ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

நினைத்த தெல்லாம் தவறு (சிறுகதை)

Capture

கிண்ணியா நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது

அந்த கிளினிக் சென்டர். தாய் சேய் நலன் பேனும் நடவடிக்கைகளுக்காக

அது அமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணல் நகரை மையமாக வைத்து இயங்கும் அங்கே மாதத்தில்

முதலாம் நாலாம் வெள்ளிக் கிழமைகளில் கிளினிக் நடைபெறும்.

அன்று முதலாம் வெள்ளி மிகவும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும்

அலுவல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சுமூகமளித்திருந்த

ஐம்பதுக்கு மேற்பட்ட கர்ப்பவதிகள் வௌ;வேறாகப் பிரிக்கப்பட்டு

அவர்களுக்கான ஒழுங்குகள் கவணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

புதிய வருகை

விசேட கவணிப்பு

சாதாரண நிலை

என கவணிப்புகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது

இதில் முதலாவது பிரிவில் சர்மிளா அமர்ந்திருந்தால்.

இப்போதுதான் புதிதாக கிளினிக் வந்திருக்கிறாள்

அவள்.

காலையில் நேர காலத்தோடு வருகை தருவதால்

கர்ப்பவதிகள் பெரும்பாலும் காலை உணவு

உட்கொள்ளாமலே வருகின்றனர்.

அதனால் அவர்களுக்கு அவர்களது வீடுகளில் இருந்து உணவு கொண்டுவரப்படும்.

வேன் கார் மோட்டர் வைக் புஷ்வைக் கால் நடையாக என

அவர் அவர் தகுதிக்கு ஏற்ப வந்துபோவார்கள்.

காலை பத்து மணிக்கு மேலாகிவிட்டது சர்மிளாவுக்கு சரியான பசி.

காலை பிளேன்டியோடு வந்தவள் இன்னும் எதுவும் சாப்பிடவில்லை.

கர்ப்பவதிகள் பலர் அவளை தம்மோடு சேர்ந்து சாப்பிட வருமாறு அழைத்தும்

அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை வீட்டிலிருந்து கனவனின் வருகையை எதிர்பார்த்திருந்தாள்.

'என்ன பலமான யோசனை'

பக்கத்திலிருந்த பஹ்மிதா பேச்சுக் கொடுத்தாள் .

'இந்த மனிசனை என்னமும் காணலை அதுதான்'

சர்மிளா தனது ஏக்கத்தை வெளியிட்டாள்.

'வந்திடுவார். இன்னும் கொஞ்சம் நேரம் பார்'

இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் நண்பிகளாகி விட்டனர்.

'நீ இந்த ஊருக்கு புதிசா இருச்சா ஒனக்கு எந்த ஊர்'

சர்மிளா கேட்டாள்

'புத்தளம் இங்கே உள்ள ஒருவர்தான் என்னை கலியாணம் முடிச்சவர்

முடிச்சி மூனு மாசத்துக்கு பொறவு ஆளையே காணலே'.

பஹ்மிதா சொன்னாள்.

'பாவம் இந்த சின்ன வயசில இவள் இப்படியாயிட்டாள';

சர்மிளா மனதுக்குள் அவளுக்காக அனுதாபப்பட்டாள்.

'கவலைப்படாதே ஒன்ட புரிசன் ஒனக்கு எப்படியும் கெடப்பார்'.

பேசிக்கொண்டிருக்கும்போதே வீதியைப் பார்த்தாள் அங்கே

அவளது கணவன் புஷ் வைக்கை தள்ளியவனாக வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்டு சந்தோசம் அடைந்த சர்மிளா

'கொஞ்சம் இரி இதோ வந்திட்டன் என்றவளாய்

கனவனை நோக்கிச் சென்றாள்.

'வரும் வழியிலே வைஷிக்கள் காத்துப் போயிட்டு வெள்ளிக் கெழமை

கடை எதுவும் தொரக்கல தள்ளிக் கொண்டு வந்தேன் நேரம் போச்சி

ஆ.... ஒனக்கு பசிக்கும் போய் சாப்பிடு'

என்று தான் கொண்டுவந்த உணவுப் பொட்டலத்தை அவளிடம்

கொடுத்துவிட்டுச் சென்றான்.

அவன் ஏழையாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகானவன்.

நல்ல வாட்ட சாட்டமான ஆள். கம்பீரமான தோற்றம்.

கணீர் என்ற குரல்.இவைகள் சர்மிளாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதனால் அவன் மீது அவள் அதிகம் அன்பு செலுத்தினாள்.

கூலி வேளை செய்தாலும் குடும்பத்துக்கு குறை வைக்காமல்

அவன் நடந்து கொண்டான். அதனால் அக்கம் பக்கத்தில்

'நல்லவன்' என்று பெயர் எடுத்திருந்தான்.

சர்மிளா உணவுப் பார்சலோடு வந்து இருக்கையைப் பார்த்தாள்.

அங்கே பஹ்மிதாவை காணவில்லை. அப்படியே பின் பக்க வராந்தாவில்

இறங்கி மேற்கு பக்கமாக இருக்கும் இலந்தை மர நிழலுக்கு வந்தாள்.

அங்கே பெண்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பஹ்மிதா எங்கே போனாள் குழப்பத்தோடு தேடினாள்.

ஆ... அங்கே நிற்கிறாள்.

வேலியோரத்து மரத்தின் கிளை ஒன்றை பிடித்தவாறு என்ன செய்கிறாள்.

அருகே சென்றாள் சர்மிளா.

பக்கத்து ஒழுங்கையாள் தனது கனவன் சென்று கொண்டிருப்பது

அவளுக்கு தெரிந்தது. பஹ்மிதா எதையோ வெறித்து பார்த்துக்

கொண்டிருப்பதும் புரிந்தது.

மெதுவாக அவளது தோளை தொட்டாள்.

திடுக்கிட்டு திரும்பினாள் பஹ்மிதா.

'அவர்தான் என்ட புரிசன்'

அறிமகம் செய்தாள் சர்மிளா

அவளின் முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்வதை

பஹ்மிதா உணர்ந்தாள். !'

'இந்த உலகத்தில் சிலர் இருக்கிறார்கள். ஏமாற்றுவதற்கென்றே பிறந்தவர்கள்.

அவர்கள் பொய்யும் புரட்டும் நிறைந்தவர்கள். எதைப் பற்றியும் கவளைப்படமாட்டார்கள்.

இத்தகையவர்களை இனம் காண்பது கடினம். கண்டாலும் நல்லவனாக நடித்து நம்ப வைத்து விடுவார்கள்.

எவரையும் தம்வலைக்குள் வீழ்த்தும் மாயம் இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

இத்தகையவர்களாலேயே இன்று பெண்களின் வாழ்வு சிதறடிக்கப்படுகின்றது.'

பஹ்மிதா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

'வா ரெண்டு பேரும் சாப்பிடுவோம்'

சர்மிளா அழைத்தாள்.

'எனக்கு பசியில்லை நீ போய் சாப்பிடு'

புஹ்மிதா

காலையிலே இருந்து ஒன்னும் சாப்பிடாமே இரிச்சா வா'

சர்மிளா அவளது கையை உரிமையோடு பற்றி இழுத்தாள்.

'நான் வாரன் ஆனா எனக்கு சாப்பாடு வேணாம்'

என்றவளாய் பஹ்மி அவளோடு சென்றாள்.

அங்கிருந்த மேசையில் வைத்து பார்சலை பிரித்தாள் சர்மிளா.அதில் இருந்த உணவுகள் எல்லாமே ஜோடி ஜோடியாக இருந்தது.

இரண்டு பழம் இரண்டு வடை இரண்டு இறச்சி ரொட்டி இப்படியாக

'என்ன இது எல்லாமே ரெண்டாய் இருக்கு' என வாய் பிளந்தாள் சர்மிளா

'இரண்டு அவருக்கு பிடிச்சமானதாக்கும்'

சொன்ன பஹ்மி தனது கடந்த கால நினைவுகளை ஒரு தரம் மீட்டிப் பார்த்தாள்.

பஹ்மிதாவுக்கு திருமனமாகி ஒரு வாரமிருக்கும் கனவன் அவள் மீது உயிரேயே வைத்திருந்தான். 'பஹ்மி பஹ்மி ' என அடிக்கொரு தடைவ அழைப்பான். அன்பு மழையில் நீராட்டி மகிழ்வான். வெளியே சென்று வரும்போது கடை உணவுகள் வாங்கி வருவான் இரண்டு பார்சல்கள் இருக்கும். ஓன்று அவர்களுக்கு மற்றது பஹ்மிதாவின் உறவுகளுக்கு.

அவனது செயலை நினைத்து அவள் சந்தோசப்படுவாள்.சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளது கைகளில் கொடுத்துவிடுவான். தனது செலவுகளுக்கு அவளிடம் இருந்தே கேட்டுப் பெறுவான்.

'இந்தக் காலத்திலே இப்படி ஒரு புரிசன் கெடச்ச நீ குடுத்து வைச்சிருச்சனும்.'

குடும்பத்தினர் அடிக்கடி அவளிடம் இவ்வாறு சொல்வார்கள். பூரித்துப் போவாள் அவள்.

முதல் மாதத்திலே அவள் கர்ப்பமுற்றாள். அன்பான வாழ்க்கையின் அடையாள சின்னமாக அதை கருதினால் பஹ்மி

மூன்று மாதங்கள் முழுமையாக கழிந்து சில தினங்களில் அவன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டான். எங்கல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக கிண்ணியாவில் இருப்பதாக தெரிய வந்தது அவனை தேடிக்கொண்டுதான் அவள் இங்கே வந்திருக்கிறாள். பெறுமாதம் என்பதால் கிளினிக் அட்டையையும் எடுத்துக் கொண்டு வந்தவள். இன்று இந்த கிளினக்கில்.

'ஆண்களில் சிலர் இருக்கிறார்கள் பெண்களை கவர்வதற்காக வேண்டி

அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டுவார்கள். பின்னாலே சுத்தி திரிந்து

காலால் இடும் கட்டளையை தலையாள் நிறைவேற்றுவார்கள். புகழ்ந்து பேசி பூரிக்கவும் வைப்பார்கள்.

ஆகா இப்படி ஒருவன் எனக்கு துனையாக கிடைக்க மாட்டானா என ஏங்கும் நிலை வரைக்கும் பெண்களை உயர்த்திப் பேசுவார்கள். ஒரு அடிமையைப் போல நடந்த தமது உடல் வாளிப்பால் போதையும் ஊட்டுவார்கள். இந்த ரகத்தை சேர்ந்தவர்களால்தான் குழப்பம் அதிகம்'

பஹ்மிதா தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

பஹ்மிதா மனதளவில் வருத்தப்படுவதை சர்மிளா உணர்ந்தாள்.

'இங்கே பார் பஹ்மி நீ என்ட சகோதரி மாதிரி என்ன பிரச்சினை என்டாலும் நீ மறையாம சொல்லு '

சுர்மிளா சொன்னாள்;

'ஒன்னும் இல்ல பேசாம சாப்பிடு'

புஹ்மிதா

'நீ சொல்லப் போரியா இல்லையா?'

சுர்மிளா

'எனக்கு பிரச்சினையே நீ...தான்டி ...'

'என்ன நானா?... ஒனக்கு என்ன நடந்திரிச்சி '

பரபரப்போடு கேட்டாள் சர்மிளா

'ஆமா நீ... நீயே தான் ...! நான் யாரத்தேடி இங்கே வந்தேனோ

அவன் ஒனக்கு புரிசனா மனதுக்கு புடிச்சவனா இரிச்சான் இதப்பாத்து

என்ட மனசி ஒடைஞ்சி போயிரிச்சி'

ஆவேசத்தோடு பஹ்மிதா சொன்னாள்.

அதிர்ந்து போனாள் சர்மிளா.

கொஞ்ச நேரம் அப்படியே மரத்து சிலையாகிப்போன சர்மிளா

சுய நினைவுக்கு திரும்பியபோது அவளது மூளையில்

ஒரு பொறி தட்டியது.

'ஓ... ! அவனைத் தான் சொல்றாள்..! '

மனதுக்குள் நினைத்த அவள்

'ஒன்ட புரிசன்ட பெயர் ரைஸ் தானே!'? என்றாள்.

'ஆமா ஏன்'

'பஹ்மி ரைஸ-ம் என்ட புரிசனும் ஒன்று விட்ட சகோதரங்க

பார்வைக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்க'

என்று சர்மிளா சொன்னதும்

'இப்போ அவர் எங்கே இரிச்சார்'

என உணர்ச்சி வசப்பட்டவளாக கேட்டாள் பஹ்மி

'ஜெயில்ல... ஆமா ஜெயில்லதான் இரிச்சான் ஆறு மாத சிறைத் தண்டனை

அனுபவிக்கிறான். இன்டைக்கோ நாளைக்கோ தவனை முடியுது

வெளி வந்திருவான்

இஙN;க எங்கட சொந்தக்கார புள்ளையெ ஒருவன் பாலாத்தகாரம் செஞ்ஜிட்டான்

அவனை வெட்டிப்போட்டு இவன் ஜெயிலுக்கு போனான் நல்லதுதான் செஞ்ஜிரிச்சான்.

ஜெயில்ல வைச்சித்தான் அவன் கலியாணம் முடிச்சதெ சொன்னான் ஊர் பேர் எதுவும் சொல்லல்ல. கேள்விப்பட்டா அவ வருத்தப்படுவா வவுத்து புள்ளக்காரி.

என்று வேதனைப்பட்டான்'

சுர்மிளா சொல்லி முடித்ததும் அவளை இறுக அனைத்துக் கொண்டு ஓவ்வென கதரி அழுதாள் பஹ்மி

தனது கனவனை நினைக்க அவளுக்கு பெருமையாக இருந்தது.

தான் வ்வளவு பெரிய தவறுகளை மனதில் நினைத்து விட்டேன் என எண்ணி அதற்காக வருத்தப்பட்டாள் அவள்.

 

கவிஞர் பி. ரி அஸீஸ் கிண்ணியா 07

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14514
மொத்த பார்வைகள்...2071438

Currently are 210 guests online


Kinniya.NET