திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

கவிதை

உன்னில் பிழையெனில் மாத்திரம்

 

11225460 386034638249124_3275907836182471598_n

துயர் பின்னப்படுகின்ற இரவுகளில்
தூக்கம் தொலைந்தே போய் விடுகிறது.

கற்றுத் தெளியாதவன் பித்துப் பிடித்து
நாதியற்று நடுத்தருவுக்கு வந்து
விதியின் தலையில் வினையாட்டைக் கொட்டி
வேடிக்கை பார்க்கிறான்.

சொந்த செலவில் சூனியம் செய்கின்ற 
சூட்சுமம் யாருக்குத்தான் வாய்க்கப் போகிறது.
தேசத்தின் தோஷம் பேசுபவருக்கு
இது ரொம்பவே வார்க்கிறது.

நான் உன்னைத்தான் சொல்கிறேன்.
போகும் வழியில் தயாராய் இரு.
வாழ்க்கை உன்னை அழைத்துச் செல்லும்.

நஸார் இஜாஸ்
கிண்ணியா

 

இன்னொரு கீதம்

 

11540947 388782721307649_4987910099545985037_n
பாவப்பட்ட முகமூடிக்குள் பதுக்கப்பட்டுக்
கிடக்கிறது எனது உம்மாவின் குரல்
அந்த மத்திய ஐரோப்பாவில்.

ஸியோனிசத்தின் துருப்புச் சீட்டுக்களை
கறள் துடைக்கக் கூடிய உணர்வுகள்
என்னில் மலிந்து போய்க்
கிடக்கின்ற போதிலும்
சிதறியடித்த பூகம்பத்தில்
பதறிப் போய்க் கிடக்கும் உள்ளம்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

காஸாவின் எல்லைக்குள் நஞ்சருந்தும்
உம்மத்துக்களை எண்ணியெண்ணியே 
அழிகிறது இயற்கை.
தொழுகிறது உலகம்.
தொல்லைகளைத் தாங்கியதால்
பரிதவிக்கும் மனங்கள் பரந்து கொண்டேயிருக்கிறது.

நஸார் இஜாஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1533789 939000082831066_8138616360240942162_n

நோன்பிருந்து 
மனம் குழைந்து
சினம் மறந்து
நலம் ஓதிக் குரானை
வழி நடந்திடுவோம்!
என்றும்!!

ஐவேளை தொழுவதற்காய்
பள்ளியிலே அமர்ந்து
நாமறந்து நாவிழந்து
சொல்லிட்ட வம்பை
கையேந்தி இரைந்திடுவோம்
மறந்திட இறையினிடம்!!

இம்மாதம் போல
எம்வாழ்வில் எம்மாதமும்
குத்தகைக்காய் எடுத்திட
விண்ணப்பம் செய்திடுவோம்
அவனிடத்தில் கையேந்தி
கண்ணீர் சொரிந்து!!

கையேந்தி இரந்திடுவோர்
மனங்குளிர கையெடுத்து
கொடுத்திடுவீர் 
இறையிடத்துக் கையேந்து முன்னே
உனை இறப்பு தொடு முன்னே
கொ டை மறுத்திடாதே!!

அவன் பார்வை நலவாக
உன்மேலே இருந்திட
இரந்தவர்கேட்டிடும் பிராத்தனைகள்
உனை சிபார்சுசெய்யும் 
அவனிடத்தில் - இதை
என்றும் மறந்திடதே!

 

-ஜவ்ஹர் -

 

 

123098427[1]

 

குட்டக் குட்ட நிமிர்கிறார்கள்

வெட்ட வெட்ட முளைக்கிறார்கள்

யார் இவர்கள்?

 

என் மண்ணில் பொய் அரசியல்!

4

பொய் வீதிகள்

பொய் வாக்குருதி

பொய் பிரச்சாரம்

பொய் நற்பு

பொய் உத்தரவு

பொய் அழைப்பு

பொய் விருந்து

பொய் அன்பளிப்பு

பொய் அரசியல்

இன்றும் என் மண்ணில்!

 

பக்கம் 2 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21679
மொத்த பார்வைகள்...2078603

Currently are 413 guests online


Kinniya.NET