ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

 black-and-white-11

விளக்கென்வைட் நினைவுகள்- 01

எனது மருதாணி மனசு
டீனேஜ் தீவுகளில்
அமர்ந்த படி எழுதும்
அன்புள்ள கடிதம்

காற்று சுவனத்துப் பூங்காவை
நரம்புக் குருதி வரை
வயலின் வாசிக்கிறது

இது திறந்த வெளி
சிறைச்சாலையல்ல
ஆதாம் ஏவாளின் சுதந்திரம்

ஹிரோஷிமா கலவரம்
பல்லாயிரம் மையில்களுக்கப்பால்
நயனங்களால் பாட்டெழுதிற்று

மகரந்த மலர்கள்
பேனாவில் குந்திக் கொள்ள
மனசுக்குள் நூலக மௌனம்

சூரியன் அந்தியை மொழிபெயர்த்து
கிரணங்கள் பொழியும்
நயான் நிலாக்கள்
இதய இன்டர் நெட்டில் சங்கமம்

கவிதை அணுக்களில்
நூலகக் கிரகங்களின் மோதல்
கர்ப்பிணிக் கனவுகளெல்லாம்
வெலண்டைன்ஸ் டே என
கை தட்டுகிறது.


விளக்கென்வைட் நினைவுகள்- 02


விளக்கென்வைட் நினைவுகள்
கலர் கலராய்
ஓசோன் மண்டலத்தில் ஓட்டை போடுகிறது

முதல் நாள்
உன் பேரிச்சம் பழக் கண்கள்
என்னை முன்பதிவு செய்திற்று.

கைகள் கவிதை வரைய
கண்கள் ஓரமாய் - உன்
நைலோன் சுடிதாரை வரைந்திற்று

தோழி ஏதோ பேச
உன் திப்பிலி உதடுகளில்
கோழியின் றெக்கையடிப்பு

நீ மொடலிங் புன்னகையை
பூமிக்கு பரிசளித்தாய்
லியானோவோ டாவின்ஸி அசந்து போனார்

நீ சிரித்தாய்
ஹிந்துஸ்தானியா
கர்நாடக சங்கீதமா என
எனது தோழமைகளுக்குள்
ஒரே கிசுகிப்பு

நீ தெத்துப் பல் தெரிய
சிரிப்பாய் என
எனது தூரிகை காத்துக் கிடக்கிறது
நீயோ தமயந்தி மாதிரி
பல் தெரியாமல் சிரிக்கிறாய்

இன்னொரு
மொனாலிஸா தேவையில்லை என
நினைக்கிறாயோ
இல்லை
நான் சிற்பி ஆவதில்
உனக்கு முரண்பாடுகள் இருக்கிறதா

நீ பொது நூலகம் வந்தாய்
பொதுவாக புத்தகங்கள்
உன்னைத்தான் பார்த்தன
நீ என்னை மட்டும் தான் பார்த்தாய்.

விளக்கென்வைட் நினைவுகள்- 03.


நீ முகம் பார்க்கும் கண்ணாடியில்
நான் முகம் பார்த்தால்
முகப்பருக்களெல்லாம்
சுகப்பருக்களாகி விடுகின்றன

நீ நகை வாங்க
அம்பிகா ஜூவலரி வந்தால்
செட்டியார்த் தெரு
உன்னைத் தேடி வருகிறது
அன்பே நீ
மிகப் பரிசுத்தமான தங்கம்

நாச்சியாத்தீவு குளக்கரைக்கு
நான் குளிக்க வந்தேன்
குளக்கரை எங்கும் அத்தர் வாசணை
நீ குளித்து விட்டு போயிருப்பாய்

சுதா நீ
சுங்கன் மீன் போல அழகு
நீ கூந்தல்
சுமந்த குயில்
உன் கொழுசு ஓசையில்
சிம்பொனியும் மெலோடி இசைக்கின்றது

உன் கூந்தல் என்ன
மெக்ஸிகோ புல்வெளியா
மின்மினிப் பூச்சிகள்
வீணை வாசிக்கின்றன.

நீ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாய்
புல்லாங் குழல் உதடு சுழித்திற்று
பேசிய கைபேசியை வெண்மெத்தையில்
வைத்தாய்
உன் அறை முழுக்க
பூக்கள் பூத்திற்று

இப்படி எத்தனை
பாக் கூடைகளை
பூக் கூடைகளாய்
உன் காதுகளில் சூடியிருப்பேன்.

 

விளக்கென்வைட் நினைவுகள்- 04


முப்பதுகளில்
நிர்ப்பந்தம் என்னுகிற பெயரில்
முறை மச்சானுக்கு நீ மனைவியானாய்
எனக்குள் கலிபோர்னியா காட்டுத் தீ

ஹிருதயத்தில்
சீன மின்சார ரயில்கள்
தாக்கியது போல் கலவரம்

பழைய ஜமீன்களின்
சரித்திர மாளிகையை
ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி அழித்தது போல்
எனக்குள் குப்பென்று இருந்திற்று

ஐம்புலன்களில்
பாவாடை தாவாணி உயர்த்தி
நீ இடது காலால்
உதைத்திற்ற பேரதிர்வு

மன்மத ஹாட்டில்
வாலிப சொஃப்ட்வெயர்
அறுந்து விட்ட
ஒரு கோடி கறுப்புத் துயரங்கள்

வெள்ளை இரவுகள்
இப்போது உறைந்து கிடக்கிறது
எனக்குள்ளிருந்த உமர் கய்யாமின் போதை
ஜமுனா நதிக்கரையில் கரையொதுங்கிற்று

நீ
இந்த நெப்போலியனை
சாய்த்து விட்டாய்
நன்றி கெட்டவளே
புதுக்கல்யாண நாளில்
பாஸான உனக்கு
ஃபெயிலானவனின்
ஒரு கோடி ரோஷ் வாழ்த்துக்கள்

சினேகன் சொன்னது போல்
ஏவாள்
லைலா
ஜுலியட்
அனார்கலி
அமராவதி
மும்தாஜ்
ஸிரின்
ஜென்னி
குரப்ஸ்கயா
இவர்களைப் போல்
எனக்குள் சுதா.

கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ்

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14507
மொத்த பார்வைகள்...2071431

Currently are 218 guests online


Kinniya.NET