ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

 buddha-lessons

போதிமர மாதவனே புதியதொரு பிறப்பெடுத்து
பொல்லாங்கு எல்லாமே புவியிருந்து நீக்கிடுவாய்!
சாதி,மதம் இனமென்ற சாக்கடையில் மூழ்கியுள்ள
சண்டாளர் உள்ளத்தின் கறையாவும் நீக்கிடுவாய்!

வழிபாட்டுத் தலமனைத்தும் புனிதமென்று நினையாமல்
வாய்மையினைத் தொலைத்தவரை வழிபடுத்தி அருள்புரிவாய்!
அழிபாடு காணுகின்ற ஆலயத்தை, பள்ளியினை
அருளுருவே மென்மேலும் அழியாமல் காத்திடுவாய்!

பல்குழுக்கள் பாழ்செய்து பாரினையே கொடுக்காமல்
பழிசூடி வழிதவறிப் பலதுயரம் கொடுக்காமல்,
நல்;வழியை நாடுகின்ற நல்லவரய் வல்லவரை
நலம்செய்யும் மனிதர்களாய் உருமாற்றி வைத்திடுவாய்!

ஆசையே அழிவுகளின் அடித்தளமே என்றாய்நீ!
ஆணவத்துச் செருக்காலே அடிபிடிகள் சச்சரவு!
காசையே வாழ்வென்று கருதுகின்ற காதலர்கள்
கண்ணியத்தை மதிக்கின்ற கல்வியினைப் போதிப்பாய்!

களவு,கொலை கற்பழிப்பு கடையுடைப்பு தீவைப்பு
கலவரங்கள் தொடராமல் காசினியை வழிப்படுத்து!
இழவு வீடாகி இடுகாடாய் இவ்வுலகம்
இருக்கின்ற நிலைமாற்றும், இன்பங்கள் தனைத்தோற்று!

ஒவ்வாத நடைமுறையை உளமிருந்து களைந்தெடுத்து
ஒருதாயின் புதல்வரென ஒற்றுமையாய் வாழச்செய்!
இவ்விலங்கைத் தீவினிலே இருமொழியும், மூவினமும்
இறுதிவரை கைகுலுக்கி இருந்திடநீ வழிசமைப்பாய்!

-கிண்ணியா எம்.ரி.சஜாத

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14502
மொத்த பார்வைகள்...2071426

Currently are 207 guests online


Kinniya.NET