ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

சிறுகதை: ஓர் உளவியலும் இரு செல்போன்களும்;!

imageMaker

'டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்'

'சரி! இந்தா வாறேண்டு சொல்லு' ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த ஸரீனா டீச்சர் வாஷ்பேசினில் கழுவிய கைகளை அவசரத்தில் சேலைத் தலைப்பிலே துடைத்துக்கொண்டு காரியாலயத்தை நோக்கி நடந்தாள்.

 

இப்படியும் ஒரு இளைஞன் (சிறுகதை)

 hsp

பி.ரி. அஸீஸ்

கிண்ணியா 07

 ''அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர்'

சுபஹ் தொழுகைக்கான அதான் பள்ளியில் ஒலிக்கத் தொடங்கியது பாங்குச் சத்தம் கேட்டு வாரிச் சுருட்டி எழுந்து கொண்ட நயீமா

''இஞ்சாருங்கோ பாங்கு கேக்குது எழும்புங்கோ' என்று தனது கணவர் நகீரை எழுப்பினாள்.

எந்தவித தாமதமும் இல்லாமல் எழுந்து கொண்ட நகீர் குழாயடிக்குச் சென்று அங்க சுத்தி செய்து கொண்டு வந்து உடை மாற்றியவராய்

''நான் பள்ளிக்குப் போய்ட்டு வாரன்'

 

அடிசாய்ந்த வேரில் ஒரு புதிய தளிர்..! (சிறுகதை)

டந்த 2010 டிசம்பர் மாதம் என்வாழ்நாளில் இது வரை கண்டிராத பெரும் மழை. தொடர்ந்து பேய்து கொண்டே இருந்தது. வானம் பொத்துக்கொண்டு ஊத்துவது போன்று ஒரு நிலை.

எங்கே பார்த்தாலும் பெரு வெள்ளம். தாழ் நிலப்பரப்பல்லாம் நீரில் மூழ்கிவிட்டது. அங்கு செய்யப்பட்ட விவசாயப் பயிரல்லாம் அழிவடைய தொடங்கியிருந்தன. விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவர் மனங்களிலும் துக்கத்தின் தாண்டவம்.

 

சுற்றுலா....! (சிறுகதை)

DSC04137

'ராத்தோவ்'

பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும் காலில் அணிந்திருந்த வெள்ளைச் சப்பாத்துக்கள் கதவு மூலையிலும் வீசியெறியப்பட்டன.

 

கிண்ணியா என் காதலன். (சிறுகதை)

 

'அப்பச்சி... அப்பச்சி இன்டக்கி எனக்கி கதை சொல்லுங்க'

எனக் கேட்ட பேரன் முஜாரத்துக்கு,

'அப்பச்சி நாளைக்கு கதை சொல்லுவன். இப்ப போய் படுங்க' எனக் கூறினாள் பாட்டி.

ஆனால் முஜாரத்தோ,

'இல்ல எனக்கி இப்ப கதை சொல்லுங்க' எனக் கூறி வீறிட்டு அழுதான். முஜாரத்தின் தாத்தா அலி அக்பரும் அவ்விடம் வந்து முஜாரத்தை தூக்கியவாறே

முஜாரத் கண்ணா! இங்க வாங்க. நான் உங்களுக்கு கதை சொல்றேன்.' எனக் கூறியவாறே கட்டிலில் அமர்ந்தார். அமர்ந்தவர் கதையைக் கூற ஆரம்பித்தார்.

 

பக்கம் 7 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14513
மொத்த பார்வைகள்...2071437

Currently are 202 guests online


Kinniya.NET