ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

மன சாட்சி - (சிறுகதை)

court hammerஅத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தது ஒருவித அமானுஷ்யம்... திறந்த நீதிமன்றத்தில் அத்தனை கண்களும் தீர்ப்புக்காகக் காத்துக் கிடந்தன.

நீதிமன்றம் என்றாலே வழமையாகவே குண்டூசி விழுந்தாலும் ட்ரம்மில் விழும் சப்தமாக... அத்தனை அமைதியாக... எங்கே வெளித்தள்ளப்படுகின்ற மூச்சு சப்தமாக வந்து விடுமோ என்ற அச்சத்தில் சப்தங்கள் அத்தனையும் சப்த நாடியாகி அவ்வளவு அமைதியையும் நிசப்தம் நிலவும் சூழலையும் வேறெங்கும் பார்க்க முடியாது.

 

முயல்களும் மோப்ப நாய்களும்! - (சிறுகதை)

Captureதிடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு.

வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையும் தம்பிகளையும் தூக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையும் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவு வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒன்று அசைவது போல... ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.

'ஹேய்! ஆர்னப்..!ஆர்னப்!! ஓடாதே!' என்று கத்தியபடி நான் அதன் பின்னாலேயே துரத்திச் செல்வதற்குள் அவன் எங்கள் மொட்டைமாடியிலிருந்து வீதிக்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளைத் தாண்டி எதிர்வீட்டு இக்ரமின் குடியிருப்பு வளாகத்துக்குள்ளே ஓடிச் சென்று மறைந்து விட்டான்.

 

றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும் (சிறு கதை)

9-011[1]

பூக்களால் ஒரு புகைப்படம். பளீர்னு மனசுக்குள் மின்னல் வாசனை ப்ளாஷ்; ஆகுகின்றது. ரொமான்ஸ் ஸ்பரிசித்த வார்த்தைகளில் காதலின் மோட்சம.; தபூ சங்கரின் தாக்கம் நிறையவே தெரிகின்றது. அவரது கொஞ்சல் வழிக்கல்வியிலிருந்து பூக்களால் ஒரு புகைப்படம் சற்று மாறுபட்டது. டீன் ஏஜ்காரர்கள் தீவிர ரசிகர்களாகியிருப்பார்கள். துண்டுக் கவிதைகளின் தொகுப்பாக சுவாசித்துக் கொண்டிருக்கும் பூக்களால் ஒரு புகைப்படம் தந்த முஜாரத் ஒரு முடிவோடுதானிருந்தான். கவிதை எழுதுபவர்களின் பெருங் கனவாக இருக்கின்ற தொகுதி போடல் எனும் வெளியில் மிதந்து கொண்டிருந்த முஜாரத் தான் எழுதியவற்றுள் ரசிக்கத் தக்கவையென ருசிக்கத் தக்கவையென தான் தீர்மானித்த சின்னச்சின்ன கவிதைகளை ஒன்றாக்கி பூக்களால் ஒரு புகைப்படம் என்ற கவிதைத் தொகுதியினைத் தந்து சுமார் ரெண்டு வருஷத்தின் பின்னே இரண்டாவதாக ஒரு தொகுதியினை கொண்டு வரத் தீர்மானித்தக் கொண்டான்.

அவனைத் தீர்மானிக்க வைத்தது

றிசானா

நம்ம மூதூர் றிசானா நாபீக்

 

நல்லவர்கள் நலமாக வாழனும்! (சிறுகதை)

கொழும்பு புத்தளம் பிரதான வீதி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. போவதும் வருவதுமாக வாகனங்கணங்களும் ஆட்களும் ஒரே ஜன சந்தடி. தெருவோர கடைகளும் வியாபாரத்தில் மூழ்கி பெரும் ஆரவாரமாக இருந்தது.

அந்தப் பாதையில் தனது விளையுயர்ந்த காரை மிக லாவகமாக செலுத்தி வந்து கொண்டிருந்த நாமிஸின் பார்வையில் அங்கே பாதையோரமாக நின்று பேசிக்கொண்டிருந்த இரு முதியவர்கள் பட்டனர். அவனது மூளையில் ஒரு பொறி தட்டியது போன்ற உணர்வு.

 

அத்து மீறல்..! (சிறு கதை)

zz

சுமார் அஞ்சு வருஷத்துக்கு முந்தியெல்லாம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒரு சேர்கிட் கோர்ட்டாக இயங்கி வந்த கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இப்ப அஞ்சு வருஷமா நிரந்தர நீதவான் நீதிமன்றமாக இயங்கிக் கொண்டிரக்கிறது. நிரந்தர நீதவான் நீதிமன்றமாக ஆக்கப்பட முதல்ல கெழமையில் ஒருநாள் மட்டும் கோர்ட் இடம் பெறக்க கேசுன்னா அப்படிக் கேசு... கோர்ட் சனத்தால நெரம்பி வழியும்... பின்னேரம் அஞ்சு மணி மட்டும் கோர்ட் நடக்கும்னா பாருங்களேன்...

அம்புட்டு வழக்கு அன்னிக்கு இருக்கும். அப்பல்லாம் திருகோணமலை கோர்ட்டுல பிராக்டிஸ் பண்ணுற லோயர்மார் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு வருவாங்க... இப்பல்லாம் கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நிரந்தர நீதவான் நீதிமன்றமாக ஆக்கப்பட்ட பொறகு திருகோணமலையிலேருந்து லோயர்ஸ் யாருமே இந்தப் பக்கம் வர்ரதில்ல. போதாதற்கு இப்ப கிட்டத்தில இருந்து கந்தளாய் கோர்ட்; ஒரு கம்பைன்ட் கோர்ட்டாக மாற்றப்பட்டிருக்கு. ஆரம்பத்தில கந்தளாய் முள்ளிப் பொத்தான வான்எல போன்ற பிரதேச மக்களின்ட அனைத்து சிவில் வழக்குகளினதும் நியாதிக்கமும் திருகோணமலை நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டு அங்கதான் அவங்க சிவில் வழக்குகளெல்லாம் விசாரிச்சிட்டு இருந்தாங்க.

 

பக்கம் 5 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14515
மொத்த பார்வைகள்...2071439

Currently are 216 guests online


Kinniya.NET