ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

 

PT Asees Photo

தனது மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு தாய் தனது மகனிடம் கேட்டுக்கொண்டபோது. அதற்கு விரும்பாத அம்மகன் தாயாருக்கு தன் உள்ளத்துணர்வுகளை பின்வருமாறு தெரியப்படுத்துகிறான்.


' நாகப் பழத்திலேயும்
நற் காசான் பூவிலேயும்
காகச் சிறகிலேயும்
கடுங் கறுப்பு என்
மாமன் மகள்'

இதனை அறிந்த அவனது மாமாவின் மகள் கோபமடைந்து கவி மூலம் அவனுக்கு பதிலளிக்கிறாள்.

' சாலக் குருடா
சன்டாலனே பொடியா
ஊத்து மடுக் கண்ணா
உனக்காரும் கெடைப்பாளோ'

மகள் வருத்தப்படுவதை அறிந்த அவளின் தாய் இவ்வாறு பாடி அவளை தேற்றுகிறாள்.

'பிள்ளைச் சிரிப்பிலேயும்
பிஞ்சு மொகத்திலேயும்
கொள்ளை அழகு எந்தன்
கொழக் கொழுந்தாம் - இந்தக்
கொமரி இவள்'

எப்போதும் கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பவன் மூசா அதனால் அவனுக்கு அந்த கிராமத்தில் ஒரு தனி மரியாதை இருந்து வந்தது. நல்லவன் என்று பெயர் வேற எடுத்திருந்தான். இவனுடைய வாழ்க்கையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டதால் முகம் வாடிப்போனான். இதனை அறிந்த ஒரு கிராமத்தவர் அவனை நோக்கி பின்வருமாறு வினா தொடுக்கிறார்.

'வாசப் பிலாவே
எங்கட
வழிப் பாட்டு கும்பலமே
மூசாந்த நிலவே
ஓன்ட மொகம்
வாடிப் போனதென்ன'

இதனை கேட்டு தனது சோகத்தை பின்வருமாறு புரிய வைக்கிறான் மூசா.

'கட்டிக் கறந்த நாகு
கனுவுக்கு வந்த நாகு
தட்டிச் சொறிந்த நாகு
இப்ப
தலை கெலப்பி பாக்குதில்லே'

இதற்கும் மேலால் ஒரு படி சென்று இவ்வாறும் தொடர்தும் பாடுகிறான்.

'ஒட்டி ஒரவாடி
ஓன்றாக தானிருந்து
கட்டில் கன்ட கன்று
எட்டி என்னை
ஓதைக்குது கா'

ஒரு கூழித் தொழிலாலியின் கஸ்டம் பின்வரும் பாடல் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. கிராமிய நயத்துடன்.
'கல்லுமோ
பச்சைக் கல்லு
வண்டிலும்
ஓட்ட வண்டில்
செல்லுவதோ
ஒடஞ்ச ரோட்டு
சென்றடைய முடியாமே
அழுவுரான்டி
சின்ன ராசன்'

திருமண வயதைக் கடந்து நீன்ட காலமாக வாழ்வின்றி பெருமூச்சோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கன்னியானவள் தன் உள்ளத்துச் சோகங்களை அள்ளிக் கொட்டி தான் சார்ந்த சமூதாயத்தை சாடியவலாய் பினவருமாறு பாடுகிறாள்.

'காதோரம் நரை வந்து
கன்னி என்னைப்
பாக்குது!

என்
கன்னி முத்திப்
போனதற்கு
சாட்சியமும் சொல்லுது!

வந்த வரன்
அத்தனையும்
வழி மாறிப்போவுது!

இந்த மன
ஆசைகளை
புரிஞ்சிக்காமச் செல்லுது!

அழகிருந்தும்
படிப்பிருந்தும்
ஆறும் என்னப் பாக்கலே!

சொள சொளயா
பணங் கொடுக்க
ஏழை எம்மாள் முடியலே!

உடுகின்ற பெரு மூச்சி
ஊட்டுக்குள்ள
நெறையுது!

அது படுகின்ற
சுவரெல்லாம்
படு வானுக்கு சாயுது!'

இலங்கையில் 1970ம் ஆண்டு கலாப் பகுதியில் அறிமுகமானது. இடத்துக்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய வசதி கொண்ட திரான் சிஸ்டர் ரேடியோ அதற்கு முதல் ' குருண்டிக்' இன ரேடியோக்கள் பாவனையில் இருந்தாலும் அவைகள் அளவில் பெரியதாகவும் பெரிய வட்டரிகள் போடக்கூடியதாகவும் உயரத்தில் ஏறியல் கட்டக்கூடியதாகவும் இருந்தது. அதனால் அவைகளை இடமாற்றி கொண்டு செல்வது கஸ்டமான காரியமாக இருந்தது. இந்நிலையில் திரான் சிஸ்டர் ரேடியோவைக் கண்ட ஒரு சிறுமி மன உச்சாகத்தால் குதுகலித்துப் போகிறாள். அவளது சந்தோச அலை பின்வரும் கவி மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

'அப்புகாமி வாங்கி
வந்தார்
யப்பான் நாட்டு
ரேடியோ!

சுப்பு லட்சுமி மக
சுந்தரம்பா
பாக்க அதை
ஓடி வந்தா!

தொட்டு தொட்டுப்
பாத்ததிலே
தொடரான சந்தோசம்!

பட்ட மரம் துளிர்த்தது போல்
பரவசம் அவ
மனசினிலே!

எல்லோருக்கும்
சொல்லிச் சொல்லி
எடுத்து அதை
காட்டி வந்தா!

பல் தெரிய
சிரித்துக் கொண்டு
ஆடிப் பாடி
மகிழ்ந்து வந்தா!'


உதவியாக இருந்த அனைத்து நல்லிதயங்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் ஜே.பி
46/3, பெரியாற்றுமுனை
கிண்ணியா 07
இலங்கை

Share
comments

Comments   

 
0 #1 s.m.safran 2015-04-03 13:47
[fv]poovarasantheevu newes pere F POONEWES ane taip seithu 40404kku sand panneum[/fv]
Quote | Report to administrator
 
 
0 #2 Guestemeri 2018-03-10 20:00
guest test post
bbcode: http://temresults2018.com/
html
http://temresults2018.com/ simple
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 220 guests online


Kinniya.NET