ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

எதேச்சதிகாரம். (சிறு கதை)

பகல் பதினொன்று மணியிருக்கும்.85979897[1]

கோடை வெயிலின் கதகளியில் கால நிலை குச்சுப்புடி ஆடிக் கொண்டிருந்தது. வெயிலின் வியர்வையில் சோர்வு உழவு செய்து கொண்டிருந்ததில் மனித குல நமைச்சல காரணமேயில்லாமல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மனிதனின் மனோ நிலை மாற்றங்களுக்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றங்கள் கவனயீர்ப்பு செய்து விடுகின்றன... மற்றும்... என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் உளவியலாளர்களைக் கொஞ்சம் விட்டு விட்டு கரையோரமாய் நீண்டு சென்று கடலை முறைத்துக் கொண்டிருக்கும் கொங்ரீட் வீதியின் அழுக்கற்ற அழகினைப் பார்த்து சோகையாய் சொல்லவும் முடியாமல் மௌனமாயிருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கிண்ணியா பொலிஸ் ஸ்டேஷனுக்குள் கொஞ்சம் வாருங்கள்.

 

சிறுகதை: மியூறியன் க்ரேட்டர்

394477 424075897629607_278891913_n

ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது எதிர்பார்த்தது போலவே அது 'ஹோ'வென வெறிச்சோடிக் கிடந்தது.

 

கரையொதுங்கும் முதலைகள்.. (சிறுகதை)

btஅன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.

திருகோணமலை இறங்குதுறையிலிருந்து மூதூர் செல்லும் கப்பல் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

இரண்டு மூன்று வாரங்களாக இடைவிடாது பொழிந்து தீர்த்த வானத்தில் சோகைச் சூரியன் தெரிந்தான். மழைவெள்ளம் தேங்கி மூதூருக்குச் செல்லும் தரைவழிப்பாதை தடைப்பட்டிருந்ததால் வழமையைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊருக்குச் சென்று சேர்ந்துவிடவேண்டும் என்ற முனைப்பிலே வெகுநேரமாய் வரிசையில் முண்டியடித்துக் காத்திருந்த பயணிகளின் பதைபதைப்பை ஊர்பார்க்க வந்திருந்த உல்லாசப் பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

 

கடுகு (சிறுகதை)

வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா?

இஞ்செ இரிக்கேலாது வாப்பா, பொழுது விடிஞ்சா ஒரே சண்டெதான். நானாவும் ராத்தாவும் என்னப் போட்டுப் படுத்துற பாடு.

அதுக்குப் புறவு ஸ்கூல் இரிக்கிதே. அங்கேயும் ஒரே கூத்துத்தான்.

 

வரால் மீன்கள் (சிறுகதை)

amanulla1[1]

தன்னைப்பற்றி எம்.எஸ். அமானுல்லா :

வரால் மீன்கள் எனக்குப் பிடித்த கதை. உண்மையில் யுத்தச் சூழலில் அகால மரணமான எனது மூத்த சகோதரனின் வாழ்வுதான் அது. கொஞ்சம் அழகுபடுத்தி 1997ல் எழுதினேன். கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் பரிசைப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகுதான் தீவிரமாக சிறுகதைகள் எழுதினேன். எவ்வாறாயினும் 22 சிறுகதைகளே இதுவரை எழுதியுள்ளேன். இவற்றுள் 20 சிறுகதைகள் தேசிய, சர்வதேச ரீதியாக பரிசில்களைப் பெற்றுக் கொண்டன. சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கதைகளும் அடங்கும். நாவல் ஒன்று எழுதும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

 

பக்கம் 9 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 192 guests online


Kinniya.NET