ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

இன்புற்று வாழ்வீர் நீவீர்..!

 Ashraff 2

அம்பாறை ஈன்றெடுத்த மண்ணின் மைந்தராம்
அருமையிலும் அருமையான இனத்தின் தோழராம் - நம்
அனைவரையும் உருகவிட்டு மறைந்ததுமேனோ
ஆயிரம்தான் தலைவர்கள் எம்மில் வந்தாலும் - அமைச்சர்-
அஷ்ரபைப் போல் ஒருவரேனும் ஆகிடுவரோ

இனத்திற்காய் பாடு பட்ட ஏந்தலரே - இங்கு
இனபேதம் பார்க்காது சேவை செய்தாரே
இப்புவியில் வாழ்ந்த காலம் நன்மை செய்தாரே
இனி எப்போதும் அவருக்கு இல்லை ஒரு துன்பம் - என்று
ஈருலகும் கூறட்டும் சொபனங்களே

பண்பான மர்க்கமதின் வழியில் நாளும் -செம்
பரிதியாய் வாழ்ந்திடவே பாடம் சொன்ன
பாவலனின் மறைந்த சேதி கேட்டதுமே – இப்
பாரிலுள்ளோர் இதயமெல்லாம் நின்றது போல்
பலகீனமாய் கேட்டதுவே அங்கு மரண ஓலமே
தனித்து நின்று நட்டு வைத்த விருட்சமதை நன்றாய்
தழைக்க வைத்துப் பார்த்து விட்ட உவகையுடன்
தனி மரமாய் எம்மையெல்லாம் விட்டுச்சென்றாரே
தரணியிலே இன்புறவே முடியவில்லையே – இன்று
தவிக்கின்றோம் நாம் அவரின் பிரிவினாலே

அமைச்சர் அஷ்ரப் மறைந்துவிட்டார் என்றவுடன் – ஓர்
அடி எடுத்து வைக்க எம்மால் முடியவில்லை – இனி
அடிமைகளாய் ஆகிடுவோம் என்ற பயம்
ஆண்டவனே இந்நிகழ்வு சொப்பனமாய்
ஆகாதா? என்று அடி மனதிலேக்கம்

ஈன்ற தாய் பெரிதுவக்கும் எந்தலரே
இன இருளகற்ற இப் புவியில் உதித்தவரே – அந்த
இறையருளும் உமக்கிருக்கு மென்றுமென
இரு கரமேந்தி நாங்களும் இறைஞ்சுகின்றோம்
இறை ஜென்னத்துல் பிர்தௌஷும் கிடைத்துவிடும்
இன்புற்று அவ்வுலகில் வாழ்வீர் நீவீர்

இல்முநிஷா பாறூக்
மாஹாத் நகர் இகுறிஞ்சாக்கேணி-௦1.
கிண்ணியா.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14502
மொத்த பார்வைகள்...2071426

Currently are 211 guests online


Kinniya.NET