ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

சிறுகதை: பலிக்கடா!

'ப்ளங்!'

ஏதோ ஒன்றுடன் மோதியது போல சத்தம் கேட்டதிலே கண்ணை மெல்ல விழித்தேன். இருட்டிலே முதலில் எதுவுமே சரியாகத் தெரியவில்லை. இருட்டு பழகிய பின்பு திருகாணி போன்ற குமிழும் கிராமபோனில் இருக்கும் கைபிடி போல ஏதோ ஒன்றும் மங்கலாகத் தெரிந்தது.

 

செக்குமாடுகள்.. (சிறுகதை)

'டொக்டர் மே ஐ கம் இன்'

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். இரவு ஆரம்பித்த மழை இன்னும் தூறிக்கொண்டிருப்பது ஆஸ்பத்திரி கண்ணாடி யன்னலினூடாக மழுப்பலாகத் தெரிந்தது. மழையினாலோ என்னவோ ஓபீடீ வெறிச்சோடியிருக்க தூறல் மழையின் மெல்லிய ரீங்காரத் தாலாட்டிலே தூக்கம் கண்ணைச் சுழற்றிய போதுதான் இந்த ஆங்கில இடையூறு.

 

மறக்க முடியாத உறவு...!

cry-girl

அன்று வெள்ளிக்கிழமை. வழமையைவிட அதிகமான சனக்கூட்டம் அந்த வைத்தியசாலை வளவினுள் ஆண்கள், பெண்கள் சிறுவர் என பலரும் முண்டியடித்துக் கொண்டு பார்வையாளர் கலரியை நிறைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய மனமும் திக்.. திக்.. கென்று அடித்துக் கொண்டிருப்பதை தெளிவாகக் கேட்கக் கூடியதாகவுமிருந்தது. அவ்வளவு அவசரம் அவர்களுக்கு! அலைமோதும் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவலர் திண்டாடிக் கொண்டிருக்க ஒரு சிலர் உள்ளால் நுழைந்து வைத்தியசாலைக்குள் சென்றும் விட்டனர். ஊர்ப் பிரமுகர்கள், பெரியவர்கள் என பலரும் அங்கே குழுமியதில் பெரும் களேபரமே நடந்து கொண்டிருந்தது.

 

சிறுகதை: மறக்க முடியாத மறைவு

hospital-070409[1]

ன்று வெள்ளிக்கிழமை. வழமையைவிட அதிகமான சனக்கூட்டம் அந்த வைத்தியசாலை வளவினுள் ஆண்கள், பெண்கள் சிறுவர் எனப் பலரும் முண்டியடித்துக் கொண்டு பார்வையாளர் கலரியை நிறைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய மனமும் திக் திக் கென்று அடித்துக் கொண்டிருப்பதை தெளிவாகக் கேட்கக் கூடியதாகவுமிருந்தது. அவ்வளவு அவசரம் அவர்களுக்கு!

அலைமோதும் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவலர் திண்டாடிக் கொண்டிருக்க ஒரு சிலர் உள்ளால் நுழைந்து வைத்தியசாலைக்குள் சென்றும் விட்டனர். ஊர்ப் பிரமுகர்கள், பெரியவர்கள் எனப்பலரும் அங்கே குமுழியதில் பெரும் களேபரமே நடந்து கொண்டிருந்தது.

 

சிறுகதை: விஸ்வரூபம்

trயாரித்து முடித்த நாள் முதலாய் திரையிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்தியத் தமிழ் திரைப்படம். பின்பு அது தடைகளையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.

விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியில் என்னைப் போன்ற ஓர் அரசஊழியன் தலைநகருக்குச் சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏறத்தாழ இருநூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து திரும்புவது என்பதெல்லாம் நிச்சயம் மிகை முயற்சிதான்.

ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்திய பரபரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொடர்பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாதங்களாலும் உருவாகிய 'அப்படி என்னதான் அதிலே இருக்கின்றது..?' என்ற சுவாரசியம் என்னைத் தின்று துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்ஜட் பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகமாக ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர்ந்த தொழினுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.

 

பக்கம் 6 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 188 guests online


Kinniya.NET