ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

 

1533789 939000082831066_8138616360240942162_n

நோன்பிருந்து 
மனம் குழைந்து
சினம் மறந்து
நலம் ஓதிக் குரானை
வழி நடந்திடுவோம்!
என்றும்!!

ஐவேளை தொழுவதற்காய்
பள்ளியிலே அமர்ந்து
நாமறந்து நாவிழந்து
சொல்லிட்ட வம்பை
கையேந்தி இரைந்திடுவோம்
மறந்திட இறையினிடம்!!

இம்மாதம் போல
எம்வாழ்வில் எம்மாதமும்
குத்தகைக்காய் எடுத்திட
விண்ணப்பம் செய்திடுவோம்
அவனிடத்தில் கையேந்தி
கண்ணீர் சொரிந்து!!

கையேந்தி இரந்திடுவோர்
மனங்குளிர கையெடுத்து
கொடுத்திடுவீர் 
இறையிடத்துக் கையேந்து முன்னே
உனை இறப்பு தொடு முன்னே
கொ டை மறுத்திடாதே!!

அவன் பார்வை நலவாக
உன்மேலே இருந்திட
இரந்தவர்கேட்டிடும் பிராத்தனைகள்
உனை சிபார்சுசெய்யும் 
அவனிடத்தில் - இதை
என்றும் மறந்திடதே!

 

-ஜவ்ஹர் -

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14505
மொத்த பார்வைகள்...2071429

Currently are 221 guests online


Kinniya.NET