வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

 11

பணிந்தன உள்ளம்!!

சிந்தைகள் சிதைந்திட!
சீறிப் பாயும் கவலைகள்!
சிலையாய் நின்று!
சுகத்துக்கு தடுப்பாய்!
சந்தமாய் நிற்கின்றன!!

ஆக்கம் முழுமையற்று!
அரைகுறை வடிவமாய்!
அழகிழந்து!
அறிவுக்கு முளுக்காய்!
அணை போடுகின்றன!!

பத்தும் பறந்து போக!
பசி நீக்க முடியா!
பஞ்சத்துள் வீழ்ந்து!
பட்டினியை கரம் பிடித்து!
பரிதவிக்கும் பரதேசியாய்!!

மனம் நிறைந்த கற்பனையில்!
முன்னின்று முயன்றிட!
முழு மனதாய் அமர்ந்திட!
மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

தனிமையை நாடி!
தனியா தாகம் தீர்க்க!
துணிந்து பேனா கரம் பிடிக்க!
தூரத்தில் ஓர் அழு ஓசை!
துணையவள் தோளில் செல்ல மகள்!!

பாலுக்காய் அழும் குழந்தை!
பரிதவிக்கும் நிலை காண!
பாட்டை அதன் பாட்டுக்காய்!
பாடையில் விட்டு விட்டு!
பணிந்தேன் என் வீட்டுக்காய்!!

**********

 

என்னை எனக்கே பிடிக்கவில்லை!!

என்னை பிடிக்கவில்லை
எனக்கே என்னை பிடிக்கவில்லை
பரிதாபம் பல கண்டும்
பச்சாதாபம் கொள்ளாமல்
பார்த்தும் பாராமல் இருக்கும்
என்னை பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

ஊரிலே பெரியவனாம் - நான்
உயர்ந்தவனாம் - இருந்தும்
சீர் கேடுகள் பல நடந்தும்
சிறப்புக்கள் பல இழந்தும்
கண்டும் காணதவனாய்
கலங்கம் அற்றும் அற்றவனாய்
இருக்கும் எனைக்காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

மன சாட்சி கொன்றவனாய்
மனித நேயம் அற்றவனாய்
நடக்கும் பல கொடுமைகளை
நீதம் பேசும் உணர்வுகளை
என் வாழ்வுக்காய் அஞ்சி
சுய நலம் கொண்டவனாய்
இருக்கும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

முள்ளந் தண்டோடு வயிரொட்ட
குழியுக்குள் கண்புதைய
வயிற்றுப் பசிக்காய் அலையும்
ஏழை முகம் கண்டும்
இரந்து பல கேட்டும்
முகம் கோணி திருப்பி செல்லும்
என்னிலை காண
பிடிக்க வில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

பேருக்காய் சில பணிகள்
புகழ்பாடும் கனிமொழிகள்
வீணுக்காய் அகமகிழ்ந்து
வீழ்ந்தாரை மேல் மித்தித்து
அவர் வருந்த எனை உயத்தும்
நிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

எனை உயர்த்த பிரிவினைகள்
இவருக்குள் விசம் விதைத்து
அவர் துயரில் சுகம் கண்டு
என் வாழ்வை பலனாக்கி
அவர் வாழ்வை பழுதாக்கி
வாழும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

ஜவ்ஹர் - கிண்ணியா

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17736
மொத்த பார்வைகள்...2074660

Currently are 463 guests online


Kinniya.NET