வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

நூல் அறிமுகம்

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

 PTazeez2தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது.

 

உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

PTazeez 

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 20 வயதிலிருந்தே கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசித்தவர். பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக கடமை புரியும் இவர்இ வை.எம்.எம்.ஏஇ ஆர்.டீ.எஸ்இ இளைஞர் சேவைகள் மன்றம்இ சர்வோதயம் போன்றவற்றிற்கு தலைவராகவும்இ ஜாவா ஜும்மா மஸ்ஜித்இ ஸஹீஹுல் முஸ்லிம் சங்கம்இ வாசகர் வட்டம்இ போன்றவற்றுக்கு செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

 

நிகழ் காலம்: சுயம் தேடி சுதந்திரமாய்ப் பயணிக்கட்டும்

nh

ஆர்.நிரோஸாத்(M.Phil) -அக்குறனை

இலக்கிய இலக்கினை வாழ்வியலோடு கலந்து ஒட்டு மொத்த அழகியலையும் அதில் இருத்தி வைத்ததாக 'நிகழ்காலம்' இலக்கிய இதழின் வருகையானது இலக்கியத்தின் ஆரோக்கியத்திற்கு மென்மேலும் ஊட்டமளித்திருக்கின்றது என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் சொல்லதற்கு இடமில்லை. ஆதலால் நிகழ்காலம் ஆசிரியரின் கையில் பெரியதாய் ஒரு வைர மோதிரம்.

 

கிண்ணியாவின் மறைந்துபோன கலாசாரச் சுவடுகள் - நூல் மதிப்புரை

ஆசிரியர் : S.A முத்தலிப் ( ஓய்வு பெற்ற அதிபர்) தமிழ்பாட ஆசிரியர்

இன்று மறுமலர்ச்சி கண்டு மகிமையாகத்திகளும் கிண்ணியாத்தாயின் கலாசாரச் சுவடுகளை கவனத்திற் கொண்டு பண்டைய கிண்ணியா மக்களின் பண்பாட்டு நாகரிக நடைமுறைகளை அணுவும் பிசகாது அப்படியே எடுத்துக்காட்டுகின்றார். கிண்ணியாவின் மறைந்துபோன கலாசாரச் சுவடுகள் நூலின் ஆசிரியரான ஜனாப் முத்தலிப் ஆசிரியர் அவர்கள். ஆசிரியர் அவர்கட்கு முதற்கண் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மாண்புறும் மாநபி கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

 

Captureவெலிகம ரிம்ஸா முஹம்மத்

மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்களாவார். இவர் ஏற்கனவே உணர்வூட்டும் முத்துக்கள்இ அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள்இ அஸீஸ் கவிதைகள் மேலதிக இணைப்புஇ அஸீஸ் கவிதைகள் தாலாட்டுப் பாடல்கள்இ அஸீஸ் கவிதைகள் கிராமியக் கவிகள் ஆகிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதி எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி புகழ்பாடும் கவிதைகளால் நிறைந்துள்ளது. இந்த கவிதை நூலானது 81 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்கள் ''எனது உடலுக்குள் இருக்கும் உயிரே நீங்கள் தாம் நாயகமே! நபி நாயகமே! என வியந்து போற்றிப் பாவாரஞ் சூட்டிப் பரவச மெய்துகின்றார் கவிஞர் பி.ரி. அஸீஸ். அவர் ஓத முனைந்துள்ள பாக்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் அடியாரும் அவனது ஹபீபுமாகிய அண்ணலார் மீதான புகழ்ச்சி மணம் வீசிக் கொண்டே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும்இ அன்னாரின் மாண்மியம் பற்றியும் அப் பாக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன'' என்கிறார்.

சிறப்புக்குரிய நபியவர்கள் கண்ணியம்இ மரியாதைஇ உயர்வு என பல இயல்புகளை தன்னகத்தே கொண்ட ஒரு மாபெரும் தலைவர். அத்தோடு அன்பு வெள்ளத்தின் உற்றும் அவர்களே. இத்தகைய நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லிஇ புகழ் பாடுவதென்பது பாராட்டப்படக்கூடிய விடயமாகும் என்கிறார் டாக்டர் ஹில்மி மகரூப் அவர்கள்.

 

பக்கம் 4 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19354
மொத்த பார்வைகள்...2076278

Currently are 514 guests online


Kinniya.NET