வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கிராமத்துச் சுவையும் கிளு கிளுப்பும்

 ki

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
கிண்ணியா 07

கிராமங்களில் கறுப்புக்கும் சிகப்புக்கும் இடைப்பட்ட நிறம் மயில நிறம் என்று கிராமிய வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்நிறம் மயிலக் குட்டி மயில நாம்பன் என்ற அடைமொழிகளால் பெண்களையும் ஆண்களையும் நிறத்கைகொண்டு வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மயில நிறம் கிராமங்களில் மிகவும் பெயர் பெற்றது. ஏனெனில் கிராமத்துச் சூழலில் வாழுகின்ற சிவந்த நிறத்து மேணியை உடையவர்கள் கலாப்போக்கில் மயில நிறத்துக்கு மாறிவிடுவர் வெட்ட வெளியிலும் வயற் பரப்பிலும் வேளை செய்வதால் இந்த நிற மாற்றம் தானாகவே ஏற்படுகிறது. அதிக வெயிலும் பனியும் இந்த நிற மாற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.

இவ்வாறு நிற மாற்றம் பெற்றவள்தான் பரீனா. எடுப்பான முக அமைப்பும் அவளது வாளிப்பான தோற்றமும் எவரையும் இலகுவில் கிறங்கடிக்கக்கூடியது. அவளை அவளது மாமன் மகன் பரீஸ் மனதார விரும்பினான். அவளும் விரும்பினாள். இந்த விடயத்திற்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டி கலியாணத்துக்கு நாளும் குறித்தனர்.

இத்தருனத்தில் துடிப்பும் துடுக்குத்தனமும் நிறைந்த பரீஸ் பரீனாவை வேணும் என்றே சீன்டி பார்ப்பதற்காக வேண்;டி பின்வருமாறு பாடுகிறான்.
' தாலடி பீலடி மாமி
மாமிட பொட்ட கறுப்பி
எனக்கு வேனாம் அந்த
அல் கராமி'

இதைக்கேட்டு கொதிப்படைந்துபோன பரீனா ஆத்திரமேலிட்டாள்; அழுதே விட்டாள்; அவளால் இருப்புக் கொள்ள முடியாமல் இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அந்தரப்பட்ட அவள் தன்னைக் கறுப்பு என்று குறிப்பிட்டு அவன் ஒதுக்கி விட்டதாக நினைத்து அவனுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்து அது அவனை சென்றடையச் செய்கிறாள்.

' கோணலாம் மானலாம் மாமா
மாமாட பொடியன் வம்பன்
எனக்கு வேணாம் அந்தக்
கொம்பன்'

மேற்கூறப்பட்ட கிராமியக் கவி இணைந்த இரு உள்ளங்களில் எழுந்த ஊடலின் காரணமாக பாடப்பட்டதாகும்.

பின்வரும் கிராமியக் கவி உள்ளத்தால் ஒன்று பட்ட இரு இதயங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

'மாட்டு வண்டி
கட்டிக்கிட்டு
மன்னி மன்னி
போற மச்சான்
ஊட்டுக்கு வந்தியென்டால்
குளிந்த தண்ணி
நான் தருவேன்

குளிந்த தண்ணி
வேனுமெடி
கொமரி ஒந்தன் கையாலே
அள்ளி நானும்
பருகிடவே
ஆசையோடு காத்திருக்கேன்'

சேனைக் காவலில் நின்றிருக்கும் ஒரு இளைஞனின் மன ஏக்கத்தை பின்வரும் பாடல் விளக்குகிறது.

காவலிலே நின்றிருக்கேன்
கன நாளா தான் இருக்கேன்
கோவம் பழ நெறத்தழகி
ஒன் சேதி ஒன்னும் தெரியலேயே

கதிர்கொடல
காய் வணக்கம்
ஒன்னக் காண வர நேரமில்லே

பசும் பால காச்சி வைச்சி
பச்சை அரிசிச் சோறாக்கி
பாவ ஒன்ன
நெனச்சி உட்டன்
என் பசியெல்லாம்
போச்சுதடி

புள்ளைய பாக்க
கொள்ளையாக ஆசையடி

செல்ல மொழி
கேட்ட நானும்
சீக்கிரமா வந்திடுவேன்
சித்திரமே
கலங்கி நீயும்
சிதைந்துதான் போகாதே!

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 215 guests online


Kinniya.NET