ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

thankful

உதவிக்கு வெகுமதி
நன்றி!!
உப்பாகிலும் நீ மதி
சிந்தி!!
குறள் பல கூறும்
இந் நன்றி!!
இதை போற்றினார் வாழ்வதில்
நிம்மதி!!

சிறு நன்றி பெரிதென்று
மனதில் பதி!!
உனை உயர்த்திடும் ஜெகமதில்
உன் மதி!!
வாலாட்டும் நன்றிக்காய்
ஐந்தறிவு ஜீவி!!
பகுத்தறிவு உள்ளவன் நீ
இதை மதி!!

நன்றி மறந்தாரை பிரிந்தே
விழகிரு!!
செய்ந்நன்றி கொண்டாரை
சேர்ந்தே இரு!!
செய்ந்நன்றி கொன்றாரை
மனதால் வெறு!!
உன்னுளம் உவக்க மற்றார்க்கு
உதவிடு!!
பலன் பார்த்து கை கோர்ப்பதை
விட்டிடு!!
உயிருருக்கும் வரைக்கும்
நினைத்திடு!!
உலகம் மதிக்கும் மாந்தர் என
பேர் பெற்றிடு!!

ஜவ்ஹர்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 223 guests online


Kinniya.NET