ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

சிறுகதை : எனது பெயர் இன்சாப்

boy

எனது பெயர் இன்சாப். இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல் வருமா என்பதுதான் இப்போது பிரச்சினையே. ஆம், அதற்குக் காரணமிருக்கின்றது. அதற்கு முன்பு என்னைப்பற்றிச் சொல்லி முடித்து விடுகின்றேன்.

நான் பார்ப்பதற்கு அழகானவனோ அல்லது சட்டென எல்லோருக்கும் பிடித்துப்போகும் சிறுவனோ கிடையாது. ஆனால் வகுப்பிலே ஓரளவு கெட்டித்தனமாகப் படிப்பவன்தான். விஞ்ஞானப்பாடத்தை மட்டுமே மிகவும் விருப்பத்துடன் படிப்பேன். வீட்டில் எனது அறை முழுவதையும் வயர்களாலும் பற்றரிகளாலும் நிறைத்து வைத்திருப்பேன். பொதுமைதானத்தில் கிரிக்கட் விளையாடும் வகுப்புச் சினேகிதர்கள் தவிர வீட்டிலிருக்கும் உம்மா வாப்பா உட்பட பெரியவர்களுக்கு குறிப்பாக வீட்டு வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் கால்நீட்டியமர்ந்து பத்திரிகையை புரட்டிக்கொண்டிருக்கும் பென்சன் வாங்கும் பெரிசுகளுக்கு நான் கிலோக் கணக்கிலே எரிச்சல் தருபவன்.

 

ஒரு கதையின் கதை - (சிறுகதை)

 

'ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?'School-House-Coloring-Pages[1]

கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே நுழைந்தான் மக்பூல். என்னுடைய கோணேசர்பூமி வலயத்திற்குட்பட்ட புறநகர்ப் பாடசாலைகளில் ஒன்றான இலுப்பஞ்சோலை முஸ்லீம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அவன்.

 

கடைசிப்பந்து.. (சிறுகதை)

118505

நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து அது.

சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவும் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையும் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாராதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு தூக்குத் தூக்கிவிட மைதானத்துக்கு வெளியேயுள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து.

 

சிறுகதை: தூக்கணாங் குருவிகள்..!

dfre

"வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க...எழும்புங்க!" கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ பலமாக உலுப்பியது போலிருந்தது ஷக்கீப்புக்கு.

"யா..யாரும்மா.. வந்திருக்கிறது?" கண்ணைத் திறக்காமலே கேட்டான்.

 

மணல் தீவுகள்.. - சிறுகதை

574761 10150798774826504_2072996312_n

"ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு...யாரு நீங்க...என்ன விசயமா எடுத்தீங்....?" முழுவாக்கியத்தையும் நான் கேட்டு முடிக்கவில்லை.

"அடச்சீ! நீங்களா...? நீங்கள்ளாம் ஒரு மனிசனா..?" என்றது எதிர்முனையிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் குரல். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"ஹலோ! நீங்க.." என்று ஆரம்பித்த என்னைப் பேசவே விடவில்லை!

 

பக்கம் 10 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14515
மொத்த பார்வைகள்...2071439

Currently are 185 guests online


Kinniya.NET