திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறுகதை

அதே நாள்.. அதே நேரம்!

download (1)

ரயில்வே குவார்ட்டஸில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சரக்கு எஞ்சின் சாரதி லசந்த பெரேராவுக்கு சரியாக அதிகாலை 4.55க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தூக்கம் கலையாமலே, 'நிமால்.. என்னடா இது..? அதுக்குள்ள எழுப்பிக்கிட்டு.. எட்டு மணிக்குத்தானே ட்யூட்டி?'

 

இதயத் துடிப்பு..! (சிறு கதை)

hs

ஜீ.எச்.எனச் சுருக்கமாக அல்லது செல்லமாக சொல்லப்படும் ஜெனரல் ஹொஸ்பிட்டல் அரசாங்க ஆஸ்பத்திரி என்பதை நிரூபிப்பதற்காக ஏகப்பட்ட சான்றுகள் ஆஸ்பத்திரி கட்டடச் சுவர்களிலும், ஓபிடி வாசலிலும் அம்பியூலன்ஸ் நடு வகிட்டில் உருண்டு கொண்டிருக்கும் அபாயம் சிதறடிக்கப்படும் ரத்த நிற வர்ணங்களிலும் ஆங்காங்கே அசிரத்தையோடு தெரிகின்ற சில நேர்ஸ்மார்களிலும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

 

எரிந்த பனைகள்..! (சிறுகதை)

pp'ண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்...'

'என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்... ஏன்டா, உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்...?' என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு, 'இல்லண்ண... வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான் நான் சொல்ல வந்தேன்' என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது கோபம். ஆனாலும் எதுவும் கூறவில்லை.

 

தூரம்..! (சிறுகதை)

d

நேரம் நள்ளிரவை அண்மித்திருந்தது.

வீட்டுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நபரும் வந்து விட்டதால், வீட்டு விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு விட்டன.

ஸியாதின் வீட்டு விளக்கு மட்டும் இன்னும் ஸியாதை எதிர்பார்த்து விழித்துக் கொண்டிருக்கிறது. அந்த விளக்கைப் போல ஷெரோஸியாவும் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.

 

சிறுகதை: வசூல் ராஜாக்கள்

india police1[1]வன்னியார் ஒழுங்கையிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றிலே மகளை இறக்கிவிட்டு அப்படியே அதுபோய் பிரதான வீதியைச் சந்திக்குமிடத்திலே இடதுபக்கம் திரும்பி நேரே மடத்தடிச்சந்தி சுற்றுவட்டத்தைத் தாண்டும்வரை அது ஓர் ஒருவழிப்பாதை என்பதை நான் கவனிக்கவில்லை.

'சொய்......ங்!' என்று போக்குவரத்துப் பொலீசின் விசில் சப்தம் காதிலே ஒங்கியறைந்தபோதுதான் 'ஆகா மாட்டிக்கொண்டோம்டா!' என்பது உறைத்தது. 'அப்படியே திரும்பிப் பார்க்காமலே ஓடிவிடுவோமா..' என்று உதயமான ஓர் அசட்டுத் துணிச்சல் காதுமடல்களைச் சூடாக்கிவிட்டு கணத்தில் மறைந்தது.

 

பக்கம் 2 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21672
மொத்த பார்வைகள்...2078596

Currently are 388 guests online


Kinniya.NET