வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

தலைவா புரியாணி வேண்டுமா ? பழஞ்சோறு வேண்டுமா ?

Capture4

ஏக்கூப் பைஸல்

அடிமையாக இருந்து புரியாணி சப்பிடுவதைவிட வீரனாய் இருந்து பழஞ்சோறு சப்பிடுவது மேல்...!

ஒரு காட்டில் இருந்து திசை தவரி இரவின் நடுப்பகுதியில் ஊரின் எல்லைக்குல் ஓநாய் ஒன்று பசியின் உச்சத்தில் வந்தது. இதுவரை காட்டுக்குல் வாழ்ந்து வந்த ஓநாய் ஒரு வீட்டு நாயினை கண்டு அதிசயப்பட்டது.

என்னை விட வீரம் குறைந்த இந்த வீட்டு நாய்க்கு பாத்திரத்தில் உணவு வழங்கும் எஜமான் இனி நான் காட்டுக்கு செல்வதில்லை என மனதால் நினைத்து வீட்டு நாயின் அருகில் சென்று நீ கொடுத்து வைத்தவன் உனக்கு உன் எஜமான் உணவினை தருகின்றான். நீ வாழ்வதற்கான வீடு இருக்கின்றது. உன்னை கவனித்து கொள்கின்றார்கள் என்று ஓநாய் சொன்னது. இதே போல் நானும் வாழ ஆசைப்படுகின்றேன் எனக் கூறி நடு இரவில் வீதியால் நடந்து கொண்டே இரண்டு நாய்களும் சென்றது.

அப்போது நிலா வெளிச்சம் தரையைத்தொட வீட்டு நாயின் காலில் ஒரு பெரிய தழும்பினை ஓநாய் கண்டது . ஒநாய் வீட்டு நாயின் காலில் தழும்பை பார்த்ததும் உனக்கு காலில் என்ன நடந்தது என கேட்டது அப்போது வீட்டு நாய் ஒநாயினைப் பார்த்து சொன்னது என் எஜமான் பகல் முழுதாய் என்னை இரும்புச் சங்கிலியால் கட்டிவைப்பான் அதனால்தான் காலில் இந்த தழும்பு ஏற்பட்டது என்று சொன்னது வீட்டு நாய்.

உடனே ஓநாய் வீட்டு நாயினைப் பார்த்து கேட்டது நீ சூரியன் உதிப்பதனை உன் கண்களால் பார்த்தது இருக்கின்றாயா , நண்பர்களுடன் அந்தியில் விளையாடி இருக்கின்றாயா. பக்கத்து வீட்டுக்கு பகலில் சென்று இருக்கின்றாயா. முயல் பிடித்து சாப்பிட்டு இருக்கின்றாயா என கேட்டதும்......

...வீட்டு நாய் சொன்னது என் எஜமான் என்னை பகல் முழுதாய் கட்டிவைத்து இரவில் மட்டும்ந்தான் என்னை திறந்து விடுவான். அப்போதும் எனக்கு கட்டளையிடுவன் வீட்டின் எல்லையினை தாண்டி போக வேண்டாம் என எச்சரிப்பான் ஆனால் நான் என் எஜமான் தூங்கியதும் பல தடவைகள் வீட்டைச் சுத்தி குரைத்துவிட்டு இந்த வீதிக்கு வந்து செல்வேன் அப்படி வரும் போதுதான் இப்போது உன்னைச் சந்தித்து இருக்கின்றேன் என்றது வீட்டு நாய்.

அப்போது ஓநாய் வீட்டு நாயினைப் பார்த்து "அடிமையாய் இருந்து புரியாணி சாப்பிடுவதை விட போராடி பழஞ்சோறு சப்பிடுவது மேல்" என கூறி கொண்டு காட்டின் எல்லையினை நோக்கி ஒடியது ஓநாய்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 207 guests online


Kinniya.NET