ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

விழியில் வடியும் உதிரம்! (சிறுகதை)

aaகொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தினசரிப்பத்திரிகையின் உதவியாசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது கல்வித்தகைமைக்கு எத்தனையோ பல வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் எழுத்துத்துறையிலே எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இந்த வேலையைப் பெரிதும் விரும்பியிருந்தேன்.

'தம்பி, இப்பவே வெளிக்கிடுறியாப்பா' என்று வினவிய எனது தாயின் குரலுக்கு ஒற்றை வார்த்தையில் பதில்கூறிவிட்டு அவசர அவசரமாகப் பயணப்பொதியைத் தயார் செய்தேன். நண்பனொருவனோடு அவனது மோட்டார் சைக்கிளில் திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு நான் வந்து இறங்கவும் கொழும்பு செல்லும் ரயில்வண்டி புறப்பட ஆரம்பிப்பதற்கும் சரியாகவிருந்தது. துரிதகதியில் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு ஒருகையிலே நேர்முகப்பரீட்சைக்குரிய எனது பைலையும் பயணப்பொதியையும் சுமந்துகொண்டு நகரத்தொடங்கியிருந்த ரயிலுடன் ஓடிச்சென்று அதன் நடுப்பகுதியிலுள்ள ஒரு பெட்டியில் தொற்றிக்கொண்டேன்.

 

இணைந்த வாழ்வு (சிறு கதை)

2013-04-29

'உம்மா' 

என்று அழைத்துக் கொண்டு பரபரப்போடு வீட்டுக்குள்
நுழைந்தால் சலீமா . மகள் முகத்தில் ஒருவித கலவரம்
குடி கொண்டிருப்பதை அவதானித்த தாய் பரீனா
பதறிப்போனாள்.

 

திலீப் முஸம்மில் மற்றும் தீசன் குரூஸ் (சிறுகதை)

dp

இதுவரையில் ஒருபோதும் பார்த்திராத ஓர் அழகான இளம்பெண் தனது இனிய குரலில், 'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்! எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்!.... எக்ஸ்க்யுஸ்மீ...' என்று இடைவிடாமல் தொடர்ந்து சொல்லியவாறு வெகுநெருக்கமாக வந்து..

'டேய் யார்டயோ போன் அடிக்குது. அதை எடுத்துத் தொலைங்களேண்டா! ஞாயித்துக்கிழமையிலயும் மனிசன நிம்மதியா தூங்க விட மாட்டாணுகள். சே!' என்று யாரோ எரிச்சலோடு அதட்டினார்கள்.

 

தூக்குக் கயிறு (சிறு கதை)

0116hang[1]நான் சொல்லுவதனைக் கொஞ்சம் நுணுக்கமாகவும் அவதானமாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா...என்று எனக்குத் தோணவில்லை...உங்களால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவுமில்லை.

உங்களில் யாருக்காவது உங்களது மரணம் அல்லது சாவு நிச்சயிக்கப்பட்டுள்ள நேரம் எதுவென்று தெரியுமா அல்லது உங்களால் உறுதிப் படுத்திச் சொல்லத்தான் முடியுமா... குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் லியூக்கேமியா நோய்க்காரர்களுக்குக் கூட குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் செத்து விடுவார்கள் என வைத்தியர்கள் சொன்னாலும் அவர்களது சாவு சர்வ நிச்சயமாக இன்ன நேரத்தில்தான் நிகழும் என்று எவராலும் நிச்சயித்துக் கூற முடிவதில்லை.

 

சம்பள நிலுவை (சிறுகதை)

1

மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு திருஞானசம்பந்தர் வீதியும் ஸீவியூ வீதியும் சந்திக்கும் முனையிலிருக்கும் வலயக்கல்வி அலுவலக வாசலில் போய் நான் இறங்கியபோது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.

'ம்ம்..என்னப்பா இது....? இங்கேயாப்பா..வந்திருக்கீங்க... ம்ம்.. எனக்கேலா பசிக்கும்' என்று பழைய அனுபவத்தினாலோ என்னவோ அழத் தொடங்கினான் நிரோசன்.

'இல்லடா கண்ணா...! என்ட செல்லம், கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்டா..முந்தி மாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும் செக்கத் தருவாங்க. அதை வேண்டினதும் உடனே வாறதுதான் இப்படிக் கதிரையில இருடா, ராஜால்ல!' என்று அவனை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அழைத்தச் சென்றேன். அலுவலக வராந்தாவில் கையில் தோல் பையும் தொப்பையுமாக சிலர் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றார்கள்.

 

பக்கம் 4 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14515
மொத்த பார்வைகள்...2071439

Currently are 174 guests online


Kinniya.NET