வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

நூல் அறிமுகம்

குழந்தைக் கவியின் சிறுவர் பாடல்கள்..!

kulanthaikkaviஇலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு எல்லோரையும் வியக்கத்தக்கவாரு குழந்தைப் பாடல்களை சிறுவர் உலகத்துக்கு விருந்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கிண்ணியா மண்ணிலும் தரம் வாய்ந்த சிறுவர் இலக்கிய வாதிகளின் வரிசையில் கவிஞர் குழந்தைக் கவி எம்.ரீ.சஜாத்தும் தனது செல்லமே என்னும் இச்சிறுவர் பாடல் தொகுதியின் ஊடாக அவரது பெயரையம் புதிய முகத்துடன் பதிவு செய்திருப்பது மகிழ்வினைத் தருகிறது.

 

மாண்புறும் மாநபி கவி நூல் பற்றிய ஓர் இரசணைக் குறிப்பு..

aaa

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்பு, புகழ், மாண்பியங்களை அழகுற எடுத்துக் கூறுகின்ற கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி கவிநூல் காலத்தின் இன்றைய தேவையாகும்.

 

கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் எழுதிய 'உதயம்' சிறுவர் பாடல்கள் பற்றிய இரசனைக் குறிப்பு

PT-Azeez-Front

பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியில் வசிக்கும் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் அவர்களின் எட்டாவது கவி நூலாக வெளி வந்திருக்கிறது உதயம் சிறுவர் பாடல்கள்.

2012ம் ஆண்டு சிறுவர் பாடல்கள் எனும் கவி நூலுக்கு கிழக்கு மாகாணத்தில் சிறந்த நூலுக்கான பரிசிலை பெற்றுக்கொண்ட இவர் ஒரு குழந்தை மனமிக்கவர். இதனால் குழந்தைகளின் உள உணர்வுகளை மிக நன்றாக தெரிந்து கொண்டு பாடல் எழுதி வருகின்றார். இது இந்நூலின் மூலம் மிகத் தெளிவாக தெரிகின்றது.

 

முட்பாதையில் பயணிக்கும் வியர்த்தொழுகும் மழைப்பொழுது..

vomp

ஈரலிப்பைச் சுமந்தபடி வானலையும் மென்முகில்கள் கறுத்தொடுங்கித் தூறலாகிப் பின் சாரலாகிப் பூமி குளிர்த்துமோர் மழைப் பொழுது. சில்லிடும் அம்மழைப் பொழுதினை இளஞ் சூட்டுக் குருதி வெப்பநிலையும் போர்வையாய் மெல்லியமயிர் பூத்த தோலுந்தாங்கிய ஓர் மனிதஉயிரி எங்கனம் எதிர்கொள்ளும்? தன்னுடலுக்கும் புறச்சூழலுக்கம் இடையேயான வெப்பச் சீராக்கத்திற்காய் உரோமங்களை நிமிர்த்தியபடி நடுநடுங்கிக் கொள்ளும். இதுதானே காலங்காலமாய் நாம் உணரும் உயிரியல் யதார்த்தம்.

 

ஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்!

 Aahakkuraintha-patsamஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்தில் பேரின வாத ஒடுக்கு முறை உச்சம் பெறத் தொடங்கியது தமிழ் தேசிய உணர்ச்சியால் உந்தப்பட்ட கவிஞர்கள் பலர் உருவாகினர்.

80களில் இருந்து ஈழத்து கவிதைப் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய வாதம், பெண்ணிலை வாதம், வாழ்வியல் ஒடுக்கு முறையினால் ஏற்பட்ட வாதம் என பல கூறுகளை முன் வைத்து மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லலாம்.

பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் ஆண், பெண் முரண் ஆணாதிக்கம், சீதனம், கல்வி கற்கப் போதல் தடை, இன்னும் பாலியல் வல்லுறவு போன்ற கருப்பொருளாக கவிதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

 

பக்கம் 6 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19354
மொத்த பார்வைகள்...2076278

Currently are 468 guests online


Kinniya.NET