தேனடி
இவ்வுலகில் மனித ஜென்மம்
மரணிக்கவில்லையென்று!

 

 

Abdul Majeed 2

கிண்ணியாவின் கண்ணியத்தைக் காத்து! – அரசியல்
கீத்தியுடன் பெரும்புகழ் பூத்து!
தன்னலம் காக்காத தலைவனே! – நிழல்
தருவாகி என்றைக்கும் நின்றனே........!

 

பக்கம் 8 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17733
மொத்த பார்வைகள்...2074657

Currently are 344 guests online


Kinniya.NET