வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

உன்னில் பிழையெனில் மாத்திரம்

 

11225460 386034638249124_3275907836182471598_n

துயர் பின்னப்படுகின்ற இரவுகளில்
தூக்கம் தொலைந்தே போய் விடுகிறது.

கற்றுத் தெளியாதவன் பித்துப் பிடித்து
நாதியற்று நடுத்தருவுக்கு வந்து
விதியின் தலையில் வினையாட்டைக் கொட்டி
வேடிக்கை பார்க்கிறான்.

சொந்த செலவில் சூனியம் செய்கின்ற 
சூட்சுமம் யாருக்குத்தான் வாய்க்கப் போகிறது.
தேசத்தின் தோஷம் பேசுபவருக்கு
இது ரொம்பவே வார்க்கிறது.

நான் உன்னைத்தான் சொல்கிறேன்.
போகும் வழியில் தயாராய் இரு.
வாழ்க்கை உன்னை அழைத்துச் செல்லும்.

நஸார் இஜாஸ்
கிண்ணியா

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 246 guests online


Kinniya.NET