ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கவிதை

கவிதைகளின் தேடல்

 1d95c0ae490211e1a87612313804ec91 6[1]

கவிதைகள்
அலைந்து
கொண்டிருக்கின்றன

காற்றில்
அறைபட்டுக் கசங்கி...

 

ரமழானே உன் பிரிகையால் உள்ளங்கள் உருகிருடுதே......!

Half-Moon-1

 

வளமான ரமழானே...

 

வற்றாத பேரூற்றே....!

ஒருமாதம் நீ வந்து...

எம்முன்னே

நிலைகொண்டு

எம்மைவிட்டு...

ஓய்வெடுக்க போகின்றாய்...!

 

ஓராண்டில் ஒருமாதம்..

உங்களுக்காகவே

நான் வருவேன்...

என்னை நீங்கள்

வெற்றிகொண்டு...

அளவில்லா நன்மைகளையும்..

நிகரில்லா அருள்தனையும்...

பெற்றிடுங்கள்

என்று

நம்முன்னே

ஓடிவந்து....

நமக்காகவே

நாடிவந்து...

எம்மை சுற்றி நின்ற

ரமழானே..!

நீ.........

எம்மைவிட்டு

ஓய்வேடுக்கப்போகின்றாய்...!

 

தராவிஹ்இ வித்ரு...

என....

தினந்தோறும்

'சுன்னத்' கலை

மனமார நீர் செய்து...

அளவில்லா நன்மைதனை

நிறைவாக பெற்றிடுவீர்...

என...

நீ எங்களை

வேண்டிநின்றாய்...!

 

தான தருமங்கள்

தயங்காமல் செய்திடுவீர்..

தன்னிகரற்ற பரிசுகள்

உமக்குண்டு..

என...

நீ எம்மிடம்

சொல்லி நின்றாய்...!

சலவாத்துஇ திக்ருகளை...

நாமணக்க உரைத்திடுவீர்

சங்கை மிக்க ரமழானில்..

ஒப்பற்ற பரிசு

உமக்குண்டு...

என்று...

நீ எம்மிடம்

காத்து நின்றாய்...!

 

ஏந்தியவர் கரமெல்லாம்..

ஏகனின்

அருள் நிறையும்...

ஏங்கியவர் நெஞ்சமெல்லாம்

ஏந்தல் நபி..

வழி செறியும் என்று

நீ....

அழகாக கூறி நின்றாய்..!

 

சாந்தி விளக்கேற்றி....

வந்த..

சங்கை மிக்க ரமழானே..!

சாந்திருப்பாய்

என்றிருந்தோம்...

அனால்...

நீ...........

இன்று 'சலாம்'

உரைக்கின்றாய்...

 

உன்னை...

பிரிய மனம் இன்றி

உள்ளங்கள் உருகிடுதே...

வேதனை கூடிடுதே....

 

இரவோ... பகலாக...!

பகலும்.... இரவாகும்...!

அதிகாலை அந்திவேளை

அரங்கேறும்...

அதிசய விந்தைகளை

இனி நாங்கள்...

காண்பதற்கு

ஈர்-ஐந்தோடு...

ஒருமாதம் வேண்டுமே...!

 

சங்கை மிக்க ரமழானே..!

கவலையுடன்

காத்திருப்போம்...

கடு கதியில் வந்துவிடு...

 

கல்பின் கரை போக்கும்..

உயர்வான

ஔடதமே..!

அருள் நிறைந்த

ரமழானே..!

நீ இறைவனிடம்

உனக்கான உபசரிப்பை..

விபரிக்கவிருக்கின்றாய்....!

 

குர் ஆனின் மாதமான..

ரமழானே...!

நாம் உன்னை..

முழுமையாக

கவணிக்கவில்லை

உன்னை நாம்..

நிறைவாக

வரவேற்கவில்லை

புனிதமிகு ரமழானே..!

உன்னை நாம்..

அகமகிழ

உபசரிக்கவில்லை

என்றாலும்...

நீ சென்று..

தப்பாக விபரித்து

விடாதே...!

 

தவறுக்கு மத்தியில்..

தடுமாறி

தவித்துக்கொண்டிருக்கும்...

எங்களை..

இந்த ஒரு முறையாவது

மன்னித்து விடு....!

 

இன்ஷா அல்லாஹ்...

வரும் ஆண்டு

விருப்பாக சந்திப்போம்....

வெறுப்பாக..

நாம் உன்னை..

நெருங்க மாட்டோம்....!

 

அதற்காக எம்முடன்...

நீயும்..

ஒரு முறை

இறைவனிடம்..

பிராத்தனை செய்....

''இணையற்ற ரஹ்மானே..!

 

இருகரம் ஏந்துகின்றோம்..

ஒருகணம் எங்கள்

பிராத்தனையை

ஏற்றுக்கொள்..

ஒப்பற்ற வல்லோனே...!

 

யா அல்லாஹ்....

அருள்மிக்க ரமழானை

நீ வளமாக...

எமக்களித்தாய்

தரமான நல்லமல்கள்

நிறைவாக...

தந்திருந்தாய்....!

யா அல்லாஹ்...!

உனது...

பொக்கிசங்களை

பொத்தி காக்க

மறந்துவிட்டோம்...

உன் கட்டளையை

நிறைவேற்ற

தவறிவிட்டோம்...

இப்பொழுது

உணருகின்றோம்

ரஹ்மானே...!

அதற்காக

உளம் உருகி

பிராத்திக்கின்றோம்

வல்லோனே...!

எங்களை

மன்னித்துக் கொள்.................!

 

கொஞ்சமான...

எமது உபசரிப்பை யாவது

மொத்தமாக...

ஏற்றுக் கொள்............

மன்னிப்பாலனே...

யா அல்லாஹ்......!

நாம் நோற்ற...

நோன்பினையும்

புரிந்த நல்மல்களையும்

நீ மனமுவர்ந்து...

ஏற்றுக்கொள்...!

 

கவலையுடன்...

இருகரம் ஏந்துகின்றோம்

யா அல்லாஹ்.....!

கண்ணீருக்குள்

உளம் புதைத்து...

தயவுடன்

இறைஞ்சுகின்றோம்..

 

மறையளித்த இறையோனே...!

ரமழான் மாதத்தை

உபசரித்தவர்களின்

கூட்டத்தில்...

எம்மையும் சேர்த்து

அருள்புரிவாயாக....

ஆமீன்.....ஆமீன்.....

யாரப்பல் ஆலமீன்.....!!

 

 

எம்.எம்.றியாள் புல்மோட்டை
                                

 

 

நோன்புப் பெருநாள்

1eid copy

 

மீண்டும் பிறை தேடும்

வேட்டையை துவங்கி விட்டோம்

இது நம் விழாக் காலம்

 

உண்மை அறிந்தவள்!

1Untitled-1 copy

வெயிலில் எரிகிறாளா

குளிரில் உறைகிறாளா

உணவு உண்டாளா

உறக்கம் தொலைத்தாளா

என்ன செய்து கொண்ருப்பாள்?

 

கைச்சேதப்பட்டு இப்படி ஆனாளா

அல்லது – பிள்ளைகள்

கைவிட்டதனால் இப்படி ஆனாளா?

 

பாதையோரம் அவளுக்கு வீடு

உடைந்த குடை

அந்த வீட்டின் கூரை!

 

வேளாவேளைக்கு உணவு?

படைத்தவனுக்குத் தெரியாதா

படியளக்க?

ஏதோ சாப்பிடுகிறாள்!

 

ஒரு போத்தல் தண்ணீரை

மூடியில் ஊற்றியூற்றிக் குடிக்கிறாள்..

தண்ணீரின் பெறுமதி

எம் எல்லோரையும் விட

அவளுக்குத் தெரிந்திருக்கிறது!

 

சொந்தங்கள் இல்லை – அதனால்

சோகங்களும் இல்லை

பொதியொன்றைத் தவிர

அவளிடம் வேறெதுவுமே இல்லை!

 

உலகம் நிரந்தரமில்லை என்பதை

உலகுக்கு அறிவிக்கும்

ஞானியா அவள்?

 

அதனால்தான்

பேராசை,பொறாமை

டாம்பீகம், வீண்பெருமை

எல்லாம் மறந்து

அவளது உலகில்

இன்பமாயிருக்கிறாளா?

 

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 

வீதியை காணவில்லை !

prisoner

 

காலையில் எழுந்து

கதவை திறந்தேன்

வானம் என் வாசலில்

வீழ்ந்து கிடந்தது !

 

பக்கம் 10 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 217 guests online


Kinniya.NET