வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

ஆயுளில் ஒரு நாள்!

 


அதிகாலை:

பகல் இரவுக்கு வெள்ளையடிக்கும்

இன்பக் காட்சி!

 

சூரியோதயம்:

சுருண்டு படுத்துக் கொண்டிருந்த

பூமாதேவி - போர்வையை விலக்கும்

வில்லங்கக் காட்சி - அதை

எட்டிப்பார்க்கும் திங்கள்!

 

நற்பகல்:

சூரியன் பகலைக் கலைக்க

படாதபாடுபட்டுக் கொண்டிருந்தான்!

 

சூரியஸ்தமனம்:

இரவோடுனக்கு ஏனிந்த ஒவ்வாமை?

மலையிடுக்கிலே ஒலிந்து கொள்கிறாய்!

 

இரவு:

பகலைச் சுட்டுச் சுட்டு

கரிக்கட்டையாய் ஆக்கினான் சூரியன்!

 

இரவு-பகல்:

கறுமையும் வெண்மையும்

துரத்தி விளையாடும் “மெகா” தொடர்!

 

இதுதான் நம் ஆயுளின் ஊர்வலம்;

ஊர்ந்து செல்லும் மறுமைப் பயணத்தில்

ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்கிறன

நம் ஆயுளின் ஆரம்ப நாற்கள்!



முகமட் லாபிர்


Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19354
மொத்த பார்வைகள்...2076278

Currently are 498 guests online


Kinniya.NET