வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

இலக்கியங்கள் இழக்கப்படுமா ? வளர்க்கப்படுமா ?

Untitled-100

 (இமாம்தீன்)

இலக்கியம் என்பது பல்வேறு கால கட்டங்களில் ஒவ்வொரு சமூகக் குழுவினரதும் வாழ்க்கைக் குறிப்புக்கள்ˌ சமூகˌ பண்பாட்டுˌ கலாசாரˌ விழுமியப் பண்புகள் என்பவற்றை அப்படியே செம்மையாக எடுத்துரைக்கும் காலத்தின் கண்ணாடியே இலக்கியமாகும். எனவே இவ்விலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் பழைய புதிய அமைப்புக்களில் ஒவ்வொரு காலகட்டத்தின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் அவ்வக்காலங்களில் செழுமைஇ புதுமை பெற்று முதுமையுடன் இன்றும் நிலைத்திருக்கின்றன.

இவ்வாறான இலக்கியங்களின் மூலமாகத்தான் எம்முன்;னோர் பற்றிய தகவல்களை நாம் 'உள்ளங் கை நெல்லிக் கனி போல' அறிந்து கொள்கிறோம். இறந்து கொண்டே போகும் இம் மனித சமுதாயத்தின் நல்லˌதீய விடயங்களை இலக்கியங்கள் தான் எம்முன் எடுத்தோதி நிற்கிறது. நம்முடைய வாழ்க்கையினைச் சீர் படுத்திக் கொள்வதற்காக அவ்வாறான இலக்கியங்களில் இருந்து நாம் நல்ல விடயங்களை எடுத்துக் கொண்டும் தீய விடயங்களை தவிர்த்தும் அவற்றிலிருந்து படிப்பினை பெற்று புத்தி சாதுரியமாக சாணக்கியத்துடன் வாழப்பழகிக் கொள்கிறோம் சிறந்த வாழ்க்கையினை செம்மை பட கற்றுக் கொள்கின்றோம்.

'சாரதிகள் தேவை' என்றதோர் விளம்பரத்தில் நிச்சயமாக அனுபவம் உள்ளவர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. ஏன் அவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்? வாகனம் செலுத்த தெரிந்த அனைவரும் சேர்த்துக் கொள்ளப்படலாமே! என்றும் அனேகர் யோசிப்பதுண்டு.அவ்வாறி;ல்லை பள்ளத்தில் ஒரு முறை சறுக்கி விழுந்த ஒருவர் இன்னொரு முறை அவ்விடத்தால் கவனமாக செல்வதற்கு வழி பிறப்பது தின்னமல்லவா? ஆகவே புதிதாக ஒருவர் வாழ்க்கையினை வாழ்ந்து பார்ப்பது என்பதை விட ஏலவே சரித்திரம் படைத்த மேதாவிகளின் மெச்சத்தக்க வாழ்க்கைத் தத்துவங்ளைக் கற்று : சரியாக உணர்ந்து: இதய பூர்வமாக வாழ முனைகின்ற ஒருத்தனின் வாழ்வில் தான் தென்றலின் வரவேற்பும் மலர்களின் நறுமணமும் நம்பிக்கையுடன் வீச ஆரம்பிக்கிறது.

இவ்வாறான செஞ்செழிப்பான வாழ்க்கை முறையினை அனுபவப் பாடங்களின் ஊடே சிறப்பான முறையில் தருவதென்றால் நிச்சயமாக காப்பியங்கள் ˌவெண்பாக்கள்இ கதைகள்இ சிறுகதைகள்இ நாவல்கள்இ அம்மானைகள்இ ˌ கவிதைகள்...போன்ற பல்வேறு இலக்கியங்களின் மூலமாகத்தான் அவை முடியுமானதாக இருக்கும்.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் அதிலும் கிண்ணியாப் பிரதேசத்தினைப் பொருத்தவரையில் நாம் தமிழ் பேசும் மக்கள் அல்லது முஸ்லிம்கள் என்று சொல்லுவதை விட தாய் மொழியைத் தமிழாகக் கொண்டு மொழியினையும் அதன் சிறப்பான பண்பினையும் காலத்தால் வென்றவர்கள் என்றால் அது மிக மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

பன்னெடும் காலம் தொண்;மை வாய்ந்த வாய்க்கினிய இத்தமிழ்த் தாய்மொழி எம்மை இத்தரணியில் சீர் பெற்று வாழ வைத்தது. என்பதை நோக்கும் போது இந்தத் தமிழ் தந்த தோள் கொடுப்புக்கு நாம் தமிழுக்காக என்ன செய்தோம்? தமிழுக்காக எதனை செய்து கொண்டிருக்கிறோம்? தமிழுக்காக என்ன அர்ப்பணிப்பினைச் செய்யப் போகிறோம் என்று கொஞ்சமாவது யோசித்தோம் இல்லை. இப்படியே சென்றால் எம்மை வாழ வைக்கும் தமிழத் தாயின் நிலைபரம் என்னவாகும்.

கிண்ணியாவைப் பொருத்தமட்டில் படித்த மட்டங்கள் என்ற வகையில் கவிஞர்கள்இ சிறுகதை ஆசிரியர்கள்இ நாவலாசிரியர்கள்இ பாடலாசிரியர்கள்....என பல்வேறு துறைகளிலும் பல இலக்கிய வாதிகள் இலைமறை காய்களாய் பரந்து கிடப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இலக்கிய வட்டங்கள் ˌஇலக்கிய ஊக்குவிப்பு ஆர்வலர் சபை என்பவற்றை எண்ணத்தளவில் நிறுவிக் கொள்கிறோம் ஆனால் அதற்கான ஒத்துழைப்புக்களை நாம் வழங்க மறுத்து விடுகிறோம்.இதனை ஏன் இங்கு சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்...

அண்மையில் 2013.05.05 அன்று கிண்ணியாப் பொது நூலகக் கட்டட ஒன்று கூடல் மண்டபத்தில் சட்டத்தரணியும் சிறந்த இலக்கியவாதியுமான ஜனாப்.சபறுள்ளாஹ் அவர்களின் 'பிரேதப் பரிசோதனை' எனும் வீரியம் மிக்க கவித் தொகுப்பு நூலானது தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சில நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகள்:தமிழ் ஆர்வலர்கள்:மூத்த இலக்கிய வாதிகள்:அரசியல் வாதிகள்:சட்டத்தரணிகள் என பல பல மட்டங்களில் உள்ளோர் கலந்து கொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதில் குறிப்பிடத்தக்க முக்கியமான விடயம் என்னவென்றால் 'பிரேதப் பரிசோதனை' எனும் கவித் தொகுப்பு வெளியீட்டுக்கு வருகை தந்திருந்தோரில் அனேகமானோர் கிண்ணியா தவிர்ந்த ஏனைய வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தோர்களாகவே காணப்பட்டார்கள்.விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மாத்திரமே கிண்ணியா ஆர்வலர்கள் வந்திருந்தார்கள் என்பது கவலைக்குரிய விடயம். பல்லாயிரக் கணக்கான அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கிண்ணியா மக்களையும் ஆயிரக்கணக்;கான இலக்கிய வாதிகள் மற்றும் கற்றறிந்தோர் என எமக்குள்ளே நாம் வைத்துக் கொண்டு வெளியில் எம்மைப் பற்றி பெருமையாகப் பீற்றிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.ஆனால் இவ்வாறான இலக்கிய வெளியீடுகள் இலக்கிய மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட கருத்தாடல்கள் என்றால் அவற்றுக்கு சமுகமளிக்கத் தவறி விடுகின்றோம்.

இவ்வாறான முக்கியமான விடயங்களில் அசிரத்தையாக இருக்கும் நாம் சமுகத்துக்காகவோ தாய்மொழி தமிழுக்காகவோ இவ்வுலகில் எதனை விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.எம்மவரின் பங்கு எங்கோ ஒரு மூலையில் தொங்கிக் கிடக்கிறது.பரிதாபம் இது.உலகில் பல்வேறு இடங்களில் இலக்கியத்திற்கென்றே தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. பல்வேறு விழாக்கள்இˌதமிழ் சொற்பொழிவுகள்இ இலக்கிய தமிழாராய்ச்சி மாநாடுகள் என இன்னோரன்ன தமிழ் முன்னெடுப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழை வளர்க்க ஆர்வம் காட்டும் அவர்கள் முன்னிலையில் நாங்கள் எங்கோ?

எனவே நாம் இங்கு அறிந்தும் தெரிந்தும புரிந்தும் கொள்ள வேண்டிய விடயம் இனபத்தமிழ்:இனிய தமிழ் பேசும் மாக்கள் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இலக்கிய வட்டங்களை துயில் எழச் செய்து தூசு தட்டும் மறுமர்ச்சிக்கான சமூகத்தை உருவாக்குவோம்.இலக்கியவாதிகளுக்கு ஆர்வங்களை வழங்கி ஊக்குவிப்புக்களை ரோஜா செடிகளுக்கு ஊற்றும் தண்ணீராக மாற்றி அவர்கள் மனதில் சந்தோசங்களை விரிந்தாடச் செய்வதன் மூலம் புத்திலக்கியம் படைக்க ஊன்று கோலாய் அமைவோம்.

எங்களைப் பார்த்துத்தான் எமது எதிர்கால வழித்தோன்றல்களும் காலடியினை நகர்த்துகிறார்கள். எமது செயற்பாடுகள் முன்மாதிரியாக இருந்தாலேயன்றி எதிர்காலச் சமுதாயம் விழிப்புணர்வுள்ள மிக்க ஆளுமை கொண்ட சிறந்த ஆழுகைக்குட்பட்ட சமுதாயமாக மிளிர தவறிவிடும்.

எனவே நல்லுள்ளம் கொண்டு இலக்கியவாதிகளுக்கான ஊக்குவிப்புக்ளை பொருத்தமான முறையிலும் பொருத்தமான வேளையிலும் வழங்கி எமது தாய்மொழி திறம்பட வாழ வழி சமைப்போம். எக்காலத்திலும் அக்கால மக்களின் வாழ்க்கை வரலாறுகள் இலக்கியங்கள் மூலம் பாதுகாக்கப்பட துணை புரிவோம். இலக்கியம் ஒரு போதும் எம்மால் இழந்து விடப்படாமல் வளர்த்துவிடப் பட வேண்டும் என்பதில் குறிக்கோளாய் இருப்போம்..

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'

ஆசிரியர்

கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 211 guests online


Kinniya.NET