ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

123098427[1]

 

குட்டக் குட்ட நிமிர்கிறார்கள்

வெட்ட வெட்ட முளைக்கிறார்கள்

யார் இவர்கள்?

சதிகளை தீட்டி அடக்கப்பார்க்கிறோம்

சட்டங்களை திணித்து முடக்கப்பார்கிறோம்

சளைக்கிரார்களே இல்லையே

யார் இவர்கள்?

 

செயல்கள் அத்தனையும்

தீவிரவாதம் என்றோம்

ஒட்டுமொத்த கூட்டத்தையும்

தீவிரவாதிகள் என்றோம்

என்ன திமிர்

இன்னும் நிமிர்ந்து நிற்கிறார்களே

யார் இவர்கள்?

 

உடமைகளை பறித்தோம்

உயிர்களை பறித்தோம்

அனைத்தையும் துறந்தவர்களை

எல்லைவரை துரத்தினோம்

பீனிக்ஸ் பறவைப் போல

மீண்டும் எழுகிறார்கள்

யார் இவர்கள்?

 

பிரார்த்தனையே ஆயுதமாம்

ஒற்றுமையே பலமாம்

இறையருளே ஈடேற்றமாம்

வழிபாடே வெற்றியாம்

இத்தனையும் சொல்கிறார்கள்

இறுதியிலும் வெல்லப்போவதும்

நாமேதான் என்கிறார்கள்

யார்தான் இவர்கள்???

பாத்திமா பெனாஸிர்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 220 guests online


Kinniya.NET