ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

.....ஏன் அழுதான்? (சிறுகதை)

M9350447-Boy with_a_broken_arm-SPL

திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் அன்றைய நாளுக்குரிய மாலைநேரப் பார்வையாளர் நேரம் முடிவடைந்திருந்தது. சீருடையணிந்த ஆஸ்பத்திரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வார்டாக ஏறி இறங்கி நோயாளிகளைப் பார்வையிட வந்திருந்தவர்களையெல்லாம் திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

கரைகள் தேடும் ஓடங்கள்.... (சிறுகதை)

6fki7iu[1]மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், 'இன்றைய எங்கள் பயணம் எந்தவொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி' என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள் மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார்.

 

விறகில் பூத்த மலர்

Cart0[1]மூன்று பெண்குழந்தைகள். ஓரு ஆண்குழந்தை. தொழில் கூலி. என்றாலும் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து கொள்ளும் திருப்தியான வாழ்க்கை. ஊருக்கு ஓரமாக சுழித்துக் கொண்டோடும் மகாவலியின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு அப்பால் பொலன்னறுவை வரை பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து வந்து, கொத்திப் பிளந்து கொண்டு சென்று, விற்றுப்பின் அன்றைய நாள் சில வேளை அடுத்த நாளுக்குமான அரிசி, பருப்பு மற்றும் துணைச் சாதனங்கள் வீடு வந்து சேரும்.

 

சட்டவாட்சி...! -(சிறுகதை)

Supreme-Court-India[1]'யுவர் ஓனர்... ஒன் த மெட்டீடிரியல் டேட் எட் த டைம் ஒஃப் தி இன்ஸிடென்ட்... வட் ஹேட் ஹெப்பன்ட்... என ஆங்கிலத்தில் அரம்பித்த அத்தணை வாக்கியங்களினதும் தமிழாக்கத்தினை நோக்கின்

அது பின்வருமாறு அமைகின்றது சாதாரண மொழி பெயர்ப்பில்

'சம்பவம் நடந்த காலப்பகுதியில் வழக்கில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பெண் பிள்ளையும் இதோ கூட்டிலே நிக்குற எனது கட்சிக்காரரான இந்த சந்தேக நபரும் கடந்த ரெண்டு வருஷமா மிகத்தீவிரமா காதலிச்சிருக்காங்க. இந்த காதல் விஷயம் ரெண்டு பேரோட பெற்றோருக்கும் தெரியும்... ரெண்டு பேரும் விரும்பித்தான் உடலியல் ரீதியாக தொடர்பு வெச்சிருக்காங்க... இப்ப என்னடான்னா ரெண்டு பேரோட குடும்பத்துக்குமிடையில பிரச்சினை வந்ததும் அந்தப் பெண் பிள்ளையோட பெற்றோர் பொலிஸூல இந்த சந்தேக நபருக்கெதிராக கம்ப்ளைன்ட் பண்ணி பினன்ர் பொலிஸூ இவரப் பிடிச்சி அடி அடின்னு அடிச்சு இப்ப சந்தேக நபரா கடந்த ஒரு மாத காலமாக விளக்க மறியல்ல இருக்கார்... இது பெரும் அநியாயம்....இது ரொம்பப் பெரிய அநியாயம் யுவர் ஒனர்....எனவே வழக்கின் சூழ்நிலைகளையும் சந்தேக நபரோட வயசு மற்றும் கல்வி நிலைமையக் கருத்திற் கொண்டு சந்தேக நபருக்கு மதிப்புக்குரிய மன்று பிணை வழங்குமாறு...மன்றாட்டமாகக் கேடடுடக் கொள்ளுகிறேன்....' என அந்த கறுப்புக் கோர்ட் அணிந்த ஒரு இளம் சட்டத்தரணி தனது கட்சிக்காரருக்காக பிணை கோரி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அழாக் குறையாக நீதவானை கெஞ்சிக்; கொண்டிருந்தார்.

 

சிலந்திக்கூடுகள் (சிறுகதை)

spiderweb

கொழும்பிலே ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளாராக வேலை செய்து கொண்டிருக்கும் நான் பல வருடங்களுக்குப் பின்பு திடீரென்று ஒருநாள் ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். வீட்டுக்கு வந்திறங்கியவுடன் முன்பு ஊரிலே ஒன்றாகத் திரிந்த எனது நண்பர்களில் சிலரையாவது உடனடியாகச் சந்திக்க நினைத்தேன். அவசர அவசரமாகக் குளித்து முடித்து தம்பியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் முச்சந்திக்கு புறப்பட்டேன்.

 

பக்கம் 8 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14513
மொத்த பார்வைகள்...2071437

Currently are 199 guests online


Kinniya.NET