ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

கணிதப்புலியும் கடைசி வகுப்பும்! (சிறுகதை)

asasas'ஜரீத் மாஸ்டர்' என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில் சவுக்குடன் நிற்கும் ரிங் மாஸ்டர் உங்களுக்கு நினைவு வந்தால் நீங்கள் வெளியூர் ஆசாமி என்பது உத்தரவாதம்.

நிஜமான ஜரீத் மாஸ்டர் எங்கள் வகுப்பு கணிதபாட ஆசிரியர். பாடசாலை அதிபரின் வலது கரமும் கூட. ஆனால் காற்று சற்றுப் பலமாக வீசினால் போதும், பறந்துவிடுவாரோ என்று சந்தேகிக்கத்தக்க மெல்லிய உடல்வாகு அவருக்கு. சாதாரண 13 சைஸ் டைட் சேர்ட் கூட அவருக்கு 'பேகி' ஸ்டைலிலேதான் இருக்கும். அவரது இடுப்பிலே ட்ரவுசர் வழுகாமல் இருப்பதை எட்டாவது அதிசயமாய் ஆக்கினால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 

நினைத்த தெல்லாம் தவறு (சிறுகதை)

Capture

கிண்ணியா நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது

அந்த கிளினிக் சென்டர். தாய் சேய் நலன் பேனும் நடவடிக்கைகளுக்காக

அது அமைக்கப்பட்டிருக்கிறது.

 

சிறுகதை : நீ எங்கே?

Frog

அறைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது.

'ஓ! யே.. ஏஏ...!'

எதிர்பாராத அந்த தாக்குதலால் நான் பயத்திலே அலறிச் சரிந்து கட்டிலருகே விழுந்து விட்டேன். என் கையிலிருந்த பைல் பேப்பர்கள் சிதறி அறைமுழுவதும் இறைந்ததும் மேசை மீதிருந்த குவளைத்தண்ணீர் சரிந்து தரைமுழுவதும் பரவியது. மூன்று நாட்களாக நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய அத்தனை நோட்ஸும் என்கண்முன்னே நனைந்து பாழாகியது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல உருண்டு கிடந்த தண்ணீர்க்குவளையின் மீது ஏறி உட்கார்ந்திருந்தது அது.

 

பின்னற்தூக்கு (சிறுகதை)

rishan1

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.

 

சிறுகதை: ஆறுகால் விமானங்கள்

awaநேற்று மாலையில் இருந்தே பசி தாங்காமல் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றேன். சரியாக ஒரு முழுநாளும் கடந்து விட்டது. இன்னமும் நான் கொலைப்பட்டினி என்றால் நம்புவீர்களா? அங்குமிங்கும் அலைந்து திரிந்தாலும் யாரும் வசமாக மாட்டுகிறார்களில்லை. வயிறு ஒட்டிப்போய் கால்களெல்லாம் பலமிழந்தது போய் தொய்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நம்பிக்கையிழக்கவில்லை நான்.

'உணவு கிடைக்காத காலங்களிலே மெல்ல அலைச்சலைக் குறைத்து ஓய்வெடுத்துக்கொள்வதே உத்தமம்' என்பதுதான் என்னைப் போன்றவர்களின் மூளையின் ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளுமிருக்கும் செய்தி. எங்கள் உடல் மொழிகளே அதை நினைவூட்டி விடும். ஆனாலும் யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி வந்து மாட்டாமலா போய் விடுவான்? அப்படி ஒருவன் வந்துசேரும் வரைகூட காத்திருக்கப் பொறுமையில்லை எனக்கு. எதையும் தேடியலைந்து உண்ணும் வேட்டையில்தான் எனக்கு எப்போதுமே ஒரு அலாதி இன்பம். இருந்தாலும் இன்றைக்கு என் நிலைமை கொஞ்சம் மோசம்தான்.

 

பக்கம் 3 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14515
மொத்த பார்வைகள்...2071439

Currently are 210 guests online


Kinniya.NET